என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • குஜராத் தரப்பில் சாய் சுதர்சன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • லக்னோ அணி தரப்பில் யாஸ் தாகூர் 5 விக்கெட்டும், குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றின.

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி லக்னோ அணிக்கு பேட்டிங்கில் துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் குவிண்டன் டி காக் 6 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் ஏழு ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

    எடுத்ததும் இரண்டு விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணிக்கு கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மார்கஸ் ஸ்டாயினிஸ் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். கே.எல். ராகுல் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஸ்டாயினிஸ் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

    இறுதியில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், தர்ஷன் நல்கண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் - சுதர்சன் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது. மெதுவாக விளையாடி கில் 21 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வில்லியம்சன் 1 ரன்னில் வெளியேறினார்.

    அதனை தொடர்ந்து குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். சரத் 2, விஜய் சங்கர் 17, நல்கண்டே 12, ரஷித்கான் 0, உமேஷ் யாதவ் 2, என விக்கெட்டுகளை இழந்தனர். அதிரடியாக விளையாடிய தெவாட்டியா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் குஜராத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் எடுத்தது. இதனால் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி தரப்பில் யாஸ் தாகூர் 5 விக்கெட்டும், குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றின. 

    • அந்த சிக்சரை விட என்னுடைய சதத்தை ஹெட்மயர் கொண்டாடியது சிறப்பாக இருந்தது.
    • ராஜஸ்தான் அணிக்காக நீண்ட காலமாக விளையாடும் எனக்கு நிறைய ஆதரவுகள் இருக்கிறது.

    ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 183 ரன்கள் சேர்த்தது. அதை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் 19.1 ஓவரில் எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பட்லர் 9 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து அசத்தினார்.

    இந்த சதத்தின் மூலம் பட்லர் தன்னுடைய 6-வது ஐபிஎல் சதத்தை அடித்தார். அதன் வாயிலாக தன்னுடைய 100-வது ஐபிஎல் போட்டியில் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையும் படைத்த அவர் ராஜஸ்தானுக்கு அதிக ஆட்டநாயகன் (11) விருது வென்ற வீரர் என்ற வரலாற்றையும் படைத்தார்.

    இந்நிலையில் அந்த தருணத்தில் சிக்சர் அடிப்பதற்கு ஹெட்மயர் செய்த உதவி பற்றி ஜோஸ் பட்லர் போட்டியின் முடிவில் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அந்த சிக்சரை விட என்னுடைய சதத்தை ஹெட்மயர் கொண்டாடியது சிறப்பாக இருந்தது. உண்மையாக அவர் தான் நீங்கள் ஒரு சிக்சர் அடிக்க வேண்டும். எனவே ஸ்டம்புகளுக்கு குறுக்கே சென்று பந்தை அந்த பகுதியில் அடியுங்கள் என்று என்னிடம் கூறினார்.

    சில நேரங்களில் கிரிக்கெட்டில் விளையாடும் உங்களுடைய தலையை பல்வேறு விஷயங்கள் அதிகமாக சுற்றும். ராஜஸ்தான் அணிக்காக நீண்ட காலமாக விளையாடும் எனக்கு நிறைய ஆதரவுகள் இருக்கிறது. அங்கே அனைவரும் நீங்கள் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியில் பங்காற்றி இந்த சீசனை நன்றாக துவங்குவதற்கு வாழ்த்துகின்றனர்.

    இவ்வாறு பட்லர் கூறினார்.

    • கடைசி வரை போராடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • மும்பை தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது.

    இறுதி கட்டத்தில் டிம் டேவிட் மற்றும் ஷெப்பர்ட் வெளுத்து வாங்கினார். முக்கியமாக ஷெப்பர்ட் கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 235 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல், நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக வார்னர்- ப்ரித்விஷா களமிறங்கினர். வார்னர் 10 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ப்ரித்வி ஷா -போரல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அடுதனையடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 1 ரன்னிலும், அக்ஷர் படேல் 8 ரன்னிலும் லலித் யாதவ் 3 ரன்னிலும் குமார் குஷாக்ரா 0 ரன்னிலும் வெளியேறினர்.

    கடைசி வரை போராடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை 29 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. மும்பை தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது.
    • இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 ஆட்டங்களிலுமே குஜராத் அணியே வாகை சூடியுள்ளது.

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 ஆட்டங்களிலுமே குஜராத் அணியே வாகை சூடியுள்ளது.

    • டிம் டேவிட் 45 ரன்னிலும் ஷெப்பர்ட் 39 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    • டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல், நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது.

    அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 49 ரன்னில் அக்ஷர் படேல் பந்து வீச்சில் அவுட் ஆனார். 3 போட்டிகளில் விளையாடத சூர்யகுமார் அடுத்ததாக களமிறங்கினார். ஆனால் அவர் ரசிகர்களை ஏமாற்றும் வகையில் டக் அவுட்டில் வெளியேறினார்.

    அடுத்த சிறிது நேரத்தில் இஷான் கிஷன் 42 ரன்னிலும் திலக் வர்மா 6 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இதனையடுத்து கேப்டன் பாண்ட்யா மற்றும் டிம் டேவிட் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மெதுவாக விளையாடிய பாண்ட்யா 33 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதி கட்டத்தில் டிம் டேவிட் மற்றும் ஷெப்பர்ட் வெளுத்து வாங்கினார். முக்கியமாக ஷெப்பர்ட் கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்தார்.

    இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 234 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல், நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • சி.எஸ்.கே. முதல் 2 ஆட்டத்தில் சொந்த மண்ணில் வென்ற பிறகு அடுத்த 2 போட்டிகளில் வெளியூரில் தோற்றது.
    • கடந்த 2 போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் மோசமாக இருந்தது.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் 7 லீக் ஆட்டம், குவாலிபையர்-2 மற்றும் இறுதிப்போட்டி ஆகிய 9 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழாவே சேப்பாக்கத்தில் தான் நடைபெற்றது. கடந்த 22-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. 26-ந் தேதி நடைபெற்ற 2-வது போட்டியிலும் சி.எஸ்.கே. வெற்றி பெற்றது. குஜராத்தை 63 ரன்னில் தோற்கடித்தது.

    சேப்பாக்கம் மைதானத்தில் 3-வது ஐ.பி.எல். ஆட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த கோலாகலத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சி.எஸ்.கே. முதல் 2 ஆட்டத்தில் சொந்த மண்ணில் வென்ற பிறகு அடுத்த 2 போட்டிகளில் வெளியூரில் தோற்றது. விசாகப்பட்டினத்தில் கடந்த 31-ந் தேதி நடந்த போட்டியில் டெல்லியிடம் 20 ரன் வித்தியாசத்திலும், ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இதுவரை நடந்த 3 ஆட்டத்திலும் கொல்கத்தா தோல்வியை தழுவாமல் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.

    கடந்த 2 போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் மோசமாக இருந்தது. கொல்கத்தா போன்ற பலமான அணியுடன் விளையாடும் போது அதில் இருந்து மீள்வது அவசியமாகும். சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இந்த ஆட்டத்தை ஆவலுடன் கோலாகலத்துக்காக காத்திருக்கிறார்கள்.

    உள்ளூர் ரசிகர்கள் ஆதரவால் சேப்பாக்கத்தில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் வேட்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறது. பேட்டிங்கில் ஷிவம் துபே தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த போட்டியில் விளையாடாத முஸ்டாபிசுர் ரகுமான் நாளைய ஆட்டத்தில் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    2 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த சீசனில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்சல், பில்சால்ட், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், புதுமுக வீரர் ரகுவன்சி, வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கிலும், ஹர்திக் ரானா, வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் 28 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 18-ல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10-ல வெற்றி பெற்றுள்ளன. 

    • டெல்லி அணி மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
    • மும்பை அணி இதுவரை ஒரு வெற்றியை கூட பெறவில்லை.

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி ஒரு வெற்றியை பெற்றுள்ளது. மும்பை அணி இதுவரை விளையாடி இருக்கும் மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. அந்த வகையில், இன்றைய போட்டியின் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் மும்பை அணி களமிறங்குகிறது. 

    • மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் பெரெட்டினி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

    ரபாட்:

    வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, அர்ஜெண்டினா வீரர் மரியானோவுடன் மோதினார்.

    இதில் பெரெட்டினி 6-7 (4-7) என முதல் செட்டை இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட பெரெட்டினி அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • மும்பை அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், டிவால்ட் பிரேவிஸ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, டிம் டேவிட் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது.
    • லக்னோ அணி தன்னுடைய முதலாவது ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் வீழ்ந்தது.

    மும்பை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் வெற்றி கணக்கை தொடங்காத ஒரே அணியாக தத்தளிக்கிறது. தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோல்வி கண்ட மும்பை அணி, ஐதராபாத்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் எதிரணிக்கு 277 ரன்களை வாரி வழங்கியதுடன், 31 ரன் வித்தியாசத்தில் பணிந்தது. சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் சரண் அடைந்தது. அந்த ஆட்டத்தில் மும்பை நிர்ணயித்த 126 ரன் இலக்கை 15.3 ஓவர்களில் ராஜஸ்தான் எளிதில் எட்டிப்பிடித்தது.

    மும்பை அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், டிவால்ட் பிரேவிஸ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, டிம் டேவிட் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. இருப்பினும் திலக் வர்மா தவிர வேறு யாரும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மாத்வால், ஜெரால்டு கோட்ஜீ ஆகியோர் நல்ல நிலையில் இருக்கின்றனர். இருந்தாலும் கூட்டாக பந்து வீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தலாக அமையவில்லை. மபாகா, பியுஷ் சாவ்லா ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

    ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை அந்த இடத்துக்கு அதிரடியாக கொண்டு வந்ததால் அதிருப்தி அடைந்துள்ள ரசிகர்கள் பாண்ட்யாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள். அத்துடன் அது அணி வீரர்கள் மத்தியிலும் புகைச்சலை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடும் நெருக்கடிக்கு மத்தியில் கேப்டனாக பணியாற்றும் ஹர்திக் பாண்ட்யா களத்தில் சரியான முடிவை எடுப்பதில் திணறுவதை பார்க்க முடிந்தது.

    முந்தைய ஆட்டங்களில் பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியதில் இழைத்த தவறுகளை திருத்தி சரிவில் இருந்து மீண்டு வர அந்த அணி புதிய வியூகங்களுடன் வரும். அத்துடன் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு உடல் தகுதியை எட்டி இரு தினங்களுக்கு முன்பு அணியினருடன் இணைந்த 'அதிரடி சூறாவளி' சூர்யகுமார் யாதவ் களம் இறங்குவது அந்த அணிக்கு உத்வேகம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் 2 ஆட்டங்களில் முறையே 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடமும், 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடமும் தோற்றது. அடுத்த ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது. ஆனால் முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக பந்துவீச்சில் 272 ரன்களை விட்டுக்கொடுத்ததுடன், 106 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரிஷப் பண்ட், டேவிட் வார்னர், பிரித்வி ஷா, டிரிஸ்டான் ஸ்டப்சும், பந்து வீச்சில் கலீல் அகமது, முகேஷ் குமார், அன்ரிச் நோர்டியா வலுசேர்க்கிறார்கள். ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் சோபித்தால் அந்த அணி மேலும் வலுப்பெறும். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கடந்த 2 ஆட்டங்களை தவற விட்ட சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், காயத்தால் அவதிப்படும் மிட்செல் மார்ஷ் இன்றைய ஆட்டத்தில் ஆகியோர் ஆடுவது சந்தேகம் தான்.

    வெற்றிக் கணக்கை தொடங்க மும்பை அணியும், வெற்றிப் பாதைக்கு திரும்ப டெல்லியும் வரிந்து கட்டுவதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 18-ல் மும்பையும், 15-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.

    லக்னோவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    லக்னோ அணி தன்னுடைய முதலாவது ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டங்களில் 21 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சையும், 28 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சையும் பதம்பார்த்து எழுச்சி பெற்றது. பேட்டிங்கில் குயின்டாக் டி காக், நிகோலஸ் பூரன் கைகொடுக்கிறார்கள். கேப்டன் லோகேஷ் ராகுல், குருணல் பாண்ட்யா ஆகியோரும் நல்ல பங்களிப்பை அளிக்கின்றனர். தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் பதோனி ஆகியோரின் ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. பந்து வீச்சில் நடப்பு சீசனில் அதிவேகமாக பந்து வீசும் 21 வயது மயங்க் யாதவ் கடந்த 2 ஆட்டங்களிலும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்று கலக்கினார். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் சீராக வீசும் அவர் எதிரணியை கலங்கடிக்க காத்திருக்கிறார். அவரது பந்து வீச்சு லக்னோவுக்கு துருப்பு சீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை சாய்த்தது. அடுத்த ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் தோற்றது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பந்தாடியது. முந்தைய ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடம் போராடி வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் சுப்மன் கில்லின் அரைசதம் (89 ரன்) மற்றும் சாய் சுதர்சனின் (33 ரன்) அதிரடியால் 199 ரன் குவித்த குஜராத் அணி இரு கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டதன் விளைவு சறுக்கலை சந்திக்க நேர்ந்தது. அந்த அணியில் பந்து வீச்சில் உமேஷ் யாதவ், ஒமர்ஜாய், ரஷித் கான், நூர் அகமது, மொகித் ஷர்மா ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் டேவிட் மில்லர் ஆடாததால் வில்லியம்சன் களம் இறங்கினார். மில்லரின் காயத்தன்மை குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. இதனால் இந்த ஆட்டத்திலும் வில்லியம்சன் ஆடுவார் என்று தெரிகிறது.

    சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 ஆட்டங்களிலுமே குஜராத் அணியே வாகை சூடியுள்ளது.

    இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஐபிஎல் புள்ளி பட்டியலில் கொல்கத்தா 2ம் இடத்தில் உள்ளது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 183 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 189 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாம் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது இடத்திலும் உள்ளன. பெங்களூரு அணி 4 தோல்வியுடன் 8வது இடத்தில் உள்ளது.

    நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் ஆடிய 3 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிக்கணக்கை தொடங்காமல் கடைசி இடத்தில் உள்ளது.

    • சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான கிரீசின் மரியா சக்காரி, அமெரிக்காவின் காலின்சுடன் மோதினார்.

    இதில் காலின்ஸ் 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலா, ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினாவை சந்தித்தார்.

    இதில் முதல் செட்டை கசட்கினா 6-4 என கைப்பற்றினார். அடுத்த செட்டை பெகுலா 6-4 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கசட்கினா 7-6 (7-5) என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நள்ளிரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் காலின்ஸ், ரஷியாவின் கசட்கினாவை சந்திக்கிறார்.

    • சஞ்சு சாம்சன் 42 பந்தில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • பட்லர் சிக்ஸ் அடித்து சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெற வைத்தார்.

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 19-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி விராட் கோலியின் சதத்தால் (ஆட்டமிழக்காமல் 72 பந்தில் 113 ரன்) 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் ரன்ஏதும் எடுக்காமல் 2-வது பந்திலேயே ஆட்டமிழந்தார்.

    அடுத்து பட்லர் உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன்ரேட் 10 என்ற வகையில் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் குவித்தது. 10 ஓவரில் 95 ரன்கள் சேர்த்தது. பட்லர் 30 பந்தில் அரைசதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 33 பந்தில் அரைசதம் அடித்தார். 15-வது ஓவரின் 4-வது பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. சிராஜ் பந்தில் சாம்சன் 42 பந்தில் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்திருந்தது.

    அடுத்து வந்த ரியான் பராக் 4 ரன்னிலும், ஜுரேல் 2 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தனர். 5-வது விக்கெட்டுக்கு பட்லர் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. கடைசி ஓவரில் 1 ரன் தேவைப்பட்டது. ஆனால் சிக்ஸ் அடித்து சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெற வைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 19.1 ஓவரில் 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பட்லர் 58 பந்தில் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 4 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

    ×