என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சஞ்சு சாம்சன் 42 பந்தில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • பட்லர் சிக்ஸ் அடித்து சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெற வைத்தார்.

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 19-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி விராட் கோலியின் சதத்தால் (ஆட்டமிழக்காமல் 72 பந்தில் 113 ரன்) 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் ரன்ஏதும் எடுக்காமல் 2-வது பந்திலேயே ஆட்டமிழந்தார்.

    அடுத்து பட்லர் உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன்ரேட் 10 என்ற வகையில் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் குவித்தது. 10 ஓவரில் 95 ரன்கள் சேர்த்தது. பட்லர் 30 பந்தில் அரைசதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 33 பந்தில் அரைசதம் அடித்தார். 15-வது ஓவரின் 4-வது பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. சிராஜ் பந்தில் சாம்சன் 42 பந்தில் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்திருந்தது.

    அடுத்து வந்த ரியான் பராக் 4 ரன்னிலும், ஜுரேல் 2 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தனர். 5-வது விக்கெட்டுக்கு பட்லர் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. கடைசி ஓவரில் 1 ரன் தேவைப்பட்டது. ஆனால் சிக்ஸ் அடித்து சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெற வைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 19.1 ஓவரில் 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பட்லர் 58 பந்தில் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 4 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

    • விராட் கோலி ஆட்டமிழக்காமல் 72 பந்தில் 113 ரன்கள் விளாசினார்.
    • ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகவும் மந்தமான சதத்தை பதிவு செய்தார்.

    ஆர்சிபி- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அந்த அணியின் மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடாத நிலையில் ஆட்டமிழக்காமல் 72 பந்தில் 113 ரன்கள் விளாசினார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலியின் மந்தமான சதம் இதுவாகும். இதனால் எக்ஸ் வலைத்தளத்தில் "selfish" ஹேஷ்டேக் உருவாக்கி விராட் கோலியை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் 3-வது முறையாக 50 ரன்களை தாண்டி எடுத்துள்ளார். ஜெய்ப்பூர் மைதானத்தில் 9 முறை விளையாடி முதன்முறையாக 50 ரன்னைக் கடந்து அதை சதமாக மாற்றியுள்ளார்.

    34 ரன் அடித்தபோது ஐபிஎல் கிரிக்கெட்டில் 7500 ரன்கள் அடித்து சாதனைப் படைத்தார்.

    • நாளை (ஏப்.7) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, டெல்லி கேபிட்டல்ஸ் எதிர்கொள்கிறது
    • நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் மும்பை அணி உள்ளது

    17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை (ஏப்.7) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, டெல்லி கேபிட்டல்ஸ் எதிர்கொள்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் மும்பை அணி உள்ளது.

    இழந்தை இடத்தை மீண்டும் பிடிக்க மும்பை அணிக்கு கட்டாயம் ஒரு வெற்றி பெற்றாக வேண்டும். ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி மீது உள்ள அதிருப்தி காரணமாகவே இந்த நிலை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக கடந்த மூன்று ஆட்டங்களிலும் விளையாடாத சூர்யகுமார் யாதவ் நாளை நடைபெற உள்ள டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மறுபுறம், டெல்லி அணியை பொறுத்தவரையில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 1 வெற்றியும், 3 ஆட்டங்களில் தோல்வியும் கண்டு புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி படுதோல்வி அடைந்தது.

    அந்த தோல்வியில் இருந்து மீள வேண்டுமெனில் புதிதாக வெற்றி ஒன்றை பெற வேண்டிய நிர்பந்தத்தில் டெல்லி அணி உள்ளது. இதன் காரணமாக இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதேநேரம் சொந்த மண்ணில் விளையாடுவது மும்பை அணிக்கு கூடுதல் வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நாளை மும்பை உடனான போட்டி குறித்து டெல்லி அணி வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலையாளத்தின் வெற்றிபெற்ற அய்யப்பனும் கோஷியும்' படத்தின் போஸ்டரை எடிட் செய்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஆர்சிபி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 125 ரன்கள் எடுத்தது.
    • விராட் கோலி 67 பந்தில் சதம் அடித்தார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வை செய்தார்.

    அதன்படி ஆர்சிபி அணியின் விராட் கோலி, டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆர்சிபி அணிக்கு முதல் ஓவரிலேயே 13 ரன்கள் கிடைத்தது. 4-வது ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. விராட் கோலி அதிரடியாக விளையாட டு பிளிஸ்சிஸ் சற்று தடுமாறினார். ஆனால் இருவரும் விக்கெட் இழக்காமல் விளையாடினர்.

    இதனால் பவர்பிளேயில் ஆர்சிபி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆர்சிபி ரன் குவிப்பில் வேகம் குறைந்தது. 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் சேர்த்தது.

    11-வது ஓவரின் 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கி விராட் கோலி 39 பந்தில் அரைசதம் அடித்தார். மேலும் இந்த தொடரில் இது அவரின் 3-வது அரைசதம் ஆகும். 11.2 ஓவரில் ஆர்சிபி 100 ரன்னைத் தொட்டது.

    ஆர்சிபி அணியின் ஸ்கோர் 125 ரன்னாக இருக்கும்போது 14-வது ஓவரின் கடைசி பந்தில் டு பிளிஸ்சிஸ் ஆட்டமிழந்தார். 33 பந்தில் 44 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் வெளியேறினார்.

    அடுத்து வந்த மேக்ஸ்வெல் 1 ரன் எடுத்த நிலையில் பர்கர் பந்தில் க்ளீன் போல்டானார். ஆர்சிபி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.

    ஒருபக்கம் விரைவாக ரன் வராத நிலையில் மறுபக்கம் விராட் கோலி சதத்தை நோக்கி சென்றார். 18-வது ஓவரின் 4-வது பந்தை சிக்சருக்கு துரத்தி 97 ரன்களை தொட்டார். அதேவேளையில் ஆர்சிபி 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

    19-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 67 பந்தில் சதம் அடித்தார். கடைசி ஓவரில் 14 ரன்கள் கிடைக்க ஆர்சிபி 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 72 பந்தில் 113 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • ஜெய்ப்பூர் மைதானத்தில் 9-வது இன்னிங்சில் அரைசதம் அடித்துள்ளார்.
    • ஐபிஎல் கிரிக்கெட்டில் 7500 ரன்கள் அடித்துள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் இந்த போட்டிக்கு முன் 8 முறை விளையாடியுள்ளார்.

    ஆனால் இந்த 8 இன்னிங்சிலும் அவரை அரைசதம் அடித்ததில்லை. இந்த நிலையில் இன்று 39 பந்தில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் ஜெய்ப்பூர் மைதானத்தில் முதன்முறையாக தனது அரைசதத்தை பதிவு செய்தார்.

    மேலும், இன்றைய ஆட்டத்தில் 34 ரன்னை தொட்டபோது, ஐபிஎல் கிரிக்கெட்டில் 7500 ரன்கள் அடித்துள்ளார்.

    • இந்தியா, ஆஸ்திரேலியா ஹாக்கி அணிகள் இடையிலான முதல் போட்டி பெர்த்தில் இன்று நடந்தது.
    • ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கிறது.

    பெர்த்:

    இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

    இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா ஹாக்கி அணிகள் இடையிலான முதலாவது போட்டி பெர்த்தில் இன்று நடந்தது.

    ஆஸ்திரேலியா சார்பில் டாம் விக்காம் 2 கோலும், டிம் பிராண்ட், ஜோயல் ரிண்டலா, பிளின் ஓகிளிவ் தலா ஒரு கோல் அடித்தனர். இந்தியா சார்பில் குர்ஜந்த் சிங் ஒரு கோல் அடித்தார்.

    இதில் ஆஸ்திரேலிய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • ஆர்சிபி 4 போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்துள்ளது.

    ஐபிஎல் 2024-ன் 19-வது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் கூறுகையில் "இந்த ஆடுகளத்தில் முதலில் பந்து வீச விரும்புகிறோம். இது புது ஆடுகளம். வேகப்பந்து வீச்சுக்கு (சீம்) உதவியாக இருக்கும். ஆட்டத்தின் பின் பகுதியில் பனியின் தாக்கம் இருப்பதாக எதிர்பார்க்கிறோம்" என்றார்.

    • டெல்லி அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
    • மார்ஷ் 20, 23, 18, 0 என சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை மதியம் 3.30 தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

    இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயத்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். இந்த டெல்லி அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    டெல்லி அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மிட்செல் மார்ஷ் பஞ்சாப் அணிக்கெதிராக 12 பந்தில் 20 ரன்னும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 12 பந்தில் 23 ரன்களும், சிஎஸ்கே-வுக்கு எதிராக 12 பந்தில் 18 ரன்களும் அடித்துள்ளார். கொல்கத்தாவிற்கு எதிராக டக்அவுட் ஆனார். இதுவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகப்பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 18-ந்தேதி ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் விளையாட உள்ளது.
    • உத்தேச அணி பயிற்சி மேற்கொள்ள இருக்கும் நிலையில் விபத்தில் சிக்கியுள்ளனர்.

    பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையான பிஸ்மா மரூப் மற்றும் குலாம் பாத்திமா ஆகியோர் சென்ற கார் விபத்தில் சிக்கி இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. அணி மருத்துவக்குழு அவர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி வருகிற 18-ந்தேதி முதல் பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான பயிற்சி முகாமில் இருவரும் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் விபத்தில் சிக்கியுள்ளனர்.

    கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்து மண்ணில் பாகிஸ்தான் பெண்கள் அணி டி20 தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. நியூசிலாந்துக்கு எதிராக முதன்முறையாக டி20 தொடரை கைப்பற்றியதுடன் 2018-ல் வங்காளதேசத்தை வீழ்த்திய பிறகு வெளிநாட்டு மண்ணில் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • 2010-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மேட்ச் பிக்சிங்.
    • அப்போது ரமீஸ் ராஜா வர்ணனையாளராக இருந்து அவர்களை அடையாளப்படுத்தினார்.

    பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் முகமது ஆமிர். இவர் 2010-ல் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார். அதன்பின் தண்டனை முடிந்த பிறகு மீண்டும் அணியில் இணைந்தார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் 2010 போட்டியின்போது வர்ணனையாளராக செயல்பட்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா, முகமது ஆமிருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரமீஸ் ராஜா கூறியதாவது:-

    முகமது ஆமிர் விவகாரத்தில் என்னுடைய பார்வை மிகவும் நேரடியானது. கிரிக்கெட்டை சரி செய்வதாக நான் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சமூகமும், ரசிகர்களும் புரிந்து கொள்வது முக்கியம் என நான் நம்புகிறேன்.

    முகமது அமிர் மேட்ச் பிக்சில் ஈடுபட்டபோது லார்ட்ஸ் மைதானத்தில் நான் வர்ணணை செய்து கொண்டிருந்னே். நான் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டியதால் வெறுப்பு என்னை நோக்கி வீசப்படும் என உணர்ந்தேன். மீடியாக்களால் நான் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டேன். அதை என்னால் மறக்க முடியாது.

    உலகின் எங்கெல்லாம் இது போன்று மேட்ச் பிக்கிங் ஈடுபட்ட வீரர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். அவர்கள் மீது எனக்கு அனுதாபம் இருக்கலாம். ஆனால், என்னுடைய அகராதியில் மன்னிப்பு என்பது கிடையாது. கடவுள் மறுத்தால் கூட என்னுடைய மகன் இதுபோன்ற செயல் செய்திருந்தால் நான் அவனை நிராகரிப்பேன்.

    இவ்வாறு ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

    • மும்பை இந்தியன்ஸ் அணிதான் அவரை கேப்டனாக நியமித்தது.
    • ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பக்கூடாது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் முக்கியமான அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை சாம்பியன் கோப்பை வாங்கிக் கொடுத்தவர் ரோகித் சர்மா. தற்போது அவர் மூன்று வடிவிலான இந்திய அணிக்கும் கேப்டனாக இருக்கிறார்.

    ஆனால், ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது. இதனை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    போட்டி நடைபெறும்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். தற்போதும் எழுப்பி வருகின்றனர். அணி நிர்வாகம், ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரால் சரி செய்ய முடியவில்லை. இது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது. இதற்கிடையே ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக இருப்பதாக யூகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில் டெல்லி கேப்பிடடல்ஸ் அணி டைரக்டர் சவுரவ் கங்குலி இந்த விவகாரம் தொடர்பாக கூறியதாவது:-

    ரசிர்கள் ஹர்திக் பாண்ட்யாவிற்கு எதிராக கோஷம் எழுப்பக் கூடாது. அது சரியானது அல்லது. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை கேப்டனாக நியமித்துள்ளது. நீங்கள் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தாலும் அல்லது உங்கள் அணிக்கு கேப்டனாக இருந்தாலும் நீங்கள் கேப்டனாக நியமிக்கப்படுகிறீர்கள். விளையாட்டில் அதுதான் நடக்கும்.

    ரோகித் சர்மா வேற லெவல். மும்பை அணிக்கான அவரது ஆட்டம், இந்தியாவுக்கான அவரது ஆட்ம் மிகவும் வித்தியாசமான லெவல் கொண்டது. அது கேப்டனாகவும், ஒரு வீரராகவும் அடங்கும். இது ஹர்திக் பாண்ட்யா தவறு அல்ல. அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் 2 முறை கோப்பை வென்றுள்ளது
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த கம்பீர் இந்த சீசனில் அந்த அணியின் ஆலோசகராக உள்ளார்

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த கம்பீர் இந்த சீசனில் அந்த அணியின் ஆலோசகராக உள்ளார்.

    கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் 2 முறை கோப்பை வென்றுள்ளது.

    கடந்த 2 ஐ.பி.எல். சீசன்களில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து கம்பீர் இந்த சீசனில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், ரசிகர் ஒருவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை கம்பீர் சமூக எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "எங்கள் ரசிகர்களின் அன்பினால்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம்!" என்று பதிவிட்டுள்ளார்

    கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றதும் பாரதிய ஜனதாவில் கம்பீர் இணைந்தார். பாஜகவும் உடனடியாக அவருக்கு 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. எம்.பி ஆக இருந்த கம்பீர் இந்தாண்டு ஐ.பி.எல்-லில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அண்மையில் அரசியலில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×