என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2வது போட்டியிலும் வெற்றி: அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய வங்கதேசம்
    X

    2வது போட்டியிலும் வெற்றி: அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய வங்கதேசம்

    • முஷ்பிகுர் ரஹீம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
    • தைஜூல் இஸ்லாம் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    மிர்புர்:

    அயர்லாந்து கிரிக்கெட் அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்புரில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.

    வங்கதேசம் முதல் இன்னிங்சில் 476 ரன்கள் எடுத்தது.

    அயர்லாந்து முதல் இன்னிங்சில் 265 ரன்கள் எடுத்தன.

    211 ரன் முன்னிலை பெற்ற வங்கதேசம் 2-வது இன்னிங்சில் 69 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதையடுத்து, 509 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 113.3 ஓவரில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதன்மூலம் 217 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேசம் டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.

    முஷ்பிகுர் ரஹிம் ஆட்ட நாயகனாகவும், தைஜூல் இஸ்லாம் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

    Next Story
    ×