என் மலர்
விளையாட்டு
- மும்பை இந்தியன்ஸ் அணிதான் அவரை கேப்டனாக நியமித்தது.
- ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பக்கூடாது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் முக்கியமான அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை சாம்பியன் கோப்பை வாங்கிக் கொடுத்தவர் ரோகித் சர்மா. தற்போது அவர் மூன்று வடிவிலான இந்திய அணிக்கும் கேப்டனாக இருக்கிறார்.
ஆனால், ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது. இதனை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
போட்டி நடைபெறும்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். தற்போதும் எழுப்பி வருகின்றனர். அணி நிர்வாகம், ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரால் சரி செய்ய முடியவில்லை. இது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது. இதற்கிடையே ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக இருப்பதாக யூகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் டெல்லி கேப்பிடடல்ஸ் அணி டைரக்டர் சவுரவ் கங்குலி இந்த விவகாரம் தொடர்பாக கூறியதாவது:-
ரசிர்கள் ஹர்திக் பாண்ட்யாவிற்கு எதிராக கோஷம் எழுப்பக் கூடாது. அது சரியானது அல்லது. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை கேப்டனாக நியமித்துள்ளது. நீங்கள் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தாலும் அல்லது உங்கள் அணிக்கு கேப்டனாக இருந்தாலும் நீங்கள் கேப்டனாக நியமிக்கப்படுகிறீர்கள். விளையாட்டில் அதுதான் நடக்கும்.
ரோகித் சர்மா வேற லெவல். மும்பை அணிக்கான அவரது ஆட்டம், இந்தியாவுக்கான அவரது ஆட்ம் மிகவும் வித்தியாசமான லெவல் கொண்டது. அது கேப்டனாகவும், ஒரு வீரராகவும் அடங்கும். இது ஹர்திக் பாண்ட்யா தவறு அல்ல. அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் 2 முறை கோப்பை வென்றுள்ளது
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த கம்பீர் இந்த சீசனில் அந்த அணியின் ஆலோசகராக உள்ளார்
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த கம்பீர் இந்த சீசனில் அந்த அணியின் ஆலோசகராக உள்ளார்.
கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் 2 முறை கோப்பை வென்றுள்ளது.
கடந்த 2 ஐ.பி.எல். சீசன்களில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து கம்பீர் இந்த சீசனில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ரசிகர் ஒருவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை கம்பீர் சமூக எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "எங்கள் ரசிகர்களின் அன்பினால்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம்!" என்று பதிவிட்டுள்ளார்
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றதும் பாரதிய ஜனதாவில் கம்பீர் இணைந்தார். பாஜகவும் உடனடியாக அவருக்கு 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. எம்.பி ஆக இருந்த கம்பீர் இந்தாண்டு ஐ.பி.எல்-லில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அண்மையில் அரசியலில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாடி வருகிறார்
- யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசி விக்கெட் எடுப்பதால் யார்க்கர் கிங் நடராஜன் என பெயர் எடுத்துள்ளார்
இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாடி வருகிறார். யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசி விக்கெட் எடுப்பதால் யார்க்கர் கிங் நடராஜன் என அவர் பெயர் எடுத்துள்ளார்.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் அந்த அணிக்காக இதுவரை 50 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.
நேற்று சென்னை அணியுடன் ஹைதராபாத் அணி மோதியது. அப்போட்டியில் தான் நடராஜன் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக நடைபெற்ற ஹைதராபாத் - கொல்கத்தா அணிக்கு இடையிலான போட்டியில் தனது 50வது ஐபிஎல் விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது 50-வது ஐ.பி.எல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
- ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதின
- தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இப்போட்டியை நேரில் கண்டு ரசித்தார்
ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதின.
தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இப்போட்டியை நேரில் கண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை உற்சாகப்படுத்தினார்.
அதன்படி முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துபே 45 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 19.1 ஓவரில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி 37 ரன்கள் அடித்த அபிஷேக் சர்மாவுக்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆட்டநாயகன் விருது கொடுத்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம், அதிரடியாக ஆடிய வீரர்களுக்கு டிரெசிங் ரூமில் சிறப்பு பரிசுகளை வழங்கி வருகிறது. அதன்படி அபிஷேக் சர்மாவுக்கு அதிக கனமுள்ள சங்கிலி அணிவிக்கப்பட்டது.
இதே போல் கடந்த முறை, ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள சங்கிலி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான கிரீசின் மரியா சக்காரி, ரஷியாவின் வெரோனிகா உடன் மோதினார்.
இதில் மரியா சக்காரி 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ், பெல்ஜிய வீராங்கனை எலைஸ் மெர்டன்சுடன் மோதினார். இதில் காலின்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் மரியா சக்காரி, காலின்சுடன் மோதுகிறார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலா, ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினாவை சந்திக்கிறார்.
- பொறுப்புடன் விளையாடிய மார்க்ரம் அரை சதம் அடித்து அவுட் ஆனார்.
- சிஎஸ்கே தரப்பில் மொயின் அலி 2 விக்கெட்டும் தீபக் சாஹர் தீக்ஷனா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துபே 45 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக அபிஷேக் சர்மா - ஹெட் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இவரை தீபக் சாஹர் அவுட் செய்தார். அடுத்து வந்த மார்க்ரம் மற்றும் ஹெட் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
ஹெட் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய மார்க்ரம் அரை சதம் அடித்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஷபாஸ் அகமது 18 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து கிளாசன் மற்றும் நிதிஷ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
இறுதியில் ஐதராபாத் அணி 19.1 ஓவரில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிஎஸ்கே தரப்பில் மொயின் அலி 2 விக்கெட்டும் தீபக் சாஹர் தீக்ஷனா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- நிச்சயமாக இந்த சீசன் ரோகித் சர்மாவுக்கு பிரமாதமாக இருக்கும்.
- அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக இல்லை என்றாலும் பின்னால் நின்று வழி நடத்துவார்.
மும்பை:
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை கோப்பையை வாங்கி கொடுத்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியமித்தது.
இது ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் வீரர்களிடம் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி விட்டது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.
இந்நிலையில் ரோகித் சர்மா கேப்டன் சுமை இல்லாமல் சுதந்திரமாக விளையாட விரும்புவார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் அனைவரும் உலக கோப்பையில் வென்று கொடுத்திருக்கிறோம். ஹர்திக் பாண்டியா தலைமையில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்று பலரும் பல விதமான கதைகளை கூறி வருகிறார்கள். ஆனால் என்னை கேட்டால் ரோகித் சர்மா கேப்டன் சுமை இல்லாமல் சுதந்திரமாக விளையாட விரும்புவார். எனக்கு ரோகித் பற்றி நன்றாக தெரியும். அவர் சுதந்திரமாக விளையாடி அதிரடியாக ரன்களை சேர்த்து ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு கூட அவர் முயற்சி செய்வார். நிச்சயமாக இந்த சீசன் ரோகித் சர்மாவுக்கு பிரமாதமாக இருக்கும். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக இல்லை என்றாலும் பின்னால் நின்று வழி நடத்துவார்.
மாற்றத்திற்கு ரோகித் சர்மா தயாராக இருக்க வேண்டும். எந்த சூழல் வருகிறதோ, அதனை அவர் ஏற்றுக்கொண்டு விளையாட வேண்டும். மும்பைக்கு மட்டுமல்ல அவர் எந்த அணிக்கு சென்றாலும் ரோகித் சர்மா ஒரே மாதிரி தான் இருப்பார். கேப்டன் பதவி இல்லாததால் ரோகித் சர்மா தனிப்பட்ட முறையில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கக்கூடும். ஆனால் நிச்சயமாக அதில் இருந்து வெளியே வருவார். ஒரு சாம்பியன் வீரராக மீண்டும் திகழ்வார் ரோகித் அதிரடியை காண காத்திருங்கள் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
- மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதியில் தோற்றனர்.
ரபாட்:
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்போனோ ஒலிவெட்டி ஜோடி, ஆஸ்திரியாவின் லூகாஸ் மெய்ட்லர், அலெக்சாண்டர் ஜோடியுடன் மோதியது.
இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 5-7 என முதல் செட்டை இழந்தது. 2-வது செட்டை 6-3 என கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் யூகி பாம்ப்ரி ஜோடி 7-10 என போராடி தோற்று, தொடரில் இருந்து வெளியேறியது.
- சென்னை அணி தரப்பில் ஷிவம் துபே 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர், கம்மின்ஸ், உனத்கட், ஷபாஸ் அகமது, நட்ராஜன் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ்- ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ரச்சின் 16 ரன்னிலும் ருதுராஜ் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ரகானேவுடன் துபே ஜோடி சேர்ந்து ஸ்கோரை உயர்த்தினர்.
ரகனே ஆட்டம் மந்தமாக இருந்தது. ஆனால் மறுமுனையில் இருந்த துபே-ன் ஆட்டம் வெறித்தனமாக இருந்தது. அதிரடியாக விளையாடி துபே 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் 35 (30) ரன்னில் வெளியேறினார். இதனை தொடந்து மிட்செல் - ஜடேஜா ஜோடி ரன்களை உயர்த்த முயற்சித்தனர். ஆனால் ஐதராபாத் சிறப்பாக பந்து வீசி பவுண்டரி சிக்சர்களை தடுத்தனர்.
இதனால் இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர், கம்மின்ஸ், உனத்கட், ஷபாஸ் அகமது, நட்ராஜன் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
- அவருக்கு என் பாராட்டும் மரியாதையும் உண்டு.
குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அனி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.
அந்த அணி ஒரு கட்டத்தில் 9 ஓவர் முடிவில் 73 ரன்கள்தான் எடுத்திருந்தது. இதனால் பஞ்சாப் அணி தோல்வியடைந்து விடும் என எல்லோரும் நினைத்தனர். அப்போது களமிறங்கிய ஷஷாங்க் சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 23 பந்தில் அரைசதம் விளாசியதுடன் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் அவருக்கும் என் பாராட்டும் மரியாதையும் உண்டு என பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஏலத்தில் எங்களைப் பற்றி கடந்த காலத்தில் கூறப்பட்ட விஷயங்களைப் பற்றி இறுதியாகப் பேச இன்று சரியான நாள் போல் தெரிகிறது. இதேபோன்ற சூழ்நிலைகளில் நிறைய பேர் நம்பிக்கையை இழந்திருப்பார்கள். அழுத்தத்தின் கீழ் வளைந்திருப்பார்கள் அல்லது ஊக்கம் இழந்திருப்பார்கள். ஆனால் ஷஷாங்க் அப்படி இல்லை. அவர் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தவர்.
தன்னுடைய திறமையால் மட்டுமல்ல, மிகச்சிறப்பான நேர்மறை எண்ணத்தால். ஏலத்தின்போது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தையும் ஜாலியாக எடுத்துக்கொண்டு, தக்க நேரத்தில் தன்னிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி கைத்தட்டல்களை அள்ளினார். அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். அவருக்கு என் பாராட்டும் மரியாதையும் உண்டு. வாழ்க்கை ஒரு வித்தியாசமான திருப்பத்தை எடுக்கும் போது மற்றும் ஸ்கிரிப்ட் படி விளையாடாதபோது அவர் உங்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.
ஏனென்றால் மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். எனவே ஷஷாங்க் போல் உங்களை நம்புவதை நிறுத்தாதீர்கள் & வாழ்க்கையின் விளையாட்டில் நீங்கள் ஆட்ட நாயகனாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்
இவ்வாறு ப்ரீத்தி ஜிந்தா கூறினார்.
- இந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்
- கடந்த 1 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மோசமான தோல்வியை தழுவியது
ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிய கேப்டனுடன் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய போட்டிகளில் தோல்வியை தழுவி தடுமாறி வருகிறது.
அதிலும், கடந்த 1 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மோசமான தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி மும்பையில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் தான் ஹர்திக் பாண்டியா குஜராத் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா சிவனுக்கு தந்து கையால் அபிஷேகம் செய்தும் தீபாராதனை காட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாக நியமிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் மற்றும் ரோகித் இடையே கருத்து வேறுபாடு இருக்குமோ என்ற வகையில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தையை சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கிரீசின் மரியா சக்காரி, ஆஸ்திரேலிய வீராங்கனை அஸ்த்ரா ஷர்மா உடன் மோதினார்.
இதில் மரியா சக்காரியா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் மரியா சக்காரி ரஷியாவின் வெரோனிகா உடன் மோத உள்ளார்.






