என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர், யான்சென் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கவுகாத்தி:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. செனுரன் முத்துசாமி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது முதல் டெஸ்ட் செஞ்சூரியை பதிவு செய்தார். முத்துசாமி 109 ரன்னும், மார்கோ யான்சென் 93 ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 7 ரன்னுடனும், கே.எல்ராகுல் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. 480 ரன்கள் பின்தங்கி, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது.
இருவரும் நிதானமாக ஆடினார்கள். 18.5 ஓவரில் 50 ரன்னை தொட்டது. அப்போது ஜெய்ஸ்வால் 36 ரன்னும், ராகுல் 13 ரன்னும் எடுத்து இருந்தனர்.
அதற்கு அடுத்த சில நிமிடங்களில் ராகுல் ஆட்டம் இழந்தார். அவர் 22 ரன்னில் கேசவ் மகராஜ் பந்தில் பெவிலியன் திரும்பினார்.
அப்போது ஸ்கோர் 65 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், சாய்சுதர்சன் ஜோடி சேர்ந்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 58 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் சாய் சுதர்சன் அதிரடியாக ஆட முயற்சித்து 15 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜூரல் 11 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார்.
இதனால் 3-வது நாள் தேநீர் இடைவேளை வரை இந்தியா 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இடைவேளை முடிந்து முதல் ஓவரில் அதிரடியாக விளையாட முயற்சித்து ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர், யான்சென் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- இந்தியாவில் எனக்கு கிடைத்த வாய்ப்புக்காக நன்றி தெரிவிக்கிறேன்.
- முதல் இன்னிங்சில் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது சிறந்ததாக இருந்தது.
கவுகாத்தி:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த தவறி விட்டனர்.
முதல்நாள் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்து இருந்தது. நேற்றைய 2-வது நாளில் எஞ்சிய 3 விக்கெட்டுகளை எளிதில் கைப்பற்ற தவறி விட்டனர். இதனால் 489 ரன்களை அந்த அணி குவித்து விட்டது.
இந்திய பந்து வீச்சாளர்களுக்கு செனுரான் முத்துசாமி சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவருக்கு யான்சென் மிகவும் உதவியாக இருந்தார். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட முத்துசாமி 109 ரன்கள் எடுத்தார். தனது 8-வது டெஸ்டில் விளையாடும் அவர் முதல் சதத்தை பதிவு செய்தார். கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக 89 ரன் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
முதல் சதம் அடித்தது குறித்து முத்துசாமி நேற்றைய போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல் சதத்தை பதிவு செய்தது அற்புதமான அனுபவமாகும். 2019-ல் நாங்கள் இந்தியாவில் டெஸ்ட் தொடரை மோசமாக இழந்த பிறகு நான் உள்நாட்டு போட்டியில் விளையாடி தேசிய அணியில் மீண்டும் இடம் பிடித்தேன்.
இந்தியாவில் எனக்கு கிடைத்த வாய்ப்புக்காக நன்றி தெரிவிக்கிறேன். முதல் இன்னிங்சில் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது சிறந்ததாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முத்துசாமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை 2-வது டெஸ்டில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் தொட ரில் அவர் தொடர் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 9-வது வரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் யான்சென் களமிறங்கினார்.
- யான்சென் 7 சிக்சருடன் 93 ரன்கள் நொறுக்கினார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில்
9-வது வரிசையில் களம் புகுந்த தென்ஆப்பிரிக்க வீரர் யான்சென் 7 சிக்சருடன் 93 ரன்கள் நொறுக்கினார். 9 மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த சாதனையாளர் பட்டியலில் யான்சென் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
நியூசிலாந்தின் டிம் சவுதி 2008-ம் ஆண்டு நேப்பியரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 9 சிக்சர் அடித்ததே இந்த வகையில் சாதனையாக உள்ளது.
ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விரட்டிய தென்ஆப்பிரிக்க வீரர்கள் டிவில்லியர்ஸ், குயின்டான் டி காக் (இருவரும் தலா 7 சிக்சர்) ஆகியோரின் சாதனையை யான்சென் சமன் செய்தார்.
இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனைக்கு யான்சென் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் 6 சிக்சர் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது.
- முதலில் விளையாடிய நேபாளம் அணி 114 ரன்கள் மட்டுமே அடித்தது.
- இந்தியா 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பார்வையற்றோர் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
முதலில் விளையாடிய நேபாளம் அணி 5 வி்க்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே அடித்தது. நேபாளம் அணியால் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. பின்னர் இந்திய அணி 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. புலா சரேன் இந்திய அணி சார்பில் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
உலக கோப்பையை வாங்கிய பார்வையற்றோருக்கான இந்திய மகளிர் அணி கேப்டன் ரோகித் சர்மா ஸ்டைலில் கொண்டாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 19 ஓவரில் 126 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 74 ரன்னிலும், பர்ஹான் 63 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் பகர் ஜமான் 10 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஜிம்பாப்வே களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் விக்கெட்கள் வீழ்ந்தன. உஸ்மான் தரிக் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
ஜிம்பாப்வே அணியின் ரியான் பர்ல் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்து 67 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 19 ஓவரில் 126 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 69 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் தரிக் 4 விக்கெட்டும், முகமது நவாஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ரைசிங்ஸ்டார் ஆசிய கோப்பையின் இறுதி ஆட்டம் தோகாவில் இன்று நடந்தது.
- சூப்பர் ஓவரில் வென்ற பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.
தோகா:
வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த வங்கதேசம், இலங்கை அணியும், பி பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் வங்கதேசம் சூப்பர் ஓவரில் இந்தியாவை வீழ்த்தியது. 2வது அரையிறுதியில் பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்தியது.
இந்நிலையில், ஆசிய கோப்பை இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 125 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணி 125 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. முதல் பந்தில் ஒரு ரன் கிடைத்தது. 2வது பந்தில் விக்கெட் வீழ்ந்தது. 3வது பந்தில் 5 வைடுகள் கிடைத்தன. 4வது பந்தில் விக்கெட் வீழ்ந்தது.
இதையடுத்து, சூப்பர் ஓவரில் 7 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 4 பந்தில் 7 ரன் அடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
- முஷ்பிகுர் ரஹீம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- தைஜூல் இஸ்லாம் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மிர்புர்:
அயர்லாந்து கிரிக்கெட் அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்புரில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
வங்கதேசம் முதல் இன்னிங்சில் 476 ரன்கள் எடுத்தது.
அயர்லாந்து முதல் இன்னிங்சில் 265 ரன்கள் எடுத்தன.
211 ரன் முன்னிலை பெற்ற வங்கதேசம் 2-வது இன்னிங்சில் 69 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 509 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 113.3 ஓவரில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் 217 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேசம் டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.
முஷ்பிகுர் ரஹிம் ஆட்ட நாயகனாகவும், தைஜூல் இஸ்லாம் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
- இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளனர்.
- சுப்மன் கில் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் விளையாடவில்லை.
தென்ஆப்பிரி்க்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.
சுப்மன் கில் விளையாடாததால் ரோகித் சர்மா உடன் இன்னொரு வீரர் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டியுள்ளது. தற்போது அந்த வீரர் யார்? என்பதுதான் கேள்விக்குறி.
டெஸ்ட் அணியில் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களம் இறங்கி, சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், ஒருநாள் மற்றும் டி20 அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் ரோகித் சர்மா உடன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது. வலது, இடது கை பேட்ஸ்மேன்கள் காம்பினேசன் ஒர்க்அவுட் ஆகும் என நினைக்கலாம்.
அதேவேளையில் உள்ளூர் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி உள்ளார். இவரும் தொடக்க வீரராக களம் இறங்கக் கூடியவர். இவரும் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
அதேவேளையில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கியவர்தான். தற்போது மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி வருகிறார். ஒருவேளை ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக களம் இறங்கினால், அவர் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார். அப்படி என்றால் கே.எல். ராகுல் ரோகித் சர்மா உடன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
ரோகித் சர்மா- ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா- ருதுராஜ் கெய்க்வாட், ரோகித் சர்மா- கே.எல். ராகுல் இதில் எந்த ஜோடி தெடாக்க ஜோடியாக களம் இறங்கும் என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.
15 பேர் கொண்ட இந்திய அணி:-
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜுரல்.
- ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் இடம் பிடித்துள்ளார்.
- ஜெய்ஸ்வாலுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த உடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது, ஒருநாள் அணி கேப்டனான சுப்மன் கில்லுக்கு கழுத்தில் வலி ஏற்பட்டது. இதனால் முதல் போட்டியில் அதன்பின் பேட்டிங் செய்யவில்லை. இரண்டாவது போட்டியிலிருந்து விலகினார்.
ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் விலகினார். இதனால் ஒருநாள் அணிக்கு வேறு கேப்டனை நியமிக்க வேண்டிய நிர்பந்தம் BCCI-க்கு ஏற்பட்டது. ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் உள்ளிட்டோர் கேப்டன் வரிசையில் இருந்தனர்.
இந்த நிலையில் கே.எல். ராகுல் கேப்டனாக செயல்படுவார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. மேலும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. அதில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பிடித்துள்ளனர். ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இடது கை அதிரடி பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வாலுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி விவரம்:-
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜுரல்.
முதல் போட்டி 30-ந்தேதி ராஞ்சியிலும், 2ஆவது போட்டி டிசம்பர் 3-ந்தேதி ராய்ப்பூரிலும், 6-ந்தேதி விசாகப்பட்டினத்திலும் நடக்கிறது.
- ஸ்மிருதி மந்தனா- பலாஷ் முச்சல் திருமணம் இன்று நடைபெற இருந்தது.
- ஸ்மிருதி மந்தனாவின் தந்தை தொடர் சிகிச்சை பெற்று வருவதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீரர் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா- பலாஷ் முச்சல் திருமணம் இன்று நடைபெற இருந்தது.
இந்நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர் சிகிச்சை பெற்று வருவதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீநிவாஸ் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முத்துசாமி 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- யான்சன் 93 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 49 ரன்களும் பவுமா 41 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முத்துசாமி 25 ரன்களுடனும், வெரெய்ன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. பொறுப்புடன் விளையாடிய முத்துசாமி- வெரெய்ன் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடியது.
நிதானமாக விளையாடிய முத்துசாமி அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுறையில் நிதானமாக விளையாடிய வெரெய்ன் 45 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து முத்துசாமி உடன் யான்சன் ஜோடி சேர்ந்தார்.
இதையடுத்து முத்துசாமி- யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய முத்துசாமி சதம் விளாசினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய யான்சன் அரைசதம் அடித்தார்.
முத்துசாமி 109 ரன்கள் அடித்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹார்மர் 5 ரன்னில் வெளியேறினார்.
யான்சன் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தார். தென்ஆப்பிரிக்கா 9ஆவது விக்கெட்டை இழக்கும்போது, 462 ரன்கள் எடுத்திருந்தது, கடைசி விக்கெட்டுக்கு யான்சன் உடன் மகாராஜ் ஜோடி சேர்ந்தார்.
யான்சன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியில் அனுப்பினார். இவரும் சதத்தை நோக்கி முன்னேறினார். 93 ரன் எடுத்திருக்கும்போது குல்தீப் யாதவ் பந்தில் போல்டானார். இதனால் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. மகாராஜ் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும் பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் விளையாடிய நேபாளம் அணியால் 114 ரன்கள் மட்டுமே அடிகக் முடிந்தது.
- இந்தியா 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பார்வையற்றோர் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
முதலில் விளையாடிய நேபாளம் அணியால் 5 வி்க்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது, நேபாளம் அணியால் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. பின்னர் இந்திய அணி 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. புலா சரேன் இந்திய அணி சார்பில் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது. நேபாளம் பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது.
இலங்கை அணி அமெரிக்காவை மட்டுமே வீழ்த்தியிருந்தது, பாகிஸ்தானின் மெரீன் அலி 6 போட்டிகளில் 600 ரன்கள் குவித்தார. இலங்கைக்கு எதிராக 78 பந்தில் 230 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 133 ரன்களும் விளாசியிருந்தார்.






