என் மலர்
விளையாட்டு
- செர்பியா வீராங்கனையான ஓல்கா டானிலோவிச் குரோஷிய வீராங்கனையான டோனா வெகிக்கை எதிர் கொண்டார்.
- 4-வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப் இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவை எதிர்கொள்ள உள்ளார்.
பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க முன்னணி வீராங்கனையான கோகோ காப் உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கோகோ காப் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் 4-வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப் இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவை எதிர்கொள்ள உள்ளார்.
இதேபோல செர்பியா வீராங்கனையான ஓல்கா டானிலோவிச் குரோஷிய வீராங்கனையான டோனா வெகிக்கை எதிர் கொண்டார். இதில் முதல் செட்டை ஒரு புள்ளி கூட எடுக்காமல் இழந்த அவர் அடுத்த 2 செட்டுகளை வென்றார். இதன் மூலம் 0-6, 7-5, 7-6 (8) என்ற செட் கணக்கில் ஓல்கா டானிலோவிச் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- பாபர் அசாம் தொடக்க வீரராக விளையாடுவதற்கு பதிலாக அந்த வரிசையில் களமிறங்க வேண்டும் என மாலிக் தெரிவித்துள்ளார்.
- நாம் முன்பு கடினமான இடத்தில் இருந்து தற்போது முன்னேறியுள்ளோம்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியானது 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் முதல் மற்றும் மூன்றாவது போட்டியானது மழையால் கைவிடப்பட்டது. 2-வது மற்றும் 4-வது டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று அசத்தியது. இதன்மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடர் நெருங்கும் சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது பெரும் விமர்சனங்களுக்கும் வழிவகுத்துள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் மீதான விமர்சனங்கள் தான் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் மூன்றாம் இடத்தில் தான் களமிறங்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் மாலிக் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இது ஒரு கடினமான தொடர். ஆனால் நினைவில் கொள்ளுங்கள். நாம் முன்பு கடினமான இடத்தில் இருந்து தற்போது முன்னேறியுள்ளோம். அதேசயம் பாபர் அசாம் மூன்றாம் இடத்தில் களமிறங்க வேண்டும்.
ஏனெனில் மிடில் ஓவர்களில் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்யும் பேட்டர் நிச்சயம் தேவை. அதற்கான சிறந்த தேர்வு பாபர் அசாம் தான். ஏனெனில் அவரின் வழிகாட்டுதலுக்கு கீழ் மிடில் ஆர்ட்ர் பேட்டர்களால் மேற்கொண்டு சிறப்பாக விளையாட முடியும்.
இவ்வாறு மாலிக் கூறினார்.
- டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி நியூயார்க் புறப்பட்டு சென்றுள்ளார்.
- இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.
நியூயார்க்:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.
இந்த தொடரில் விளையாடுவதற்காக இதற்கான இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே நியூயார்க் சென்று அங்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி செல்லவில்லை.
இதனையடுத்து நேற்று மும்பை விமான நிலையத்தில் இருந்து டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி நியூயார்க் புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் டி20 உலக கோப்பைக்காக நியூயார்க் புறப்பட்ட விராட் கோலியை மும்பையில் உள்ள அமெரிக்க துணைத்தூதரக அதிகாரி மைக் ஹேங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- நிஷாந்த் தேவ் 71 கிலோ எடைப்பிரிவு போட்டியில் மால்டோவா வீரரை 5-0 என வீழ்த்தினார்.
- ஏற்கனவே மூன்று இந்திய வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக தகுதி பெறுவதற்கான தகுதிச் சுற்றுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே நடைபெற்ற தகுதிச் சுற்று ஒன்றில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை நிஷாந்த் தேவ் இழந்தார். இந்த நிலையில் இன்று மற்றொரு தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் நிஷாந்த் தேவ் 71 கிலோ எடைப்பிரிவு போட்டியில் மால்டோவா வீரரை 5-0 என வீழ்த்தி பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இடம் பிடித்தார். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் ஆவார்.
இந்தியாவைச் சேர்ந்த பெண் வீராங்கனைகளான நிகாத் ஜரீன் (50 கிலோ), ப்ரீத் பவார் (54 கிலோ), லோவ்லினா போர்கோஹெய்ன் (75) ஆகியோர் ஏற்கனவே பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்னர்.
அருந்ததி சவுத்ரி (66 கிலோ), அமித் பங்கல் (51) ஆகியோர் தகுதிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
- இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதிய 2 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
- 4 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஓவல்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியும், 3-வது டி20 போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஓவலில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷீத், லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் 4-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரான அசாம் கான் மீது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஸ் ராஃப் கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த போட்டியில் 9-வது ஓவரை ஹரிஸ் ராஃப் வீசினார். இதனை இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் வில் ஜக்ஸ் எதிர் கொண்டு ஆடினார். முதல் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் திணறினார். 3-வது பந்தை அதிரடியாக விளையாடினார். ஆனால் பந்து பேட்டில் பட்டு கீப்பரிடம் சென்றது. இதனால் ஹரிஸ் ராஃப் விக்கெட் என கொண்டாடினார். ஆனால் விக்கெட் கீப்பராக நின்ற அசாம் கான் அந்த எளிதான கேட்ச்சை தவற விட்டார். இதனை சற்று எதிர்பார்காத ஹரிஸ் கோபத்தில் கத்தினார்.
இதற்கு ரசிகர்கள் அசாம் கானை ஏன் அணியில் வைத்துள்ளீர்கள் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி 2 போட்டியிலும் அசாம் கான் பெரிய அளவில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.
- பாரிஸ் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி தடகள வீரர் நீரஜ் சோப்ரா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், உலக சாம்பியன் போட்டியில் சாதனைப் படைத்துள்ளார்.
பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் சாதனைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்படுவதற்காக ஐரோப்பியாவில் தனது பயிற்சியாளர் மற்றும் பிசியோவுடன் சென்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டு இருந்தார். இந்த நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சகம் நீரஜ் சோப்ரா வெளிநாட்டில் சென்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் மே 29-ந்தேதியில் இருந்து ஜூலை 28-ந்தேதி வரை ஐரோப்பியாவில் உள்ள பல்வேறு இடங்களில் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்காக TOPS என்ற திட்டம் இந்தியாவில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீர்ஜ் சோப்ராவின் பயிற்சிக்காக தொகை வழங்கப்படும்.
நீரஜ் சோப்ராவை போன்று பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற சில வீரர்கள் வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்வதற்காக உதவிகள் கேட்டுள்ளது.
- இந்த பதிவிக்கான விண்ணப்பம் கடந்த மே 27 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் பி.சி.சி.ஐ இன்னும் எந்த முடிவையும் எட்டவில்லை.
- தலைமைப் பண்புகளில் சிறந்து விளங்கும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி இந்திய அணியின் பாயிற்சியாளர்காக வர முடியாதா? என்ற கேள்வி சிலருக்கு எழக் கூடும்.
இந்திய அணியின் பயிற்சயாளர் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் ஐசிசி 2024 உலகக் கோப்பையுடன் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு பொருத்தமான மாற்றாக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பி.சி.சி.ஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
பயிற்சியாளர் பதவிக்குக் கவுதம் காம்பீர், விவிஎஸ். லக்ஷ்மன் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடத் தொடங்கியுள்ளன. ஐபிஎல் 2023 தொடரில் கேகேஆர் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் விளங்கியதால் அவருக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால் கேகேஆர் இணை உரிமையாளர் ஷாருக் கான், காம்பீரை தங்கள் அணியிலேயே தக்கவைத்துக்கொள்ள விரும்புவதால் காம்பீர், இந்தியஅணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதிவிக்கான விண்ணப்பம் கடந்த மே 27 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் பி.சி.சி.ஐ இன்னும் எந்த முடிவையும் எட்டவில்லை.
இதற்கிடையே தலைமைப் பண்புகளில் சிறந்து விளங்கும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி இந்திய அணியின் பாயிற்சியாளர்காக வர முடியாதா? என்ற கேள்வி சிலருக்கு எழக் கூடும். பி.சி.சி.ஐ விதிகளின்படி அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற ஒருவரே இந்திய பயிற்சியாளர் பதவிக்கு தகுதி பெற்றவர் ஆவார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற்றிருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரராக ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்னும் டோனி தொடர்கிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் 2024 தொடருடன் அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டோனியின் தரப்பில் இருந்து இன்னும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே அவர் தற்போதும் சிஎஸ்கே வீராகவே உள்ளதால் பயிற்சியாளர் பதவிக்கு டோனி தகுதி பெற்றவர் இல்லை.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதிவுக்கு சுமார் 3000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை போலி விண்ணப்பங்களாகும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயரில் விண்ணப்பங்கள் வந்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றையெல்லாம் சரி செய்து இறுதிக் கட்ட தேர்வர்களின் பட்டியலை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் இன்று நடந்தது.
- இதில் இந்திய ஜோடி தென்கொரிய ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் தென் கொரியாவின் கிம் சோ யோங்-காங் யீ யாங் ஜோடியுடன் மோதியது.
இதில் முதல் செட்டை 18-21 என இழந்த இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 21-19, 24-22 என போராடி வென்று தென் கொரிய ஜோடிக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கும் முன்னேறியது.
- தற்போதுள்ள 3+1 விதிகளின்படி அணியில் ஏற்கனவே உள்ள 3 வீரர்களையும் ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) மூலம் ஒருவரையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
- இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன.
ஐபிஎல் 2024 தொடர் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்காக இப்போதே ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, ஐபிஎல் 2025 தொடருக்கான ஆலோசனையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் அணிகளில் ரிடன்ஷன் விதிகளின்படி வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்க பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
தற்போதுள்ள 3+1 விதிகளின்படி அணியில் ஏற்கனவே உள்ள 3 வீரர்களையும் ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) மூலம் ஒருவரையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன. ரிடன்க்ஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது ஏலத்தை அர்த்தமற்றதாகிவிடும் என்று சில ஐபிஎல் மூத்த அதிகாரிகள் அபிப்பிராயப்படுகின்றனர்.

ஏலங்கள் ஐபிஎல் தொடர்களின் முக்கியமான அங்கம் என்றும் ஐபிஎல் போட்டிகளுக்கு இணையாக ஏலங்களும் தொடரை சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஐபிஎல் தொடருக்கு அழகு சேர்க்கும் ஏலங்கள், ரிடன்க்ஷன் எண்ணிக்கை 4 இல் இருந்து 6 முதல் 8 வரை அதிகரிக்கப்பட்டால் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிடும் என்றும் இது ஐபிஎல் தொடருக்கு ஆரோக்கியமானதாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.

விராட் கோலி உள்ளிட்ட சில முக்கிய வீரர்களே ஒரே அணியின் அடையாளமாக மாறியுள்ளனர். அவர்கள் இதுநாள் வரை ஒரே அணிக்கு விளையாடி வருகின்றனர். மற்றைய வீரர்களும் ஒரே அணியின் அடையாளமாக மாறினால் ஏலம் எடுக்கும் முறை தேவைப்படாது. ஆனால் பெரும்பான்மை வீரர்கள் ஒரே அணியுடன் தங்களை ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்திக்கொள்ள இன்னும் வெகு காலம் ஆகும். அதுவரை ஏல முறை தொடரவே செய்யும். இதுவே ரிட்டன்க்ஷன் முறைக்கு தீர்வாக இருக்குமே தவிர ரிட்டன்க்ஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது பயனற்றது என்று கூறப்படுகிறது.
இதற்கு மாற்றுக்கருத்தாக, "ஐபிஎல் அணிகள் ஏலம் எடுத்த வீரர்கள் மீது அதிக அளவில் முதலீடு செய்கிறது, அவர்களுக்கு நேரத்தையும் பணத்தையும் செலவளித்து பயிற்சி தந்து தயார் படுத்துகிறது. இதனால் அந்த வீரர் அந்த அணியிலேயே தொடர்ந்து விளையாடுவதே நியாயமானதாக இருக்கும். இதற்கு ரிட்டன்க்ஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது மிகவும் பயனளிக்கும்" என்றும் சில மூத்த ஐபிஎல் அதிகாரிகளால் கூறப்படுகிறது.

அடுத்த ஐபிஎல் தொடர்பாக பிசிசிஐ சார்பில் அணி உரிமையாளர்களுடன் சமீபத்தில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அது நிகழவில்லை. புதியதாக செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் இது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்களின் கருத்துக்களை பெற்ற பின் முடிவு செய்யப்படும் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கேண்டியாக் பார்க் மைதானத்தில் போதுமான வசதிகள் இல்லை.
- இதனால் இந்திய வீரர்கள் பயிற்சிகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
நியூயார்க்:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.
டி20 உலகக் கோப்பை தொடருக்காக நியூயார்க், டல்லாஸ், புளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. பயிற்சி செய்வதற்காகவும் சில மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை தற்காலிக ஏற்பாடுகளாக மட்டுமே உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் 4 நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பயிற்சி செய்வதில் சிரமம் ஏற்படுவதாக இந்திய அணி வீரர்கள் குற்றம் சாட்டினர்.
கேண்டியாக் பார்க் பகுதியில் பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கும், இந்திய அணி விளையாட உள்ள மைதானத்திற்கும் இடையில் நீண்ட தூரம் இருக்கிறது.
பயிற்சிக்கு ஏற்றவாறு மைதானங்களில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. எல்லாமே தற்காலிக ஏற்பாடுதான். பிட்சில் இருந்து அனைத்துமே தற்காலிகமானது என இந்தியா சார்பில் கூறப்பட்டுள்ளது.
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் நேற்று நடந்தது.
- இதில் இந்திய ஜோடி தென்கொரிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் ஆல் இங்கிலாந்து சாம்பியனான தென் கொரியாவின் பாக் ஹா நா-லீ சோ ஹி ஜோடியுடன் மோதியது.
இதில், இந்திய ஜோடி 21-9, 14-21, 21-15 என்ற செட் கணக்கில் தென் கொரிய ஜோடிக்கு அதிர்ச்சி அளித்து காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 59 நிமிடங்கள் நடந்தது.
தரவரிசையில் 30-வது இடத்தில் இருக்கும் திரிஷா ஜாலி-காயத்ரி கூட்டணி, தென்கொரிய ஜோடிக்கு எதிராக பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.
ஓவல்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியும், 3-வது டி20 போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஓவலில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. உஸ்மான் கான் 38 ரன், பாபர் அசாம் 36 ரன், முகமது ரிஸ்வான் 23 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷீத், லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க வீரர்களான பில் சால்ட், ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடினர்.
பிலிப் சால்ட் 24 பந்தில் 45 ரன்னும், ஜாஸ் பட்லர் 21 பந்தில் 39 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். வில் ஜாக்ஸ் 20 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், 15.3 ஓவரில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.
ஆட்ட நாயகன் விருது அடில் ரஷீத்துக்கும், தொடர் நாயகன் விருது ஜாஸ் பட்லருக்கும் வழங்கப்பட்டது.






