search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அது ஹர்திக் பாண்ட்யா தவறு கிடையாது: கங்குலி
    X

    அது ஹர்திக் பாண்ட்யா தவறு கிடையாது: கங்குலி

    • மும்பை இந்தியன்ஸ் அணிதான் அவரை கேப்டனாக நியமித்தது.
    • ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பக்கூடாது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் முக்கியமான அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை சாம்பியன் கோப்பை வாங்கிக் கொடுத்தவர் ரோகித் சர்மா. தற்போது அவர் மூன்று வடிவிலான இந்திய அணிக்கும் கேப்டனாக இருக்கிறார்.

    ஆனால், ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது. இதனை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    போட்டி நடைபெறும்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். தற்போதும் எழுப்பி வருகின்றனர். அணி நிர்வாகம், ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரால் சரி செய்ய முடியவில்லை. இது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது. இதற்கிடையே ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக இருப்பதாக யூகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில் டெல்லி கேப்பிடடல்ஸ் அணி டைரக்டர் சவுரவ் கங்குலி இந்த விவகாரம் தொடர்பாக கூறியதாவது:-

    ரசிர்கள் ஹர்திக் பாண்ட்யாவிற்கு எதிராக கோஷம் எழுப்பக் கூடாது. அது சரியானது அல்லது. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை கேப்டனாக நியமித்துள்ளது. நீங்கள் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தாலும் அல்லது உங்கள் அணிக்கு கேப்டனாக இருந்தாலும் நீங்கள் கேப்டனாக நியமிக்கப்படுகிறீர்கள். விளையாட்டில் அதுதான் நடக்கும்.

    ரோகித் சர்மா வேற லெவல். மும்பை அணிக்கான அவரது ஆட்டம், இந்தியாவுக்கான அவரது ஆட்ம் மிகவும் வித்தியாசமான லெவல் கொண்டது. அது கேப்டனாகவும், ஒரு வீரராகவும் அடங்கும். இது ஹர்திக் பாண்ட்யா தவறு அல்ல. அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×