என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரோகித் சர்மா உடன் களம் இறங்குவது யார்? ஜெய்ஸ்வால்- ருதுராஜ் கெய்க்வாட் இடையே போட்டி..!
- இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளனர்.
- சுப்மன் கில் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் விளையாடவில்லை.
தென்ஆப்பிரி்க்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.
சுப்மன் கில் விளையாடாததால் ரோகித் சர்மா உடன் இன்னொரு வீரர் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டியுள்ளது. தற்போது அந்த வீரர் யார்? என்பதுதான் கேள்விக்குறி.
டெஸ்ட் அணியில் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களம் இறங்கி, சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், ஒருநாள் மற்றும் டி20 அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் ரோகித் சர்மா உடன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது. வலது, இடது கை பேட்ஸ்மேன்கள் காம்பினேசன் ஒர்க்அவுட் ஆகும் என நினைக்கலாம்.
அதேவேளையில் உள்ளூர் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி உள்ளார். இவரும் தொடக்க வீரராக களம் இறங்கக் கூடியவர். இவரும் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
அதேவேளையில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கியவர்தான். தற்போது மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி வருகிறார். ஒருவேளை ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக களம் இறங்கினால், அவர் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார். அப்படி என்றால் கே.எல். ராகுல் ரோகித் சர்மா உடன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
ரோகித் சர்மா- ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா- ருதுராஜ் கெய்க்வாட், ரோகித் சர்மா- கே.எல். ராகுல் இதில் எந்த ஜோடி தெடாக்க ஜோடியாக களம் இறங்கும் என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.
15 பேர் கொண்ட இந்திய அணி:-
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜுரல்.






