என் மலர்
நீங்கள் தேடியது "கவுதம் கம்பிர்"
- எனது பயிற்சி காலத்தில் அதை ஒருபோதும் மறக்க முடியாது .
- அதை நான் மறந்துவிடக் கூடாது. இதை நான் வீரர்களிடமும் சொல்லியிருக்கிறேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பிர், நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 எனத் தொடரை இழந்ததை ஒருபோதும் மறக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
12 வருடத்திற்குப் பிறகு சொந்த மண்ணில் இந்தியா படுதோல்வி அடைந்தது. கம்பிர் தலைமையில் இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.
இது தொடர்பாக கவுதம் கம்பிர் கூறியதாவது:-
நான் நேர்மையாகவும் மனதாரவும் பேச வேண்டுமென்றால், எனது பயிற்சி காலத்தில் அதை ஒருபோதும் மறக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். அதை நான் மறந்துவிடக் கூடாது. இதை நான் வீரர்களிடமும் சொல்லியிருக்கிறேன். முன்னோனக்கி செல்வதற்கு இது முக்கியம், அதேவேளையில் சில சமயங்களில் கடந்த காலத்தையும் நினைவில் கொள்வது முக்கியம்.
எல்லோரும் நியூசிலாந்தை வீழ்த்துவோம் என்று நினைத்தார்கள். அந்த டிரஸ்ஸிங் அறையில், நியூசிலாந்து நம்மை தோற்கடித்தது என்பதை தொடர்ந்து நினைவூட்ட வேண்டும்.
இவ்வாறு கம்பிர் தெரிவித்துள்ளார்.
- இன்று சென்னையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது
- சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது
ஐபிஎல் 2024 தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் 22வது லீக் போட்டி நடைபெற உள்ளது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. ஆனால் சேப்பாக்கத்துக்கு வெளியே விளையாடிய 2 போட்டிகளில் சென்னை தோல்வியை தழுவியுள்ளது.
அதே சமயம் கொல்கத்தா இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே இன்றைக்கு சென்னை அணிக்கு கொல்கத்தா கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்போட்டி தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனது சமூக வலைத்தளங்களில் கம்பீர் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனியை கம்பிர் புகழ்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், "போட்டியில் வெற்றிப் பெற வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதே சமயம் நண்பர்கள் மத்தியில் பரஸ்பர மரியாதை எல்லாம் இருக்கும். ஆனால் நான் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தேன். தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்தார். எனவே அவரிடம் நீங்கள் கேட்டாலும் வெற்றி பெற விரும்புகிறேன் என்பதையே சொல்வார்.
எம்.எஸ். டோனி இந்தியாவுக்கு கிடைத்த மிகவும் வெற்றிகரமான கேப்டன். குறிப்பாக 3 ஐசிசி கோப்பைகளை வென்று அவர் தொட்டுள்ள உயரத்தை யாராலும் தொட முடியும் என்று நான் கருதவில்லை. எனவே ஐபிஎல் தொடரில் டோனிக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஏனென்றால் டோனி நுணுக்கமான மைண்ட் செட்டை கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். ஸ்பின்னர்களை எப்படி கட்டுப்படுத்துவது? ஃபீல்டை எப்படி செட்டிங் செய்வது போன்றவற்றை நன்றாக தெரிந்த அவர் எப்போதும் வெற்றியை விட்டுக் கொடுக்க மாட்டார். 6, 7 ஆகிய இடங்களில் பேட்டிங் செய்யும் அவர் களத்தில் இருக்கும் வரை போட்டியை ஃபினிஷிங் செய்வார் என்பதை நாங்கள் அறிவோம். ஒருவேளை கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டாலும் களத்தில் இருந்தால் வெற்றியை பெற்றுக் கொடுப்பார்.
அதே சமயம் சென்னை அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரையும் அட்டாக் செய்வதற்கான பவுலிங் திட்டம் என்னிடம் இருப்பதை நான் அறிவேன். களத்தில் ஆக்ரோஷமாக இல்லாவிட்டாலும் சாமர்த்தியமாக செயல்படக்கூடிய டோனியை விட நீங்கள் சிறந்தவராக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அவர் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார். கடைசி பந்தை வீசி முடிக்கும் வரை சென்னையை நீங்கள் வெல்ல முடியாது என்று உங்களுக்கு தெரியும்" என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.






