என் மலர்
விளையாட்டு
- பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இன்று நடைபெற்றது.
- பிரிட்டன் வீரரை 21-14, 18-21, 23-21 என்ற செட் கணக்கில் நிதேஷ் குமார் வீழ்த்தினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இன்று நடைபெற்றது. அதில், பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை வீழ்த்தி இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்க பதக்கம் வென்றார்
பிரிட்டன் வீரரை 21-14, 18-21, 23-21 என்ற செட் கணக்கில் நிதேஷ் குமார் வீழ்த்தினார்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- 2015 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் 135 சிக்ஸர்கள் அடித்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது.
- 2024 ஆம் ஆண்டில் இதுவரை நிக்கோலஸ் பூரன் 139 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் படைத்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் 135 சிக்ஸர்கள் அடித்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது. 2024 ஆம் ஆண்டில் பூரன் 139 சிக்ஸர்களை அடித்து கிறிஸ் கெயிலின் 9 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் கிறிஸ் கெயில் மட்டுமே 6 இடங்களை பிடித்துள்ளார்.
வீரர் | சிக்ஸர்கள் | ஆண்டு |
நிக்கோலஸ் பூரன் | 139* | 2024 |
கிறிஸ் கெயில் | 135 | 2015 |
கிறிஸ் கெயில் | 121 | 2012 |
கிறிஸ் கெயில் | 116 | 2011 |
கிறிஸ் கெயில் | 112 | 2016 |
கிறிஸ் கெயில் | 101 | 2017 |
ஆண்ட்ரே ரஸ்ஸல் | 101 | 2019 |
கிறிஸ் கெயில் | 100 | 2013 |
க்ளென் பிலிப்ஸ் | 97 | 2021 |
கீரன் பொல்லார்ட் | 96 | 2019 |
- பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருந்து வருகிறார்.
- ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்ய உள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா ஐசிசி தலைவராக ஒருமனதாக தேர்வாகியுள்ளார். டிசம்பர் மாதத்தில் இருந்து ஐசிசி தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.
பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருந்து வருகிறார். தற்போது ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவராக இருக்கும் மெஹ்சின் நக்வி அடுத்த ஆசிய கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கான போட்டியில் அவர் முன்னிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருட இறுதியில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருட இறுதியில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது அடுத்த இரண்டு வருடத்திற்கு தலைவராக நியமிக்கப்படுவது உறுதியாகும்.
பிசிசிஐ-யின் செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்ய இருப்பதால், புதிய செயலாளராக அருண் ஜெட்லியின் மகன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- சென்னையின் கார் பந்தய பாதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
- கார் ஓட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
'பார்முலா 4' கார் இந்தியன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் பந்தயத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஹக் பார்ட்டர் வெற்றி பெற்றார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னையின் கார் பந்தய பாதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இது மிகவும் அருமையாக இருந்தது. அதிக வேகம், குறைந்த வேகம் மற்றும் நடுத்தரமான வேகம் ஆகிய பிரிவின் கலவையாக பந்தய பாதை இருக்கிறது. இங்கு கார் ஓட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஐரோப்பியாவில் உள்ள மொனாக்கோ ஸ்பீட் சர்க்கி யூட்டில் பங்கேற்று இருக்கிறேன். சென்னை கார் பந்தய சாலை எனக்கு மொனாக்கோவை நினைவுபடுத்தியது. ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த கார் பந்தய பாதையில் ஒன்றாக சென்னை இருக்கிறது.
இவ்வாறு பார்ட்டர் கூறியுள்ளார்.
- எம்.எஸ். டோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளார்.
- விராட் கோலிக்கு பேட்டிங் வரிசையில் 5-வது இடம் கொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை தொடக்க பேட்ஸ்மேனாக விளங்கியவர் கவுதம் கம்பீர். இவர் தற்போது இந்திய தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.
இவர் ஆல்-டைம் இந்தியா லெவன் அணியை வெளியிட்டுள்ளார். இதில் ரோகித் சர்மா, கங்குலி ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அவர்கள் மட்டுமல்ல பும்ராவுக்கும் இடம் கொடுக்கவில்லை.

அவருடன் (கம்பீர்) சேவாக் தொடக்க வீரராக இடம் பிடித்துள்ளார். 3-வது இடம் ராகுல் டிராவிட்டுக்கும், 4-வது இடம் சச்சின் தெண்டுல்கருக்கும் கொடுத்துள்ளார். 5-வது இடத்தை விராட் கோலிக்கு வழங்கியுள்ளார். யுவராஜ் சிங் 6வது இடத்தை பெற்றுள்ளார். கம்பீரின் அணியில் யுவராஜ் சிங் மட்டுமே ஆல்-ரவுண்டர் ஆவார். பந்து வீச்சில் கும்ப்ளே, அஸ்வின், பதான், ஜாகீர் கான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். எம்.எஸ். டோனியை விக்கெட் கீப்பராக சேர்த்துள்ளார்.
கவுதம் கம்பீரின் ஆல்-டைம் இந்தியா லெவன்:-
1. சேவாக், 2, கம்பீர், 3. ராகுல் டிராவிட், 4. சச்சின் தெண்டுல்கர், 5. விராட் கோலி, 6. யுவராஜ் சிங், 7. எம்.எஸ். டோனி (வி.கீப்பர்), 8. அனில் கும்ப்ளே, 9. அஸ்வின், 10. இர்பான் பதான், 11. ஜாகீர் கான்.

கவுதம் கம்பீர் 2003-ம் ஆண்டு வங்காளதேசம் அணிக்கெதிராக டாக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இநதிய அணியில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்காக 147 ஒருநாள், 58 டெஸ்ட், 37 டி20 போட்டிகளில் விளையாடி 10,324 ரன்கள் அடித்துள்ளார். 2007-ல் டி20 உலகக் கோப்பையையும், 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும் வென்றவர் ஆவார்.
- பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடிய நிலையில் ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார்.
- இந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளில் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.
பிரான்ஸ் கால்பந்து அணி கேப்டன் எம்பாப்பே. இவர் உலகின் தலைசிறந்த வீரரான திகழ்ந்து வருகிறார். பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வந்த எம்பாப்பே, ப்ரீடிரான்ஸ்ஃபர் மூலமாக உலகின் முன்னணி கால்பந்து அணியான ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்கு சென்றார்.
ரியல் மாட்ரிட் அணிக்காக UEFA சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் அட்லாண்டா அணிக்கெதிராக களம் இறங்கினார். இதுதான் ரியல் மாட்ரிட் அணிக்காக எம்பாப்பே களம் இறங்கிய முதல் போட்டியாகும். இந்த போட்டியில் எம்பாப்பே ஒரு கோல் அடித்து அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.
தற்போது லா லிகா கால்பந்து லீக் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு ரியல் மாட்ரிட் ரியல் பெட்டிஸ் அணியை எதிர்கொண்டது.
இதற்கு முன்னதாக மூன்று போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக எம்பாப்பே களம் இறங்கி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் அவருக்கு எதிராக விமர்சனம் எழும்பியது.
இந்த நிலையில் ரியல் பெட்டிஸ் அணிக்கெதிராக எம்பாப்பே லா லீகாவில் முதல் கோலை பதிவு செய்தார். 67-வது நிமிடத்தில் எம்பாப்பே கோல் அடித்தார். அத்துடன் 75-வது நிமிடத்தில் பொனால்டி ஷூட் வாய்ப்பு கிடைத்தது. இதையும் சரியான பயன்படுததி கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் 2-0 என வெற்றி பெற்றது.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது. ரியல் மாட்ரிட் 2 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் டிராவுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடம் வகிக்கிறது.
- சபலென்கா 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் பெல்ஜியம் வீராங்கனையை வீழ்த்தினார்.
- ஸ்வெரவ் 3-6, 6-1, 6-2, 6-2 என்ற கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தினார்.
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ்) 33-வது வரிசையில் உள்ள மெர்டன்சை (பெல்ஜியம்) எதிர்கொண்டார்.
இதில் சபலென்கா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். அவர் தொடர்ந்து 4-வது முறையாக கால் இறுதியில் ஆடுகிறார்.
26-வது வரிசையில் இருக்கும் பவ்லொ படோசா (ஸ்பெயின்) 4-வது சுற்றில் 6-1, 6-2 என்ற நேர்செட் கணக்கில் சீன வீராங்கனை யபான் வாக்கை வீழ்த்தினார்.
3-வது வரிசையில் இருக்கும் அமெரிக்காவை சேர்ந்த கோகோ காப் 4-வது சுற்றில் சக நாட்டவரான எம்மா நவரோவிடம் 3-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
4-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) 3-6, 6-1, 6-2, 6-2 என்ற கணக்கில் நகாஷிமாவை (ஜப்பான்) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
6-ம் நிலை வீரரான ரூப்லெவ் (ரஷியா), 8-வது வரிசையில் இருக்கும் கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்கள்.
- எம்.எஸ். டோனி தலைமையின் கீழ் யுவராஜ் சிங் நீண்ட காலமாக விளையாடினார்.
- 2007 மற்றும் 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல யுவராஜ் சிங் முக்கிய வீரராக திகழ்ந்தார்.
இந்திய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழந்தவர் யுவராஜ் சிங். இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் யுவராஜ் சிங்.
இவரது தந்தை யோக்ராஜ் சிங். இவர் தொடர்ந்து எம்.எஸ். டோனியை விமர்சித்து வருகிறார். தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தவர் என வெளிப்படையாக குற்றம்சாட்டுகிறார்.
இந்த நிலையில் எம்.எஸ். டோனியை ஒருபோதும் மன்னிக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் கூறியதாவது:-
நான் எம்.எஸ். டோனியை மன்னிக்க மாட்டேன். கண்ணாடியில் அவரது முகத்தை அவர் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால், அவர் எனது மகனுக்கு (யுவராஜ் சிங்) எதிரான என்ன செய்தார்? என்பதெல்லாம் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. இதை எனது வாழ்நாள் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்.
நான் எனது வாழ்வில் இரணடு விசயங்களை செய்தது கிடையாது. முதல் விசயம், எனக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒருபோதும் மன்னித்தது கிடையாது. 2-வது, எனது குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் சரி அல்லது குழந்தைகளாக இருந்தாலும் சரி, ஒருபோதும் என வாழ்வில் கட்டிப்பிடிக்கமாட்டேன்.
இவ்வாறு யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஐபிஎல் 2024 தொடரில் சிஎஸ்கே தோல்விக்கு டோனியின் மோசமான செயல்கள்தான் காரணம். யுவராஜ் சிங் மீது டோனி பொறாமைப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது.
- அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில்தான நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உறுதியாக உள்ளது.
ஐசிசி-யின் டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீசில் முடிவடைந்த நிலையில், ஐசிசி சாம்பியின்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.
பாதுகாப்பு காரணம், அரசியல் விவகாரம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவில்லை. "hybrid model" என அழைக்கப்படும் வேறுநாட்டில் போட்டி நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. குறைந்தபட்சம் இந்தியா மோதும் போட்டிகளில் அனைத்தும் நடத்தப்படலாம்.
ஆனால் இந்திய அணி பாகிஸ்தானிற்கு வந்து விளையாட வேண்டும் என அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் போர்டு தலைவர்கள், வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் செல்லக்கூடாது, பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தினேஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தினேஷ் கனேரியா கூறுகையில் "பாகிஸ்தான் சூழ்நிலையை பார்க்கும்போது, இந்திய அணி பாகிஸ்தான் செல்லக் கூடாது என்றுதான் நான் சொல்வேன். பாகிஸ்தான் இதுகுறித்து யோசிக்க வேண்டும். ஐசிசி இது தொடர்பாக முடிவு எடுக்கும். பெரும்பாலும் இது "hybrid model" தொடர்பானதாக இருக்கும். துபாயில் போட்டிகள் நடத்தப்படும்.
வீரர்களின் பாதுகாப்புக்குத்தான் முதல் முன்னுரிமை. மரியாதை என்பதுதான் 2-வது முன்னுரிமைதான். ஏராளமான விசயங்கள் உள்ளன. பிசிசிஐ தனது சிறந்த வேலையை செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன். இறுதி முடிவை அனைத்து நாடுகள் ஏற்றுக் கொள்ளும் என நினைக்கிறேன். இது "hybrid model" தொடராகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கம்ரான் அக்மல் கூறுகையில் "இந்தியா பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். நாம் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, கிரிக்கெட் விளையாடி, நேசிக்க வேண்டும்" என்றார்.
- இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
- இந்திய அணி 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
பிரான்ஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பாரிஸ் பாராலிம்பிக்கில் ஆடவர் உயரம் தாண்டுதலில் டி-47 போட்டியில் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்திய அணி 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- பிரீத்தி பால் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
- இந்திய மக்களுக்கு ஒரு உத்வேகம்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பாரிஸ் பாரா ஒலிம்பிக் நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் பிரீத்தி பால் 30.01 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
முன்னதாக பிரீத்தி பால் பெண்களுக்கான 100 மீட்டர் டி35 போட்டியில் வெண்கலம் வென்றார்.
பிரீத்தி பால் தனது இரண்டாவது வெண்கலத்துடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தினார்.
இந்த நிலையில் பாரா ஒலிம்பிக்கில் இரண்டாவது வெண்கலப் பதக்கம் வென்ற பிரீத்திக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், "பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் மகளிர் 200 மீ - டி35 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரீத்தி பாலுக்கு வாழ்த்துகள். 100 மீட்டர் வெண்கலப் பதக்கத்திற்குப் பிறகு, பாரா ஒலிம்பிக்கில் அவர் வென்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும், இது ஒரு விதிவிலக்கான சாதனையாகும்.
இந்தியாவுக்கான இரண்டு பாரா தடகளப் பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார். அவரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. மூவர்ணக் கொடி போர்த்தி அவர் எடுத்த புகைப்படங்கள் விளையாட்டு பிரியர்களை மின்னச் செய்தன. அவர் இளைஞர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை வலுப்படுத்தி, இந்தியாவுக்காக அதிக பாராட்டுகளை வெல்வார்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "பாரா ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீ டி35 போட்டியில் வெண்கலம் வென்று, ஒரே தொடரில் இரண்டாவது பதக்கம் பெற்று, பிரீத்தி பால் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர் இந்திய மக்களுக்கு ஒரு உத்வேகம். அவருடைய அர்ப்பணிப்பு உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.
- உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
- பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி என்ற பெருமையை தொடரில் படைத்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனையான கிரின்ஹாம், பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
7 மாத கர்ப்பிணியான அவர், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருந்த பேட்டர்சனை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.
விளையாட்டுத் துறையில் பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி என்ற பெருமையை தொடரில் படைத்துள்ளார்.






