என் மலர்
விளையாட்டு

புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் ஆதிக்கம் தொடருமா? புனேரி பால்டனுடன் இன்று மோதல்
- இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.
- டெல்லி அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி 2 தோல்வி பெற்றுள்ளது.
புனே:
12 அணிகள் மோதும் 10-வது 'புரோ கபடி' லீக் போட்டி நடந்து வருகிறது. புனேவில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன. பெங்கால் அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு டையுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தனது ஆதித்கத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. புனேரி பால்டன் 3 ஆட்டத்தில் 2 வெற்றி ஒரு தோல்வி பெற்றுள்ளது.
இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.
டெல்லி அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி 2 தோல்வி பெற்றுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி தான் மோதிய 4 ஆட்டத்திலும் தோற்றது.
Next Story






