என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அமெரிக்காவில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
    • இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி காலிறுதியில் வென்றது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ்-இங்கிலாந்தின் லூகா பவ் ஜோடி, ஈக்வடாரின் எஸ்கோபர்-கஜகஸ்தானின் நெடோவ்யெசோவ் ஜோடி உடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி 6-1, 4-6, 10-8 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • ஆப்கானிஸ்தான் அணி துணை பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டார்.
    • இவர் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தவர்.

    காபூல்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளரான ஆர்.ஸ்ரீதர் ஆப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களுக்கான ஆப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இவருடன் நீண்ட காலம் ஒப்பந்தம் மேற்கொள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

    • நான் விக்கெட் கீப்பரை மறந்துவிட்டேன். அதிர்ஷ்டமாக ராகுல் டிராவிட் அணியில் இருந்தார்.
    • நான் பகுதி நேர விக்கெட் கீப்பரை தேர்வு செய்திருப்பதாக எல்லோரும் நினைத்திருப்பார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் சில நாட்களுக்கு முன், ஆல் டைம் இந்தியா லெவன் அணியை வெளியிட்டார். அதில் எம்.எஸ். டோனிக்கு இடம் கொடுக்கவில்லை.

    தினேஷ் கார்த்திக் ஆல் டைம் ஆல் ஃபார்மட் இந்திய அணி:-

    வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே, ஜஸ்ப்ரித் பும்ரா, ஜஹீர் கான். 12-வது வீரர்: ஹர்பஜன் சிங்

    கேப்டன் யார் என்றும் அறிவிக்கவில்லை. விக்கெட் கீப்பர் யார் என்றும் அறிவிக்கவில்லை. அத்துடன் 1983-ம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவுக்கு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் அணியில் இடம் பெறவில்லை. ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வாங்கிக் கொடுத்த எம்.எஸ். டோனியுடன் பெயரும் இடம்பெறவில்லை.

    இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அத்துடன் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானது. இந்த நிலையில் டோனியை சேர்க்காதது மிகப்பெரிய தவறு எனத் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் கூறுகையில் "நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். உண்மையாகவே இது மிகப்பெரிய தவறு. என்னுடைய இந்த பேச்சு வெளியானது பின்னர், இது குறித்து உணர்ந்தேன். நான் 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்யும்போது பல்வேறு விசயங்கள் நடைபெற்றன.

    நான் விக்கெட் கீப்பரை மறந்துவிட்டேன். அதிர்ஷ்டமாக ராகுல் டிராவிட் அணியில் இருந்தார். நான் பகுதி நேர விக்கெட் கீப்பரை தேர்வு செய்திருப்பதாக எல்லோரும் நினைத்திருப்பார்கள். நான் உண்மையாகவே ராகுல் டிராவிட்டை விக்கெட் கீப்பர் என நினைக்கவி்லை. விக்கெட் கீப்பராக இருந்த நான் விக்கெட் கீப்பர் இருப்பதை மறந்துவிட்டேன் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இது ஒரு தவறு" எனத் தெரிவித்துள்ளார்.

    • டோனி தொடங்கி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் சிங் பயோபிக் வரை இந்த டிரண்ட் தொடர்ந்து வருகிறது.
    • பயோபிக்கில் ஹீரோவாக நடிக்க யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராகச் இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. உலகக்கோப்பையுடன் தனது பதவிக்காலத்தை முடித்துள்ள ராகுல் டிராவிட் மும்பையில் நடந்த கிரிக்கெட் வீரர்களுக்கான  தனியார் விருது விழாவில் தனது பயோபிக் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

    சமீப காலமாக விளாயாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக எடுப்பது டிரண்ட் ஆகி வருகிறது. டோனி தொடங்கி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் சிங் பயோபிக் வரை இந்த டிரண்ட் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ட்ராவிட் -இடம், உங்களின் பயோபிக் படமாக்கப்பட்டால் யாரை உங்களின் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு சிரித்தபடி பதிலளித்த டிராவிட், நல்ல சம்பளம் கொடுத்தால் நானே எனது பயோபிக்கில் நடித்து விடுகிறேன் என்று தெரிவித்தார். இதனால் விருது அரங்கம் சிரிப்பலையில் ஆழ்ந்தது. தொடர்ந்து பேசிய டிராவிட் நாடு முழுவதும் பயணித்து ரசிகர்களின் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் அனுபவிக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார். 

    • முதல் இன்னிங்சில் ஷகீல், ரிஸ்வான் அபாரமாக விளையாடி சதம் விளாசினர்.
    • பாகிஸ்தான் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்யும்போது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்திருந்தார்.

    பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதன் இன்னிங்சில் பாகிஸ்தான் 448 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் அப்போது 171 ரன்கள் எடுத்திருந்தார். இன்னும் 29 ரன்கள் எடுத்தால் இரட்டை சதம் அடித்திருப்பார். அதற்குள் கேப்டன் மசூத் டிக்ளேர் செய்து அவரது இரட்டை சதத்தை தடுத்துவிட்டார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    அதேவேளையில் 141 ரன்கள் விளாசிய பாகிஸ்டதான் அணியின் ஷகீல் கூறியதாகவது:-

    நாம் ரிஸ்வான் டபுள் செஞ்சூரி அடிக்கவில்லை என்று பார்க்கிறோம். முதல் இன்னிங்ஸ் டிக்ளேர் ரிஸ்வான் இரட்டை சதம் அடிப்பதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட முடிவு என்று நான் நினைக்கவில்லை.

     ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் டிக்ளேர் செய்ய இருக்கிறோம் என்பதை ரிஸ்வானிடம் தெளிவாக சொல்லப்பட்டது. அதனால் எப்போது அறிவிப்போம் என யோசனை அவருக்கு இருந்தது. நாம் குறைந்தபட்சம் 450 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இவ்வாறு ஷகீல் தெரிவித்துள்ளார்.

    ரசிகர்கள் பாகிஸ்தானின் டிக்ளேர் முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. 500 ரன்களை தொட்டதும் டிக்ளேர் செய்திருக்கலாம். அப்படியிருந்திருந்தால் ரிஸ்வான் டபுள் செஞ்சூரி அடித்திருப்பார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • பாரீஸ் ஒலிம்பிக்கில் 89.45 மீட்டர் தூரம் வரை வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    • தற்போது 89.49 மீட்டர் தூரம் வீசி சீசன் பெஸ்ட்-ஐ பதிவு செய்துள்ளார்.

    சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் டைமண்ட் லீக் நடைபெற்றது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.49 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த 2-வது இடம் பிடித்தார். சமீபத்தில் முடிவடைந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.

    கிரேனடாவின் ஆண்டர்சன் பீட்டர் 90.61 மீட்டர் தூரம் வீசி முதல் இடம் இடம் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 87.08 மீட்டர் தூரம் வீசி 3-வது இடம் பிடித்தார்.

    இதற்கு முன்னதாக நீரஜ் சோப்ராவின் சீசனி பெஸ்ட் 89.34 மீட்டராக இருந்தது. ஒலிம்பிக் இறுதிப் போ்டியில் 89.45 மீட்டர் தூரம் வரை வீசினார். தற்போது 89.49 மீட்டர் வரை வீசி புதிய சீசன் பெஸ்ட் வைத்துள்ளார்.

    முதல் முயற்சியில் 82.10 மீட்டர் தூரம் வீசினார். 2-வது முயற்சியில் 83.21 மீட்டர் தூரம் வரை வீசினார். 3-வது முயற்சியில் 83.13 மீட்டர் தூரம் வீசினார்.

    5-வது முயற்சியில் 85.58 மீட்டர் தூரம் வீசினார். கடைசி முயற்சியாள 6-வது முயற்சியில் 89.49 மீட்டர் தூரம் வீசினார்.

    • தங்களது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக வீராங்கனைகளும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
    • இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து டெல்லி துணை ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரும் 6 முறை பாஜக எம்.பியாகவும் இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் மீது எந்த விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் பஜ்ரங் புனியா , சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கடந்த வருடத்தின் தொடக்கம் முதல் பல மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

    குறிப்பாக பஜ்ரங் புனியா தனது பத்ம ஸ்ரீ விருதை மோடியின் இல்லத்தின் முன் இருந்த சாலையில் வைத்துவிட்டுச் சென்றது பரபரப்பைக் கிளப்பியது. போராட்டத்தை ஒடுக்க அரசு கடுமையான முறைகளைப் பிரயோகித்தது. ஆனாலும் வீராங்கனைகள் விடாப்பிடியாக போராட்டத்தைத் தொடர்ந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டது.

    பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்களை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் பிரிஜ் பூஷன் மீது பதியப்பட்ட கிரிமினல் வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வழக்கு தொடர்ந்து நடந்து வரும் நிலையில், பிரிஜ் பூஷனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க இருந்த பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பை டெல்லி போலீஸ் வாபஸ் பெற்றுள்ளதாக வினேஷ் போகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

     

    இதற்கிடையில் தங்களது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக வீராங்கனைகளும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து இருந்து வாபஸ் பெற்ற பாதுகாப்பை உடனடியாக மீண்டும் வீராங்கனைகளுக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து டெல்லி துணை ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பை வாபஸ் பெறவில்லை என்று டெல்லி போலீஸ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஹாரி ப்ரூக் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஜேமி ஸ்மித் 72 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி நேற்றுதினம் மான்செஸ்டரில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்களும், மிலன் ரத்னாயகே 72 ரன்களும் சேர்க்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்று முன்தினம் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் ஏதும் இழக்காமல் 22 ரன்கள் எடுத்திருந்தது.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்க வீரர் பென் டக்கெட் 18 ரன்னிலும், லாரன்ஸ் 30 ரன்னிலும் வெளியேறினர். கேப்டன் ஒல்லி போப் 6 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    நட்சத்திர வீரர் ஜோ ரூட் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஹாரி ப்ரூக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அதபின் வந்த விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்தும அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 61 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 72 ரன்னுடனும், அட்கின்சன் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது.

    • 26- வது சியாட் கிரிக்கெட் விருது வழங்கும் விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.
    • இவ்விழாவில் இந்திய பிரபல கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.

    26- வது சியாட் கிரிக்கெட் விருது வழங்கும் விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கினர்.

    இவ்விழாவில் இந்திய பிரபல கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் இருவருக்கும் இடையே நடந்த நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    விழாவில் கலந்து கொண்ட ரோகித் சர்மா அவரது இருக்கை தெரியாமல் கண்டுப்பிடிக்க தடுமாற்றமான மனநிலையில் இருந்த போது அதை கவனித்த ஸ்ரேயஸ் அய்யர் அவரது இருக்கையில் இருந்து எழுந்து ரோகித் சர்மாவை தன் இருக்கையில் அமருமாறு மரியாதையுடன் கேட்டுக்கொண்டார்.

    • கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூடியூபராக புது அவதாரம் எடுத்துள்ளார்.
    • யூடியூப் சேனல் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்களை பெற்றார்.

    உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 39 வயதான ரொனால்டோ கால்பந்து வாழ்க்கையில் தனது கடைசி கட்டத்தை எட்டியுள்ளார்.

    கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூடியூபராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

    'யுஆர் கிறிஸ்டியானோ' என்ற புதிய யூடியூப் சேனலை அவர் நேற்று தொடங்கினார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "நான் யுஆர் கிறிஸ்டியானோ என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஆரம்பித்துள்ளேன். அதை அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்" என்று காமெடியாக பேசியிருந்தார்.

    இதுவரை இந்த சேனலில் 18 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் சேனல் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்களை ரொனால்டோ பெற்றுள்ளார்.

    இந்நிலையில், சேனல் தொடங்கிய 24 மணிநேரத்தில் 20 மில்லியனுக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். மேலும், யூடியூபில் விரைவாக 20 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்ற சேனல் என்ற சாதனையையும் ரொனால்டோ படைத்துள்ளார்.

    • வங்கதேசம் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 448 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

    பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. ராவல்பிண்டியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கம்தான் கிடைத்தது. அந்த அணியின் அப்துல்லா ஷபிக் 2 ரன்களிலும் அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவரைத் தொடர்ந்து களணிறங்கிய பாபர் அசாம் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

    இரண்டாவது வீரராக களமிறங்கிய சயிம் ஆயுப் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். இவரும் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சௌத் ஷகீல் பொறுமையாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டுள்ளார். இவருடன் ஆடிய முகமது ரிஸ்வான் பொறுப்பாக ஆடினார்.

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து158 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷகீல் மற்றும் ரிஸ்வான் முறையே 57 மற்றும் 24 ரன்களை எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் சார்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் மஹ்மூத் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஷகீல் மற்றும் ரிஸ்வான் தொடர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் சதம் அடித்த நிலையில், ஷகீல் 141 ரன்களை எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த சல்மான் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ஒருபக்கம் ரிஸ்வான் தொடர்ச்சியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். முதல் இன்னிங்ஸில் 113 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி 448 ரன்களை எடுத்த போது முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்தது. வங்கதேசம் சார்பில் மெஹ்டி ஹாசன் மற்றும் ஷகிப் அல் ஹாசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்களை சேர்த்துள்ளது. வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 421 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

    • இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
    • இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெற்றிப்பெற்றது.

    அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இந்த தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று வெளியிட்டுள்ளது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெற்றிப்பெற்றது. அதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த போட்டி டிராவில் முடிந்தது. கடசியாக ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலயாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றது.

    இந்நிலையில் தற்போது இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20 -ம் தேதி லீட்ஸ் மைதானத்திலும், 2-வது போட்டி ஜூலை 2-ம் தேதி பர்மிங்காமிலும், 3-வது போட்டி ஜூலை 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், 4-வது போட்டி மான்செஸ்டரிலும், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31-ம் தேதி ஓவல் மைதானத்திலும் நடைபெற உள்ளது.

    முன்னதாக இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    ×