என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • தற்போது 21 பிராண்டுகளின் விளம்பர முகமாக நீரஜ் சோப்ரா உள்ளார்
    • ஒரு பிராண்டுக்கு பிரதிநிதியாக இருக்க ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை நீரஜ் சோப்ரா சார்ஜ் செய்ய உளளார்

    சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களைக் கொண்டு தங்களின் நிறுவனத்துக்கு விளம்பரம் தேடித் கொள்ளும் போக்கு உலகம் முழுவதும் காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் பிரபலங்களின் மீது மக்கள் கொண்டுள்ள அளவுகடந்த கிரேஸை நிறுவனங்கள் நன்கு பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி ஒலிம்பிக்ஸ் வீரர்கள் வரை பல்வேறு நிறுவனங்களின் முகங்களாக முன்னிறுத்தப்படுகின்றனர்.

    பாரீஸ் ஒலிம்பிக்சில் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு வெண்கலம் வென்ற மனு பாக்கர் பாரீஸ் இருந்த சமயத்திலேயே பல்வேறு பிராண்டுகள் தங்களின் விளம்பரங்களில் நடிக்கும்படி அவரை சுற்றி வலைத்தன. அந்த வகையில் இந்திய ஈட்டியெறிதல் நட்சத்திரமாக விளங்கும் நீரஜ் சோப்ராவையும் பிராண்டுகள் விட்டு வைக்கவில்லை.

     

    2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில் நீரஜ் சோப்ராவின் பிராண்ட் வேல்யூ இந்த வருடம் 50 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 21 பிராண்டுகளின் விளம்பர முகமாக நீரஜ் சோப்ரா உள்ள நிலையில் இந்த வருட இறுதிக்குள் 32 முதல் 34 அந்த எண்ணிக்கையானது அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. தற்போது ஒரு பிராண்டுக்கு பிரதிநிதியாக இருக்க ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை நீரஜ் சோப்ரா சார்ஜ் செய்ய உள்ளாராம்.

    • டேபிள் டென்னிஸில் சீனா மற்றும் கொரிய வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்
    • 24 வயதாகும் அர்ச்சனா காமத் டேபிள் டென்னிஸில் இருந்து விலகி படிப்பைத் தொடர முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

    2024 பாரீஸ் ஒலிம்பிக்சில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில் மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா மற்றும் அர்ச்சனா காமத் ஆகியோர் போட்டியிட்டனர். ஒற்றயர் பிரிவில் போட்டியிட்ட மனிகா பத்ரா மற்றும் ஸ்ரீஜா அகுலா ஆகியோர் முதல்முறையாகக் காலிறுதிக்கு முந்திய சுற்று வரை முன்னேறி சாதனை படைத்தனர். அணியாகவும் இந்த மூன்று வீராங்கனைகளுக்கு ஒன்றிணைத்து காலிறுதி சுற்று வரை முன்னேறி சாதித்தனர்.

    காலிறுதிப் போட்டியில் இந்திய அணியில் அர்ச்சனா காமத் மட்டுமே ஒரேயொரு சுற்றில் வெற்றிபெற்றிருந்தார். ஆனால் இந்த வெற்றிகள் அர்ச்சனாவுக்கு போதுமானதாக இல்லை. 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்க உள்ள ஒலிம்பிக்கிலும் வெற்றி பெறுவோமா என்ற உறுதியாகத் தெரியாத நிலையில் டேபிள் டென்னிஸை கைவிட்டு அமெரிக்காவில் படிப்பைத் தொடர அர்ச்சனா முடிவெடுத்துள்ளார். 

    டேபிள் டென்னிஸில் சீனா மற்றும் கொரிய வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் வருங்காலங்களில் வெற்றி என்பது சத்தியம்தானா என்று தனது பயிற்சியாளர் கார்க் - உடன் தீவிரமாக ஆலோசித்து உள்ளார். உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளை பொறுத்தவரை அரையிறுதிக்கு முன்னேறினால் மட்டுமே பொருளாதார ரீதியாக உதவிகள் கிடைக்கும். எனவே பொருளாதார ரீதியாகவும் பலன்கள் இல்லாத நிலையில்தான் 24 வயதாகும் அர்ச்சனா காமத் டேபிள் டென்னிஸில் இருந்து விலகி படிப்பைத் தொடர முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. 

    முன்னதாக தனது இளைய சகோதரர் நாசாவில் பணியாற்றி வருவதாகவும், அவர் தான் தனது ரோல் மாடல் என்றும் அர்ச்சனா பேசியிருந்தார். படிப்பை தொடர அவர் எனக்கு ஆதரவாக இருக்கிறார். நல்லபடியாக படித்து முடிக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் பொருளாதாரம் தொடர்புடைய படிப்பில் அர்ச்சனா சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    • கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

    இந்த கொலை தொடர் பாக போலீசில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மருத்துவர் கொலையை கண்டித்து நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்டார். போராட்டத்தில் பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கோரி கங்குலி மெழுகுவர்த்தி ஏற்றினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கங்குலியின் மனைவி டோனா, "பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். இது மேற்கு வங்கம் மட்டுமல்ல. எங்கிருந்தோ யாரோ ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக ஒவ்வொரு நாளும் செய்தி வருகிறது, அது நல்ல செய்தி அல்ல. ஒவ்வொரு தனிநபருக்கும் பாதுகாப்பான சமூகம் தேவை" என்று தெரிவித்தார்.

    பின்னர் பேசிய கங்குலியின் மகள் சனா, "போராட்டங்கள் தொடர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து ஓய்வு பெறுவதாக பி.ஆர் ஸ்ரீஜேஷ் அறிவித்தார்.
    • முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.

    33-வது ஒலிம்பிக் தொடரில் நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. இதில், ஹாக்கி இந்தியா அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் சிங் அடுத்தடுத்து 2 கோல் அடிக்கவே இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்று வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது.

    இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து அணியின் கோல் கீப்பர் ஓய்வு பெறுவதாக பி.ஆர் ஸ்ரீஜேஷ் அறிவித்தார்.

    இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது.

    முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் வழங்கும் முடிவு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஓய்வுக்கு பின்னர் இந்திய ஹாக்கி அணியில் இளம் வீரர்களை இணைக்கும் இலக்கை நோக்கி இளைஞர்களுக்கு ஸ்ரீஜேஷ் ஹாக்கி பயிற்சி அளித்து வருகிறார்.

    இந்நிலையில், இந்திய ஹாக்கியில் அவர் அளித்த பங்களிப்பை பாராட்டும் வகையில் கேரள அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

    • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது.
    • 2007-ம் ஆண்டுக்கு பிறகு 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி 2-முறையாக கைப்பற்றியது. 2007-ம் ஆண்டு டோனி தலைமையில் முதல் முறை கைப்பற்றியது. அதன் பிறகு 2024-ம் ஆண்டு தான் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுடன் இன்று மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது அவர்கள் தங்களுடன் T20 உலகக் கோப்பையையும் எடுத்து சென்று சாமி சிலை அருகில் வைத்து பூஜை செய்தனர்.

    • வங்கதேசம் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
    • மழை காரணமாக போட்டியில் இடையூறு ஏற்பட்டது.

    பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. ராவல்பிண்டியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கம்தான் கிடைத்தது. அந்த அணியின் அப்துல்லா ஷபிக் 2 ரன்களிலும் அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவரைத் தொடர்ந்து களணிறங்கிய பாபர் அசாம் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

    இரண்டாவது வீரராக களமிறங்கிய சயிம் ஆயுப் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். இவரும் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சௌத் ஷகீல் பொறுமையாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டுள்ளார். இவருடன் ஆடிய முகமது ரிஸ்வான் பொறுப்பாக ஆடினார்.

    இதனால் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து158 ரன்களை எடுத்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. ஷகீல் மற்றும் ரிஸ்வான் முறையே 57 மற்றும் 24 ரன்களை எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் சார்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் மஹ்மூத் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    முன்னதாக போட்டி துவங்கும் முன்பே மழை காரணமாக டாஸ் போடுவதிலேயே தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு 3 விக்கெட்டுகளை இழந்து 16 ரன்களை சேர்த்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. 

    • கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூட்யூபராக புது அவதாரம் எடுத்துள்ளார்.
    • ரொனால்டோ 'யுஆர் கிறிஸ்டியானோ' என்ற புதிய யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.

    உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 39 வயதான ரொனால்டோ கால்பந்து வாழ்க்கையில் தனது கடைசி கட்டத்தை எட்டியுள்ளார்.

    கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூட்யூபராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

    'யுஆர் கிறிஸ்டியானோ' என்ற புதிய யூடியூப் சேனலை அவர் தொடங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "நான் யுஆர் கிறிஸ்டியானோ என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஆரம்பித்துள்ளேன். அதை அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்" என்று காமெடியாக பேசியுள்ளார்.

    ரொனால்டோவின் யூட்யூப் சேனலை 1 மணிநேரத்திற்குள் 1 மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இதுவரை இந்த சேனலில் 18 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறந்த 3 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை ஆடம் கில்கிறிஸ்ட் வெளியிட்டுள்ளார்.
    • அதில் 2-வது இடத்தில் டோனியும் 3-வது இடத்தில் சங்ககாராவும் தேர்வு செய்துள்ளார்.

    மும்பை:

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட். சிறந்த அதிரடி பேட்ஸ்மேன். அவர் தொடக்க வரிசையில் விளையாடியவர்.

    2003 மற்றும் 2007-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அவர் இடம் பெற்று இருந்தார்.

    இந்த நிலையில் சிறந்த 3 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை ஆடம் கில்கிறிஸ்ட் வெளியிட்டுள்ளார். அதில் டோனி இடம் பெற்றுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    டோனி கிரிக்கெட்டின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். அவரது அமைதியை நான் எப்போதும் விரும்புகிறேன். டோனி அதை அவர் வழியில் செய்தவர். ஆனால் டோனிக்கு முன்பு ரோட்னி மார்ஷ் தான் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். அவர் தான் எனது முன் மாதிரி ஆவார்.

    இந்த வரிசையில் இலங்கையை சேர்ந்த சங்ககாரா 3-வதாக இருக்கிறார். அவர் எல்லாவற்றிலும் மிகவும் கம்பீரமாக இருந்தார்.

    இந்தியாவுக்கு எதிரான இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும். டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும். ஆஸ்திரேலியா உள்நாட்டில் விளையாடுவதில் ஆதிக்கம் நிறைந்தது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் எப்படி வெற்றி பெறுவது என்பது இந்தியாவுக்கு தெரியும்.

    இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

    1970 முதல் 1984 வரை ஆஸ்திரேலிய அணிக்காக 96 டெஸ்டில் ரோட்னி மார்ஷ் விளையாடியுள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 2 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இருந்தது. தற்போது ஹாட்ரிக்குக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.சி.சி. சேர்மன் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27-ந் தேதியாகும்.
    • ஜெய்ஷா மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கிறார் என்று தெரிகிறது.

    புதுடெல்லி:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருக்கிறார். 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது 4 ஆண்டு காலம் பதவி முடிகிறது. 3 முறை அந்த பதவியில் இருந்த அவர் மேலும் அதில் நீடிக்க விரும்பவில்லை. ஐ.சி.சி. சேர்மன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா அந்த பதவிக்கு போட்டியிடுகிறார். அவர் ஐ.சி.சி.யின் சேர்மனாக ஒரு மாதத்தில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ.சி.சி. சேர்மன் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27-ந் தேதியாகும். ஜெய்ஷா மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கிறார் என்று தெரிகிறது. டிசம்பர் மாதம் 1-ந்தேதி ஐ.சி.சி. புதிய சேர்மனாக ஜெய்ஷா பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த ஜக்மோகன் டால் மியா, சரத் பவார், என்.சீனிவாசன், ஷசாங்க் மனோகர் போன்றவர்கள் ஐ.சி.சி. தலைமை பதவி வகித்தனர். அவர்கள் வழியில் ஜெய்ஷா இணைகிறார். இளம் வயதில் ஐ.சி.சி. சேர்மன் என்ற வரலாற்றை அவர் பதிவு செய்கிறார். அவருக்கு 34 வயதாகிறது.

    • அக்டோபர் 1-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • வினேஷ் போகத் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ மகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் அரையிறுதியில் வெற்றி பெற்றும், இறுதிக்கு போட்டிக்கு தகுதி பெற்ற பின்னர் அவர் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவருக்கு பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் ஆதரவு தெரிவித்தனர்.

    இதனையடுத்து சமீபத்தில் இந்தியா திரும்பிய வினேஷ் போகத்துக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஹரியானா மாநில அரசு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது.

    இந்த நிலையில், வினேஷ் போகத் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹரியானா மாநிலத்தில் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பரில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்திற்கு அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் அம்மாநிலக் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இந்தச் சூழலில் ஓய்வை அறிவித்துள்ள மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

    இது குறித்து அவரின் நெருங்கிய உறவினர் கூறுகையில்:- வருகின்ற ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பபிதா குமாரி போகத்துக்கு எதிராக வினேஷ் போகத் களமிறங்க வாய்ப்புள்ளது. சில அரசியல் கட்சிகள் அவரை சம்மதிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர். எனத் தெரிவித்துள்ளார்.

    • ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பான் வீரர் கண்டா சுனேயமா உடன் மோதினார்.

    இதில் ஜார்ஜ் 19-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர்.

    • இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பது மிகப்பெரிய பொறுப்பு.
    • மோர்னே மோர்கல் சில சிறந்த வீரர்களுடன் பணிபுரிய இருக்கிறார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டார்.

    இது குறித்து அவரது சகோதரரும், முன்னாள் வீரருமான அல்பி மோர்கல் கூறுகையில், 'இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பது மிகப்பெரிய பொறுப்பு. மற்ற அணிகளின் பயிற்சியாளர் பதவியை விட கடினமானது. ஏனெனில் அந்த நாட்டில் கிரிக்கெட் மீதான ஆர்வம், கடந்த காலத்தில் அந்த அணி செய்துள்ள சாதனைகளை பார்க்கும் போது எந்தவித தவறுக்கும் இடம் கொடுக்க கூடாது.

    மோர்னே மோர்கல் சில சிறந்த வீரர்களுடன் பணிபுரிய இருக்கிறார். இந்திய வீரர்களின் நம்பிக்கையை பெறுவது, அவர்களின் முழு திறமையை வெளி கொண்டு வர உதவுவது மோர்னே மோர்கலுக்கு முக்கியமானதாக இருக்கும்.

    மோர்னே மோர்கலுக்கு மிகவும் பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் யார் என்பது எனக்கு தெரியாது. அது ஜாகீர் கான், ஜஸ்பிரித் பும்ராவாக இருக்கலாம். பும்ரா, அனைத்து வடிவிலான போட்டியிலும் உலகின் தலைச்சிறந்த பவுலராக திகழ்கிறார். தனிச்சிறப்பு வாய்ந்த வீரர். அவருடன் இணைந்து பணியாற்றுவதை மோர்னே மோர்கல் நிச்சயம் விரும்புவார்' என்றார்.

    ×