என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பும் விதத்தில் நிறைய மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
    • உலக கோப்பையில் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

    ஜோகன்னஸ்பர்க்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

    ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித், கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் லோகேஷ் ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் விதம் மாறாது. நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பும் விதத்தில் நிறைய மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அணியில் நிறைய புதுமுக வீரர்கள் உள்ளனர். உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா அல்லது கோலி விளையாடிய விதத்தில் அவர்கள் விளையாடுவார்கள் என்று இப்போது எதிர்பார்ப்பது சரியானதல்ல.

    அவர்களுக்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் வசதியாக உணர வேண்டும். எனவே இளம் வீரர்களுக்கு கூடுதல் அழுத்தம் எதுவும் இல்லை. நாங்கள் உலக கோப்பையில் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

    தென் ஆப்பிரிக்க சூழ்நிலையில் இந்திய அணிக்கு எந்த மாதிரியான விளையாட்டு பயன் அளிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் தங்களை உட்படுத்தி கொள்ள வேண்டும்.

    இளம் வீரர்களின் ஆட்டம் போதுமானதாக உள்ளது என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வழங்குவது எனக்கு முக்கியம். முடிவுகளை பற்றி கவலைப்படாமல் அவர்கள் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட வேண்டும்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    • போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது.
    • காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை.

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது.

    இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

    2-வது ஆட்டத்தில் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

    இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளும் 3 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    இந்த போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது. சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. உடல் நல பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை கவனிக்கும் பொருட்டு வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விலகி விட்டார். அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியில் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், கேப்டன் லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிங்கு சிங்கும், பந்து வீச்சில் முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவும் நல்ல நிலையில் உள்ளனர்.

     மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி இளம் சிவப்பு (பிங்க்) நிற சீருடை அணிந்து களம் காண்கிறது. ஸ்டேடியமும் பெரும்பாலும் 'பிங்க்' நிறத்தில் காட்சியளிக்கும். தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் ரீஜா ஹென்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம், வான்டெர் டஸன், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லரும், பந்து வீச்சில் லிசாத் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி, பெலுக்வாயோ, கேஷவ் மகராஜூம் வலுசேர்க்கிறார்கள்.

    அண்மையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு இந்திய அணி விளையாடும் முதல் ஒருநாள் போட்டி தொடர் இதுவாகும். ஒருநாள் போட்டி அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முனைப்பில் உள்ள இந்தியா தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிரம் காட்டும். அதேநேரத்தில் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த தென் ஆப்பிரிக்கா வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    • ரோகித் சர்மா கேப்டன் பதவி பறிபோனதையடுத்து சிஎஸ்கே நிர்வாகம் அவருக்கு புகழாரம் சூட்டி ஒரு பதிவு வெளியிட்டது.
    • அந்த பதிவிற்கு ரோகித் மனைவி ரித்திகா சஜ்தே கமெண்ட் செய்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வந்தவர் ரோகித் சர்மா. இவர் தலைமையிலான மும்பை அணி 5 முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது.

    இதனிடையே, மும்பை அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்ட்யா 2022-ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மாறினார். அவரை சமீபத்தில் குஜராத் அணியிடமிருந்து அதிக தொகைக்கு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார்.

    இந்த சூழ்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் முடிவுக்கு வந்துள்ளது. அதேவேளை, கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது மும்பை அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமூகவலைதள பக்கத்தில் ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஹர்திக் பாண்ட்யாவை விமர்சித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ரோகித் சர்மா கேப்டன் பதவி பறிபோனதையடுத்து சிஎஸ்கே நிர்வாகம் அவருக்கு புகழாரம் சூட்டி ஒரு பதிவு வெளியிட்டது. அந்த பதிவிற்கு ரோகித் மனைவி ரித்திகா சஜ்தே கமெண்ட் செய்துள்ளார். அதில் மஞ்சல் நிற இதய எமொஜியை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    முன்னதாக சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்திரநாத் எக்ஸ் தள பதிவில் ரோகித் சர்மாவை சிஎஸ்கே ஜெர்சியில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நீக்கியது.
    • ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்தியாவில் 17-வது ஐபிஎல் தொடர் வரும் 2024-ம் ஆண்டு நடக்க இருக்கிறது. ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலமானது துபாயில் வரும் 19-ம் தேதி நடக்க இருக்கிறது.

    இந்த ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியானது ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது.இது குறித்து சீனியர் வீரர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் ரோகித் சர்மா என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மாவின் 10 ஆண்டுகால கேப்டன்சி என்பது ஒரு சகாப்தத்தின் முடிவு. தொடக்க வீரராகோ அல்லது மிடில் ஆர்டரிலோ தன்னால் என்ன முடியுமோ அதனை அணிக்காக செய்து கொடுத்தவர் ரோகித் சர்மா. குறிப்பிடத்தக்க வகையில், 2013-ம் ஆண்டு, முதல் முறையாக ஐபிஎல் கேப்டனாக ரோகித் வெற்றி பெற்றார். பின்னர் 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மேலும் நான்கு டிராபிகளை வென்றார்.

    ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டிராபிகளை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்ந்த நிலையில், எம்எஸ் டோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக டிராபியை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சமன் செய்தது. 10 ஆண்டுகளில் 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார். மிகவும் வெற்றிகரமான கேப்டன். போட்டியை தன்மையை பொறுத்து அணியை நன்றாக வழிநடத்தினார். எப்போதும் தன்னை விட அணியை முன்னிலையில் வைத்திருந்தார்.

    இவ்வாறு சோப்ரா கூறியுள்ளார்.

    • இப்போதும் இந்திய அணியில் கேப்டன் என்ற பெயரை கேட்டால் டோனி தான் அனைவரது நினைவுக்கு வருவார்.
    • டோனி தலைமையிலான இந்திய அணி 2011 உலகக் கோப்பையை 28 வருடங்கள் கழித்து இந்தியா வெற்றி பெற்றது.

    ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தோல்வியை சந்தித்து 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டது. அதனால் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் மிகுந்த ரோகித் சர்மா கூட இந்தியாவுக்கு ஐசிசி கோப்பையை வென்று கொடுக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே சமயம் 2023 உலகக் கோப்பை தோல்வியால் பல ரசிகர்கள் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியை சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

    சொந்த மண்ணில் டோனி தலைமையிலான இந்திய அணி 2011 உலகக் கோப்பையை 28 வருடங்கள் கழித்து இந்தியா வெற்றி பெற்றது. அதன் பின் 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அவர் உலகிலேயே 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்தார். அந்த வகையில் இந்தியாவுக்கு மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் ஐபிஎல் தொடரிலும் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில் 2017-ல் கேப்டனாக விடை பெற்றாலும் இப்போதும் இந்திய அணியில் கேப்டன் என்ற பெயரை கேட்டால் டோனி தான் அனைவரது நினைவுக்கு வருவார் என்று கேஎல் ராகுல் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எம்எஸ் டோனியுடன் யாரையும் ஒப்பிட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இப்போதும் எங்களுடைய அணியில் லீடர், கேப்டன் என்ற வார்த்தைகளை சொல்லி பேசினால் எம்எஸ் டோனி தான் எங்களுடைய மனதில் முதலாவதாக வருவார்.

    என்று ராகுல் கூறினார்.

    • ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
    • ஒருநாள் தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில், ஒருநாள் தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார். அவரது தந்தைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் உடனிருந்து பார்த்து கொள்வதாலும் இந்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆகாஷ்தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இவர் ஐபிஎல் போட்டியில் விளையாடி உள்ளார். 7 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    • ரோகித் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தை UnFollow செய்து வருகின்றனர்.
    • சில மணி நேரங்களில் இன்ஸ்டாகிராமில் சுமார் 1.5 லட்சம் பாலோயர்ஸ்களை மும்பை அணி இழந்துள்ளது.

    சமூக வலைதளங்களில் நேற்றில் இருந்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோகித் குறித்த பதிவுகள் எக்ஸ் தளம் உள்பட சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித்தை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது.

    இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இதனையடுத்து ரோகித் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தை UnFollow செய்து வருகின்றனர். சில மணி நேரங்களில் இன்ஸ்டாகிராமில் சுமார் 1.5 லட்சம் பாலோயர்ஸ்களை மும்பை அணி இழந்துள்ளது.

    இந்நிலையில் தற்போது எக்ஸ்தளத்தில் ShameOnMI, Rohit sacked, ஹிட்மேன், கேப்டன்சி, ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஹாஷ்டேகுகள் வைரலாகி வருகிறது.

    • 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா உலகக்கோப்பையை வென்றது.
    • உலகக்கோப்பை தொடரில் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

    நியூயார்க்:

    கத்தாரில் நடைபெற்ற 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் 35 ஆண்டுகளுக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 3-வது உலகக்கோப்பையை வென்றது. இந்த உலகக்கோப்பை தொடரில் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

    இந்த உலகக்கோப்பை தொடரின்போது மெஸ்ஸி அணிந்திருந்த அர்ஜென்டினா அணியின் 6 ஜெர்சிகள் நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அந்த 6 ஜெர்சிகளும் 7.8 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.65 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. ஒரு வீரருக்கு சொந்தமான ஒரு பொருள் அதிக விலைக்கு விற்பனையானது இதுவே முதல் முறை என ஏலத்தை நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அந்த 6 ஜெர்சிகளில் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மெஸ்ஸி அணிந்திருந்த ஜெர்சியும் இடம்பெற்று இருந்ததால் இவ்வளவு பெரிய தொகைக்கு அவை விற்பனையாகி உள்ளதாக ஏலத்தை நடத்திய நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டார்.
    • அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற தொடர்களில் ஐ.பி.எல்லும் ஒன்றாகும். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் அடுத்த சீசன் 2024-ம் ஆண்டு நடைபெறும்.

    இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோகித் சர்மா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பாலோயர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இன்ஸ்டாகிராமில் சுமார் 1.5 லட்சம் பாலோயர்ஸ்களை மும்பை அணி இழந்துள்ளது.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை தனக்கு கொடுத்தால்தான் குஜராத் அணியை விட்டு வருவேன் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் பாண்ட்யா நிபந்தனை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்று அவரை கேப்டனாக நியமிக்கப்போவதாக உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு ரோகித்திடம் மும்பை அணி நிர்வாகம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    • இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.
    • டெல்லி அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி 2 தோல்வி பெற்றுள்ளது.

    புனே:

    12 அணிகள் மோதும் 10-வது 'புரோ கபடி' லீக் போட்டி நடந்து வருகிறது. புனேவில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன. பெங்கால் அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு டையுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தனது ஆதித்கத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. புனேரி பால்டன் 3 ஆட்டத்தில் 2 வெற்றி ஒரு தோல்வி பெற்றுள்ளது.

    இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி 2 தோல்வி பெற்றுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி தான் மோதிய 4 ஆட்டத்திலும் தோற்றது.

    • குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியது.
    • 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நீக்கியது.

    5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நீக்கியது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதனால் ரோகித் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பை அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா, கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதை அவர்களால் ஏற்க முடியவில்லை. இணையதளங்களில் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரர் சூர்யகுமார் யாதவ், இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. 'உடைந்த இதயம்' எமோஜியை அவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது தான் காரணம் என பதிவு செய்து வருகின்றனர். ரோகித் சர்மா நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பல ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.



     "மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமே தயாராக இருங்கள்.. உங்கள் வீழ்ச்சி நெருங்கிக் கொண்டிருக்கிறது" என தீவிர ரசிகை ஒருவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

    குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    • கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
    • ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஹாஷ்டேகுகள் வைரலாகின.

    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியில் 10 ஆண்டாக கேப்டன் பொறுப்பு வகித்த ரோகித் சர்மாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாராட்டு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பாலோயர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது.

    ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இன்ஸ்டாகிராமில் சுமார் 1.5 லட்சம் பாலோயர்ஸ்களை மும்பை அணி இழந்துள்ளது.

    மும்பை அணியிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என குமுறும் இணைய வாசிகள், ரோகித் சர்மாவுக்காக மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவளித்து வருவதாகவும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஹாஷ்டேகுகள் வைரலாகி வருகிறது.

    ×