என் மலர்
விளையாட்டு
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் ஆடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
- குஜராத் டைட்டன்ஸ் தான் ஆடிய 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மழை காரணமாக டாஸ் போட தாமதமானது. இரவு 7.25 மணிக்கு டாஸ் போடப்பட்டடது.
டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது.
- குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்
- நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் தோல்வியை தழுவியுள்ளது
ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் துவங்கும் முன்பே மும்பை அணியின் கேப்டன் மாற்றப்பட்ட சம்பவம் பேசு பொருளாக மாறியது. அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டவரும், மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்தவருமான ரோகித் சர்மா நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிய கேப்டனுடன் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் தோல்வியை தழுவியுள்ளது. மேலும் ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் மற்றும் ரோகித் இடையே கருத்து வேறுபாடு இருக்குமோ என்ற வகையில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின
இதனிடையே ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் அவர் 2025 ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்றும் அவர் பெங்களூரு அணியில் இணையலாம் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "எந்த அணிக்கு செல்ல வேண்டும் என்பது ரோகித் சர்மாவின் விருப்பம். ஐபிஎல் தொடரில் உள்ள எல்லா அணிகளும் அவரை கேப்டனாக ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள். மும்பை அணியில் தற்போது நடந்தது போல் இல்லாமல் மற்ற அணிகள் ரோகித் சர்மாவை சரியாகக் கையாளும் விதத்தில், அவர் நிச்சயமாக வேறு அணிக்குச் செல்வார் என்று தெரிவித்துள்ளார்.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தின்போது காயம் அடைந்தார்.
- கொல்கத்தா அணியுடன் நேற்று இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைக் கேப்டன் நிதிஷ் ராணா. இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் விளையாடினார். பீல்டிங் செய்யும்போது அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆர்சிபி, டெல்லி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடவில்லை.
அவர் காயம் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில் காயம் குணமடைந்து இன்று அணியுடன் இணைந்துள்ளார். இது அணிக்கு பேட்டிங்கில் கூடுதல் பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நான்கு போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கெதிராக மட்டும் தோல்வியை தழுவியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணி அடுத்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வருகிற 14-ந்தேதி எதிர்கொள்கிறது.
- மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
- தரவரிசையில் 2-ம் நிலை வீரரான இத்தாலியின் சின்னர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மான்டி கார்லோ:
களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.
இதில் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான இத்தாலியைச் சேர்ந்த சின்னர், அமெரிக்க வீரரான செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.
இதில் சின்னர் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரட் சிட்சிபாஸ், அர்ஜென்டினாவின் தாமஸ் மார்டினுடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார்
- 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்துள்ள பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
ஐ.பி.எல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார். இதுவரை அவர் விளையாடிய 5 போட்டிகளில் 316* ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.
பெங்களூரு அணியில் விராட் கோலி சிறப்பாக விளையாடியும், பிற பேட்ஸ்மேன்களான கிளன் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் போன்றோர் போதுமான ரன்களை அடிக்கவில்லை. மேலும் பெங்களூரு பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சில் எதிரணிக்கு அதிக ரன்களை வாரி வழங்கி வருகின்றனர்.
அதனால் 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்துள்ள பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
ஆனால் பெங்களூருவின் இந்த தோல்விக்கு குறைவான ஸ்டிரைக் ரேட்டில் மெதுவாக விளையாடும் விராட் கோலி தான் முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிராக போட்டியில் 67 பந்துகளில் 100 ரன்கள் அடித்த விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் மெதுவான சதமடித்த வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.
அதை வைத்து விராட் கோலி தான் பெங்களூருவின் தோல்விக்கு 100% காரணம் சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
விராட் கோலி மீதான இத்தகைய விமர்சனங்களுக்கு அவரின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். அதில்,
"இப்படி முட்டாள்தனமாக பேசுபவர்களுக்கு போட்டியின் சூழல், நிலைமை, அணி எப்படி போராடுகிறது என்பதைப் பற்றி தெரியாது என்று நினைக்கிறேன். அவர்கள் செய்திகளில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விளம்பரத்திற்காக மட்டுமே பேசுகின்றனர்.
நீங்கள் ஒரு சாதாரண வீரரைப் பற்றி பேசினால் அது உங்களை தலைப்புச் செய்திகளில் கொண்டு வருவதில்லை. ஆனால் விராட் கோலி போன்ற ஒருவரைப் பற்றி பேசினால் அது உங்களை தலைப்புச் செய்தியில் கொண்டு வரும். அப்படி பேசுபவர்களை சிலர் இயக்குகின்றனர்.
கிங் என்பவர் எப்போதும் கிங்'காகவே இருப்பார். ஆனால் கிரிக்கெட்டின் சி என்ற எழுத்துக்கான அர்த்தத்தை தெரிந்த உண்மையான ரசிகர்கள் யாரும் இது போன்ற முட்டாள்தனத்தை செய்ய மாட்டார்கள்" என்று அவர் கூறினார்.
- மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார்.
- பெண்கள் பிரிவில் வைஷாலி, ஹம்பி ஆகியோர் எதிர் அணி வீராங்கனைகளுடன் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது.
டொராண்டோ:
உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடை பெற்று வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 5-வது ரவுண்டு நேற்று நடந்தது.
சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 87-வது நகர்த்தலுக்கு பிறகு கடும் போராட்டத்துக்கு பிறகு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு கிட்டத்தட்ட 6 மணி நேரம் தேவைப்பட்டது.
மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்னொரு இந்திய வீரர் விதித் குஜாராத்தி அமெரிக்காவின் பேபியானோவுடன் மோதிய போட்டியும் டிரா ஆனது.
5 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி, குகேஷ் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பிரக்ஞானந்தா 2.5 புள்ளியுடன் 4 முதல் 5-வது இடத்திலும், விதித் குஜாராத்தி 2 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.
பெண்கள் பிரிவில் வைஷாலி, ஹம்பி ஆகியோர் எதிர் அணி வீராங்கனைகளுடன் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது. 5 ரவுண்டு முடிவில் வைஷாலி 2.5 புள்ளிகளுடன் 3 முதல் 5-வது இடங்களிலும், ஹம்பி 2 புள்ளிகளுடன் 6 முதல் 8-வது இடங்களிலும் உள்ளனர்.
- நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் வலம் வருகிறது.
- குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் வலம் வருகிறது. ராஜஸ்தான் அணி 20 ரன் வித்தியாசத்தில் லக்னோவையும், 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவையும் அடுத்தடுத்து சாய்த்தது. ஒவ்வொரு ஆட்டத்திலும் வெவ்வேறு வீரர் ஜொலித்து வெற்றிக்கு கணிசமான பங்களிப்பை அளித்ததோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்றனர்.
பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ரன் மழை பொழிகிறார்கள். முதல் 3 ஆட்டங்களில் ஏமாற்றம் அளித்த ஜோஸ் பட்லர் கடந்த ஆட்டத்தில் சதம் விளாசி பார்முக்கு திரும்பி இருக்கிறார். தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் தொடர்ந்து சொதப்புகிறார். முதல் 4 ஆட்டங்களில் 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். துருவ் ஜூரெல், ஹெட்மயர் போதுமான பங்களித்தால் மிடில் வரிசை மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், நன்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல் மிரட்டுகிறார்கள். உள்ளூர் சூழல் அவர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.
குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. தனது முதலாவது ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய குஜராத் அணி அடுத்த ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பந்தாடியது. கடந்த இரு ஆட்டங்களில் முறையே 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடமும், 33 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடமும் தோற்றது.
குஜராத் அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், சாய் சுதர்சனும், பந்து வீச்சில் மொகித் ஷர்மா, உமேஷ் யாதவும் நல்ல நிலையில் உள்ளனர். டேவிட் மில்லர், விருத்திமான் சஹா காயத்தால் அவதிப்படுவது சற்று பின்னடைவாகும். அதே சமயம் வில்லியம்சன், விஜய் சங்கர், ரஷித் கான், நூர் அகமது ஆகியோர் தங்களது முழுதிறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் ராஜஸ்தானின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இல்லாவிட்டால் சிக்கல் தான்.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டத்திலும், ராஜஸ்தான் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், ஆர்.அஸ்வின், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், நன்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல்.
குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), வில்லியம்சன், ஷரத் அல்லது விருத்திமான் சஹா, விஜய் சங்கர் அல்லது அபினவ் மனோகர், ராகுல் திவேதியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், நூர் அகமது, தர்ஷன் நல்கண்டே.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- பஞ்சாப் தரப்பில் ஷஷாங்க் சிங் 46 ரன்னிலும் அசுதோஷ் சர்மா 33 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முல்லாப்பூர்:
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். ஹெட் 21 மற்றும் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த ஏய்டன் மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்த சன்ரைசர்ஸ் அணிக்கு நிதிஷ் குமார் ரெட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். இவர் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதி 11 ரன்களிலும் கிளாசன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அப்துல் சமத் சிறப்பாக ஆடி 25 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்துள்ளது. பஞ்சாப் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அர்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் பட்டேல் மற்றும் சாம் கர்ரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் 0, பிரப்சிம்ரன் சிங் 4, தவான் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ராசா - சாம் கரண் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரண் 29 ரன்னில் வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் ராசா 28 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ஷஷாங்க் சிங் - அசுதோஷ் சர்மா ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். பரப்பரப்பாக சென்ற இந்த போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவியது. ஷஷாங்க் சிங் 46 ரன்னிலும் அசுதோஷ் சர்மா 33 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
- விராட் கோலி சேர்க்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவர் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.
டி20 உலகக்கோபை ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி மே மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு உலகக் கோப்பை வருவதால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
ஆனால் மிகப்பெரிய அளவில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இந்திய அணியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு இருக்காது கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
விராட் கோலி சேர்க்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவர் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.
காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ரிஷப் பண்ட் அணியில் இணைவதற்கு தயாராகி வருகிறார். ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோர் டாப் 3 பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங்கிற்கு இடம் உறுதி என்பதில் சந்தேகம் இருக்காது.
அதிவேகமாக பந்து வீசும் மயங்க் யாதவ் தேர்வாளர்கள் மனதில் இடம் பெறலாம். வேகப்பந்து வீச்சுக்கான இடத்தை பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பிடிக்கலாம்.
- ஏய்டன் மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
- அப்துல் சமத் சிறப்பாக ஆடி 25 ரன்களை குவித்தார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 23 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
சன்ரைசர்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா முறையே 21 மற்றும் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த ஏய்டன் மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்த சன்ரைசர்ஸ் அணிக்கு நிதிஷ் குமார் ரெட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். இவர் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதி 11 ரன்களிலும் கிளாசன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அப்துல் சமத் சிறப்பாக ஆடி 25 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
போட்டி முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்துள்ளது. பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய அர்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் பட்டேல் மற்றும் சாம் கர்ரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரபாடா 1 விக்கெட் வீழ்த்தினார்.
- 30 வருடத்திற்குப் பிறகு ஜாஃப்னாவில் இருந்து கிரிக்கெட்டிற்கு வந்த வீரர்.
- கடந்த வருடம் ராஜஸ்தான் அணியின் நெட் பவுலராக இருந்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இலங்கையின் வணிந்து ஹசரங்கா இடம் பிடித்திருந்தார். இவர் ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் அணியில் இணைவது தாமதமாகி வந்தது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காயம் காரணமாக ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவருக்குப் பதிலாக 22 வயது இளம் வீரரான மற்றொரு இலங்கை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் மாற்று வீரரான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இணைந்துள்ளார். இவர் ஒரேயொரு டி20 போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.
லங்கா பிரீமியர் லீக்கில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக தனது 18 வயதில் 2020-ம் ஆண்டு விளையாடினார். 30 வருடத்திற்குப் பிறகு இலங்கையின் வடக்குப் பகுதியான ஜாஃப்னா பகுதியில் இருந்து வந்த முதல் வீரர் ஆவார்.
கடந்த ஐபிஎல் தொடரின்போது குமார் சங்கக்கரா இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நெட் பவுலராக கொண்டு வந்தார். தற்போது முத்தையா முரளீதரன் அவரை ஐபிஎல் அணிக்கு கொண்டு வந்துள்ளார். வங்காளதேசம் பிரீமியர் லீக்கிலும் விளையாடியுள்ளார். மொத்தமாக 33 டி20 போட்டியில் விளையாடி 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர் ரிஸ்ட் லெக் ஸ்பின்னர் ஆவார்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் 14 ஆட்டங்களில் ஐதராபாத்தும், 7 ஆட்டங்களில் பஞ்சாப்பும் வென்று இருக்கின்றன.
முல்லாப்பூர்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14 ஆட்டங்களில் ஐதராபாத்தும், 7 ஆட்டங்களில் பஞ்சாப்பும் வென்று இருக்கின்றன.






