search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: மரியா சக்காரி, காலின்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
    X

    சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: மரியா சக்காரி, காலின்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

    • சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான கிரீசின் மரியா சக்காரி, ரஷியாவின் வெரோனிகா உடன் மோதினார்.

    இதில் மரியா சக்காரி 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ், பெல்ஜிய வீராங்கனை எலைஸ் மெர்டன்சுடன் மோதினார். இதில் காலின்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் மரியா சக்காரி, காலின்சுடன் மோதுகிறார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலா, ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினாவை சந்திக்கிறார்.

    Next Story
    ×