என் மலர்
விளையாட்டு
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.
- இதில் அமெரிக்க வீராங்கனை காலின்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் காலின்ஸ், ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினாவுடன் மோதினார்.
இதில் காலின்ஸ் 6-2, 6-1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.
- மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்தது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் பெரெட்டினி சாம்பியன் பட்டம் வென்றார்.
ரபாட்:
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, ஸ்பெயின் வீரர் ராபர்டோவுடன் மோதினார்.
இதில் பெரெட்டினி 7-5, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
- கொல்கத்தா அணி தரப்பில் வைபவ் அரோரா 2 விக்கெட்டும், சுனில் நைரன் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சென்னை:
ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியில் சால்ட் முதல் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருந்தாலும் அதன்பிறகு சுனில் நரைன் - அங்கிரிஷ் ரகுவன்ஷி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் தடுமாற்றத்துடன் விளையாடினர். இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா- ருதுராஜ் களமிறங்கினர். ரச்சின் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் விளையாடிய ருதுராஜ், சிஎஸ்கே அணியின் கேப்டனாக தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
நிதானமாக விளையாடிய மிட்செல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துபே அவரது பாணியில் அதிரடியாக விளையாடினார். அவர் 28 ரன்னில் அவுட் ஆனார். அடுத்ததாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டோனி களமிறங்கினார். ஆனால் சிக்சர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் வைபவ் அரோரா 2 விக்கெட்டும், சுனில் நைரன், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- லக்னோ அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார்.
- ஒருவார காலம் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டிய அவசியம்.
ஐ.பி.எல். 2024 தொடரில் லக்னோ அணிக்காக களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ். இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் தனது அபாரமான பந்துவீச்சு காரணமாக பிரபலமாகியுள்ளார்.
இந்த நிலையில் காயம் காரணமாக மயங்க் யாதவ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் களமிறங்க மாட்டார் என்று லக்னோ அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அடிவயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருவார காலம் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் மயங்க் யாதவ் லக்னோ அணி விளையாட உள்ள அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மயங்க் யாதவ் லக்னோ அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார்.
- விராட் கோலி 110 கேட்ச்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
- சுரேஷ் ரெய்னா 109 கேட்ச்கள் பிடித்து 2-வது இடத்தில் உள்ளார்
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
ஜடேஜா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் சால்ட் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் அடித்த பந்தை கேட்ச் பிடித்தார்.
இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 கேட்ச்களை பிடித்து அசத்தியுள்ளார். 100 கேட்ச்கள் பிடித்து 5-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
விராட் கோலி 110 கேட்ச்கள் பிடித்து முதல் இடத்தில் உள்ளார். சுரேஷ் ரெய்னா 109 கேட்ச்கள் பிடித்து 2-வது இடத்தில் உள்ளார். பொல்லார்டு 103 கேட்ச்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 98 கேட்களுடன் 6-வது இடத்தில் உள்ளார்.
+2
- ஜடேஜா 4 ஓவரில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
- தேஷ்பாண்டே 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிலிப் சால்ட், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தேஷ்பாண்டே வீசினார். முதல் பந்திலேயே சால்ட் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து சுனில் நரைன் உடன் இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி களம் இறங்கினார். முதல் ஓவரில் கொல்கத்தா ஒரு ரன் மட்டுமே எடுத்தது. 2-வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.
தேஷ்பாண்டே வீசிய 3-வது ஓவரில் 19 ரன்கள் விளாசியது. 4-வது ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரில் 13 ரன்கள் கிடைக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 ஓவரில் 50 ரன்கள் குவித்தது.
இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 200 ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 7-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் ஜடேஜா திருப்புமுனை ஏற்படுத்தினார். முதல் பந்திலேயே ரகுவன்ஷியை எல்.பி.டபிள்யூ மூலம் வீழ்த்தினார். ரகுவன்ஷி 18 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே ஓவரின் 5-வது பந்தில் சுனில் நரைனை வீழ்த்தினார். அவர் 20 பந்தில் 27 ரன்கள் எடுத்து தீக்சனாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் கொல்கத்தா நைட் ரைடஸ் ரன்கள் அடிக்க திணறியது. ஜடேஜா மேலும் வெங்களடேஷ் அய்வரை 3 ரன்னில் வீழ்த்தினார். கொல்கத்தா நைட் ரைடர் 15.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
இதனால் 200 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 150 ரன்னைத் தாண்டுமா? என்ற நிலை ஏற்பட்டது. ரிங்கு பாண்டு கடைசி நேரத்தில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

16.5-வது ஓவரில் அந்த்ரே ரஸல் களம் இறங்கினார். 18-வது ஓவரை முஸ்தாபிஜுர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே விட்டுக்கொடுத்தார். கொல்கத்தா அணியால் இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. நோ-பால் பந்துடன் சேர்த்து ரஸல் 6 பந்துகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
19-வது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் அந்த்ரே ரஸல் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணிக்கு இந்த ஓவரில் 13 ரன் கிடைத்தது.
135 ரன்கள் எடுத்த நிலையில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் வீசிய கடைசி ஓவரை கொல்கத்தா எதிர்கொண்டது. முதல் பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. முஸ்தாபிஜூர் ரஹ்மான் 4 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
- சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் 10 முறை மோதி இருக்கின்றன.
- இதில் 7-ல் சென்னையும், 3-ல் கொல்கத்தாவும் வாகை சூடியுள்ளன.
சென்னை:
ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் சென்னையும், 10-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் 10 முறை மோதி இருக்கின்றன. இதில் 7-ல் சென்னையும், 3-ல் கொல்கத்தாவும் வாகை சூடியுள்ளன.
- நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் மோதின.
- இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிடல் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 234 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி 205 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் மும்பை அணி இந்த போட்டியின் மூலம் படைத்த சாதனை யாதெனில் : டி20 வரலாற்றில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல் ஒரு இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களை பதிவு செய்த அணிகளின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது.
இதற்கு முன்னதாக சோமர்செட் - கென்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது சோமர்செட் அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல் 226 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்த மும்பை இந்தியன்ஸ் புதிய சாதனையை படைத்துள்ளது.
அந்த பட்டியல்:-
1. மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் - 234 ரன்கள்
2. சோமர்செட் - கெண்ட் - 226 ரன்கள்
3. அயர்லாந்து - நேபாளம் ஏ - 222 ரன்கள்
4. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து - 221 ரன்கள்
- குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் நான் பெற்ற ஆட்டநாயகன் விருதை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.
- உமேஷ் யாதவ் என்னுடைய ரோல் மாடல். அவரை பார்த்து தான் வேகப்பந்து வீச்சை கற்றுக்கொண்டேன்.
ஐபிஎல் தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ- குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் தேர்வு செய்வது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் சிறப்பாக அமைந்தது. அதனை தொடர்ந்து சீரான் இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மேலும் லக்னோ அணி வேகப்பந்து வீச்சாளர் யாஷ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இறுதியில் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக யாஷ் தாகூர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை தனது தந்தைக்கு சமர்பிப்பதாக லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உமேஷ் யாதவ் என்னுடைய ரோல் மாடல். அவரும் நானும் ஒரே ஊர் தான். அவரை பார்த்து தான் வேகப்பந்து வீச்சை கற்றுக்கொண்டேன். அவருக்கு எதிராக விளையாடும் போது நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் மிகவும் அடக்கமானவர். இரவு 12 மணிக்கு அவரை அழைத்தாலும் அவர் எனக்கு உதவுவார்.
எனது மற்றொரு ரோல் மாடல் எம்எஸ் டோனி. அவர் தனது போட்டிகளை பேட்டிங் மூலம் முடிப்பார், நான் அதை பந்தில் செய்ய விரும்புகிறேன்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் நான் பெற்ற ஆட்டநாயகன் விருதை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் தற்போது இல்லை. ஆனால் நான் இந்த நிலைக்கு உயர்வதற்கு அவர் நிறைய கஷ்டப்பட்டுள்ளார். இது அவரின் கனவும் கூட.
இவ்வாறு யாஷ் கூறினார்.
- நான் சென்னையைச் சேர்ந்தவன் என்பதால் சென்னை அணி என்னை வாங்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்
- டோனியை வாங்கியதால் நான் எப்போதும் சி.எஸ்.கே. அணியில் இடம்பெற போவதில்லை என்பதை உணர்ந்தேன்.
சென்னை:
இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். இவர் கடந்த 2004-ல் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அறிமுகமானார். ஆனால் சர்வதேச அரங்கில் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்பட்டார். மறுபுறம் அதே காலகட்டத்தில் அறிமுகமான டோனி மிகச்சிறப்பாக விளையாடி கேப்டனாக முன்னேறினார்.
ஐ.பி.எல். தொடரில் 2008 முதல் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக், டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, குஜராத் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். இருப்பினும் தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடும் வாய்ப்பு கடைசி வரை அவருக்கு கனவாகவே போயுள்ளது.
இந்நிலையில் 2008 ஐ.பி.எல். ஏலத்தில் டோனியை எடுத்தபோதே தமக்கு எப்போதும் சி.எஸ்.கே. அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்பதை புரிந்து கொண்டதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இது அவர் பேசியது பின்வருமாறு:-
நான் சென்னையைச் சேர்ந்தவன் என்பதால் சென்னை அணி என்னை வாங்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் இந்த முட்டாள்தனமான எண்ணத்தை நான் கொண்டிருந்தேன். இந்தியா ஏ அணிக்காகவும், தமிழ்நாடு ரஞ்சி அணிக்காகவும் வி.பி. சந்திரசேகர்தான் என்னை தேர்வு செய்ய முக்கிய காரணமாக இருந்தார். எனவே சி.எஸ்.கே .அணியின் ஒரு அங்கமாக இருந்த அவர் என்னை ஐ.பி.எல். தொடரிலும் தேர்வு செய்வார் என்று நினைத்தேன்.
இருப்பினும் கடைசியில் அவர் டோனியை வாங்கியதால் நான் எப்போதும் சி.எஸ்.கே. அணியில் இடம்பெற போவதில்லை என்பதை உணர்ந்தேன். ஏனெனில் நாங்கள் இருவரும் இந்திய அணியில் அங்கமாக இருந்தோம். அதில் நான் சற்று தடுமாற்றமாக இருந்தேன். எனவே டோனியுடன் என்னையும் ஒரே அணியில் சி.எஸ்.கே. தேர்வு செய்யாது என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் அப்போதுதான் சி.எஸ்.கே. அணியின் ஒரு பகுதியாக நான் எப்போதும் இருக்கப் போவதில்லை என்பது எனக்கு புரிந்தது.
மேலும் மும்பை அணி கொடுத்த மெகா ஆஃபரை வேண்டாமென்று துறந்து வெளியில் வந்தேன். என்னை பொறுத்தவரை மும்பை அணியில் நீடித்திருந்தால், நான் இன்னும் நல்ல கிரிக்கெட் வீரராக இருந்திருப்பேன். ஏனென்றால் கூக்குபரா பந்தில் பயிற்சி செய்ய முடியும்.
ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு கூக்குபரா பந்தின் விலை ரூ.15 ஆயிரம். ஒருநாள் பயிற்சிக்கு பந்திற்காக மட்டும் ரூ.4 லட்சம் வரை செலவு செய்ய தயங்க மாட்டார்கள்.
இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.
நடப்பு ஐ.பி.எல். தொடருடன் தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடர் தொடங்கி 17 சீசன்களாக தொடர்ந்து விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், இதுவரை ஐ.பி.எல். வரலாற்றில் 2 போட்டிகளை மட்டுமே தவறவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விராட் கோலியின் தற்போதைய புது ஹேர் ஸ்டைல் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது
- விராட் கோலியின் இந்த ஹேர் ஸ்டைலை செய்தவர் நட்சத்திர பிரபல சிகையலங்கார நிபுணர் ஹக்கீம்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆதலால் விராட் கோலியின் உடை, ஸ்டைல், சிகை அலங்காரம், டாட்டூ போன்றவை அடிக்கடி பேசுபொருளாக மாறும்.
அவ்வகையில் விராட் கோலியின் தற்போதைய புது ஹேர் ஸ்டைல் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
விராட் கோலியின் இந்த ஹேர் ஸ்டைலை செய்தவர் நட்சத்திர பிரபல சிகையலங்கார நிபுணர் ஹக்கீம். இவர் முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் ஹேர் கட் செய்து வருகிறார். எம்.எஸ். டோனிக்கும் இவர் தான் ஹேர் ட்ரெஸ்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோலியின் ஹேர் கட் குறித்து பேசிய சிகையலங்கார நிபுணர் ஹக்கீம், "நான் ஹேர் கட்டுக்கு எவ்வளவு ரூபாய் வரை வசூலிக்கிறேன் என்பதை அனைவரும் அறிவார்கள். ஹேர் கட் செய்வதற்கு நான் வசூலிக்கும் குறைந்தபட்ச தொகை 1 லட்சம் ரூபாய் ஆகும்.
டோனி மற்றும் விராட் இருவரும் என்னுடைய பழைய நண்பர்கள், பல வருடங்களாக என்னிடம் தான் ஹேர் கட் செய்து வருகிறர்கள். இப்போது ஐபிஎல் தொடங்கியுள்ளதால், வித்தியாசமான, கூலான லுக்கில் புதுவித ஹேர் கட் செய்ய முடிவு செய்தோம்.
விராட் எப்போதுமே இந்த முறை நாம் புதிய ஹேர் ஸ்டைலை முயற்சி செய்து பார்க்கலாம். அடுத்த முறை இந்த மாதிரி முயற்சி செய்யலாம் என்று எப்போதுமே ஒரு ரெபரென்ஸ் வைத்திருப்பார்.
அதன்படி, இந்த முறை முற்றிலும் வித்தியசமான சூப்பர் கூல் லுக் ஒன்றை செய்ய முடிவு செய்தோம். விராட்டின் இந்த புது லுக்கை நான் எனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததும் அந்த புகைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு என்னை மிரளவைத்தது என்று தெரிவித்தார்.
ஆனாலும் விராட் கோலியின் ஹேர் கட்டுக்கு எவ்வளவு வசூலித்தார் என்று அவர் வெளிப்படையாக கூறவில்லை.
- இன்று சென்னையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது
- சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது
ஐபிஎல் 2024 தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் 22வது லீக் போட்டி நடைபெற உள்ளது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. ஆனால் சேப்பாக்கத்துக்கு வெளியே விளையாடிய 2 போட்டிகளில் சென்னை தோல்வியை தழுவியுள்ளது.
அதே சமயம் கொல்கத்தா இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே இன்றைக்கு சென்னை அணிக்கு கொல்கத்தா கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்போட்டி தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனது சமூக வலைத்தளங்களில் கம்பீர் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனியை கம்பிர் புகழ்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், "போட்டியில் வெற்றிப் பெற வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதே சமயம் நண்பர்கள் மத்தியில் பரஸ்பர மரியாதை எல்லாம் இருக்கும். ஆனால் நான் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தேன். தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்தார். எனவே அவரிடம் நீங்கள் கேட்டாலும் வெற்றி பெற விரும்புகிறேன் என்பதையே சொல்வார்.
எம்.எஸ். டோனி இந்தியாவுக்கு கிடைத்த மிகவும் வெற்றிகரமான கேப்டன். குறிப்பாக 3 ஐசிசி கோப்பைகளை வென்று அவர் தொட்டுள்ள உயரத்தை யாராலும் தொட முடியும் என்று நான் கருதவில்லை. எனவே ஐபிஎல் தொடரில் டோனிக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஏனென்றால் டோனி நுணுக்கமான மைண்ட் செட்டை கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். ஸ்பின்னர்களை எப்படி கட்டுப்படுத்துவது? ஃபீல்டை எப்படி செட்டிங் செய்வது போன்றவற்றை நன்றாக தெரிந்த அவர் எப்போதும் வெற்றியை விட்டுக் கொடுக்க மாட்டார். 6, 7 ஆகிய இடங்களில் பேட்டிங் செய்யும் அவர் களத்தில் இருக்கும் வரை போட்டியை ஃபினிஷிங் செய்வார் என்பதை நாங்கள் அறிவோம். ஒருவேளை கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டாலும் களத்தில் இருந்தால் வெற்றியை பெற்றுக் கொடுப்பார்.
அதே சமயம் சென்னை அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரையும் அட்டாக் செய்வதற்கான பவுலிங் திட்டம் என்னிடம் இருப்பதை நான் அறிவேன். களத்தில் ஆக்ரோஷமாக இல்லாவிட்டாலும் சாமர்த்தியமாக செயல்படக்கூடிய டோனியை விட நீங்கள் சிறந்தவராக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அவர் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார். கடைசி பந்தை வீசி முடிக்கும் வரை சென்னையை நீங்கள் வெல்ல முடியாது என்று உங்களுக்கு தெரியும்" என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.






