என் மலர்
விளையாட்டு
- இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் 14 ஆட்டங்களில் ஐதராபாத்தும், 7 ஆட்டங்களில் பஞ்சாப்பும் வென்று இருக்கின்றன.
முல்லாப்பூர்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14 ஆட்டங்களில் ஐதராபாத்தும், 7 ஆட்டங்களில் பஞ்சாப்பும் வென்று இருக்கின்றன.
- நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
- இந்த தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரின் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக அனைத்து அணியினரும் தங்களது 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியும் தங்களது அணி வீரர்களை எடுப்பதில் மும்முரமாக உள்ளனர். அந்த வகையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணியில் முகமது அமீர் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இதில் முகமது அமீர், மற்றும் இமாத் வாசிம் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்த வீரர்கள்:-
பாபர் அசாம் (கேப்டன்) அப்ரார் அகமது, அசம் கான், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது ரிஸ்வான், முகமது அமீர், முகமது இர்பான் நியாசி, நசீம் ஷா, சைம் அயூப், ஷதாப் கான், ஷஹீன் அஃப்ரி, ஷஹீன் அஃப்ரி , உஸ்மான் கான், ஜமான் கான்.
- ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
- ரிங்கு சிங், இந்திய அணிக்காக இதுவரை ஸ்லோ விக்கெட்டில் ஆடியது கிடையாது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் மே 26-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தொடங்குகிறது. லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய, பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் நிர்வாகிகளை நியமித்து இருந்தார்.
தற்போது, பிட்ச்கள் குறித்த அறிக்கையை, பிசிசிஐ நிர்வாகிகள் அஜித் அகார்கரிடம் சமர்பித்துள்ளனர். அதில், போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்லோ விக்கெட்டில் ரிங்கு சிங் சொதப்பியதால், கடைசி 10-15 பந்துகளுக்காக ரிங்கு சிங்கை சேர்க்க வேண்டுமா என்ற எண்ணம் பிசிசிஐயிடம் இருப்பதாகவும், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற பினிஷர்களே அணிக்கு போதும் என்ற முடிவுக்கு பிசிசிஐ வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ரிங்கு சிங், இந்திய அணிக்காக இதுவரை ஸ்லோ விக்கெட்டில் ஆடியது கிடையாது. டி20 உலகக் கோப்பை அணித் தேர்வை கருத்தில்கொண்டு, சிஎஸ்கே, கேகேஆர் இடையிலான போட்டிக்கு ஸ்லோ விக்கெட்டை தயார் செய்திருந்தனர்.
ஆனால், அந்த ஸ்லோ விக்கெட்டில் ரிங்கு சிங் சிறப்பாக செயல்படவில்லை. மொத்தம் 14 பந்துகளை எதிர்கொண்ட அவர், அதில் ஒரு பவுண்டரியை கூட அடிக்காமல் 9 ரன்களை மட்டும் எடுத்து, தேஷ்பண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்க இன்னமும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ரிங்கு சிங் சொதப்பியதால், அவரை அணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- டி20 உலகக் கோப்பை தொடரின் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியது.
- மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என தெரிவிக்கப்பட்டது.
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த தொடரில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி-20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் எனற தகவல் பரவி வந்தன. இதனால், விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 இல் அவர் ரன் குவிப்பு பட்டியலில் முன்னணியில் உள்ள அவரது ஃபார்மைப் பார்த்த பிறகு, 35 வயதான கோலி 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Cricbuzz-ன் அறிக்கையின்படி, விராட் கோலி நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்க வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சேப்பாக்கத்தில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது.
- இதில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.
சென்னை:
சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 137 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 34 ரன்கள் எடுத்தார்.
சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தபோது ஷிவம் துபே ஆட்டம் இழந்தார். அதன்பின், டோனி களம் இறங்குவார் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த வேளையில், ட்ரெஸ்சிங் ரூமில் இருந்து ரவீந்திர ஜடேஜா சிரித்தபடியே பேட்டினை எடுத்துக்கொண்டு மைதானத்திற்குள் நுழைய முயலுவதுபோல சென்று பின் திரும்பவும் ட்ரெஸ்சிங் ரூமிற்கு உள்ளே சென்றார்.
இதனைப் பார்த்த சக சி.எஸ்.கே. வீரர்கள் மற்றும் ரசிகர்களின் சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்தது.
சிறிது நேரத்தில் வெளியே வந்த மகேந்திர சிங் டோனிக்கு அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி தங்களது உற்சாக வரவேற்பினை அளித்தனர்.
இதுதொடர்பான காட்சிகளை டிரெஸ்சிங் ரூமில் இருந்து மேலே இருக்கையில் அமர்ந்திருந்த ரசிகர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, அது வைரலாகி வருகிறது.
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.
- இதில் அமெரிக்க வீராங்கனை காலின்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் காலின்ஸ், ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினாவுடன் மோதினார்.
இதில் காலின்ஸ் 6-2, 6-1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.
- மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்தது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் பெரெட்டினி சாம்பியன் பட்டம் வென்றார்.
ரபாட்:
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, ஸ்பெயின் வீரர் ராபர்டோவுடன் மோதினார்.
இதில் பெரெட்டினி 7-5, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
- கொல்கத்தா அணி தரப்பில் வைபவ் அரோரா 2 விக்கெட்டும், சுனில் நைரன் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சென்னை:
ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியில் சால்ட் முதல் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருந்தாலும் அதன்பிறகு சுனில் நரைன் - அங்கிரிஷ் ரகுவன்ஷி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் தடுமாற்றத்துடன் விளையாடினர். இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா- ருதுராஜ் களமிறங்கினர். ரச்சின் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் விளையாடிய ருதுராஜ், சிஎஸ்கே அணியின் கேப்டனாக தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
நிதானமாக விளையாடிய மிட்செல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துபே அவரது பாணியில் அதிரடியாக விளையாடினார். அவர் 28 ரன்னில் அவுட் ஆனார். அடுத்ததாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டோனி களமிறங்கினார். ஆனால் சிக்சர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் வைபவ் அரோரா 2 விக்கெட்டும், சுனில் நைரன், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- லக்னோ அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார்.
- ஒருவார காலம் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டிய அவசியம்.
ஐ.பி.எல். 2024 தொடரில் லக்னோ அணிக்காக களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ். இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் தனது அபாரமான பந்துவீச்சு காரணமாக பிரபலமாகியுள்ளார்.
இந்த நிலையில் காயம் காரணமாக மயங்க் யாதவ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் களமிறங்க மாட்டார் என்று லக்னோ அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அடிவயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருவார காலம் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் மயங்க் யாதவ் லக்னோ அணி விளையாட உள்ள அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மயங்க் யாதவ் லக்னோ அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார்.
- விராட் கோலி 110 கேட்ச்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
- சுரேஷ் ரெய்னா 109 கேட்ச்கள் பிடித்து 2-வது இடத்தில் உள்ளார்
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
ஜடேஜா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் சால்ட் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் அடித்த பந்தை கேட்ச் பிடித்தார்.
இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 கேட்ச்களை பிடித்து அசத்தியுள்ளார். 100 கேட்ச்கள் பிடித்து 5-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
விராட் கோலி 110 கேட்ச்கள் பிடித்து முதல் இடத்தில் உள்ளார். சுரேஷ் ரெய்னா 109 கேட்ச்கள் பிடித்து 2-வது இடத்தில் உள்ளார். பொல்லார்டு 103 கேட்ச்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 98 கேட்களுடன் 6-வது இடத்தில் உள்ளார்.
+2
- ஜடேஜா 4 ஓவரில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
- தேஷ்பாண்டே 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிலிப் சால்ட், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தேஷ்பாண்டே வீசினார். முதல் பந்திலேயே சால்ட் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து சுனில் நரைன் உடன் இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி களம் இறங்கினார். முதல் ஓவரில் கொல்கத்தா ஒரு ரன் மட்டுமே எடுத்தது. 2-வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.
தேஷ்பாண்டே வீசிய 3-வது ஓவரில் 19 ரன்கள் விளாசியது. 4-வது ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரில் 13 ரன்கள் கிடைக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 ஓவரில் 50 ரன்கள் குவித்தது.
இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 200 ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 7-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் ஜடேஜா திருப்புமுனை ஏற்படுத்தினார். முதல் பந்திலேயே ரகுவன்ஷியை எல்.பி.டபிள்யூ மூலம் வீழ்த்தினார். ரகுவன்ஷி 18 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே ஓவரின் 5-வது பந்தில் சுனில் நரைனை வீழ்த்தினார். அவர் 20 பந்தில் 27 ரன்கள் எடுத்து தீக்சனாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் கொல்கத்தா நைட் ரைடஸ் ரன்கள் அடிக்க திணறியது. ஜடேஜா மேலும் வெங்களடேஷ் அய்வரை 3 ரன்னில் வீழ்த்தினார். கொல்கத்தா நைட் ரைடர் 15.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
இதனால் 200 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 150 ரன்னைத் தாண்டுமா? என்ற நிலை ஏற்பட்டது. ரிங்கு பாண்டு கடைசி நேரத்தில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

16.5-வது ஓவரில் அந்த்ரே ரஸல் களம் இறங்கினார். 18-வது ஓவரை முஸ்தாபிஜுர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே விட்டுக்கொடுத்தார். கொல்கத்தா அணியால் இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. நோ-பால் பந்துடன் சேர்த்து ரஸல் 6 பந்துகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
19-வது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் அந்த்ரே ரஸல் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணிக்கு இந்த ஓவரில் 13 ரன் கிடைத்தது.
135 ரன்கள் எடுத்த நிலையில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் வீசிய கடைசி ஓவரை கொல்கத்தா எதிர்கொண்டது. முதல் பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. முஸ்தாபிஜூர் ரஹ்மான் 4 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
- சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் 10 முறை மோதி இருக்கின்றன.
- இதில் 7-ல் சென்னையும், 3-ல் கொல்கத்தாவும் வாகை சூடியுள்ளன.
சென்னை:
ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் சென்னையும், 10-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் 10 முறை மோதி இருக்கின்றன. இதில் 7-ல் சென்னையும், 3-ல் கொல்கத்தாவும் வாகை சூடியுள்ளன.






