என் மலர்
விளையாட்டு
- தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது.
- பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் முடிவடைந்தது.
சென்னை:
சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது.
எப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் நேற்று கால தாமதம் ஆன நிலையில், பார்முலா 4 பந்தயம் நேற்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. இன்றைய தினம் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் தொடங்கியது. போட்டிகளை ஆர்வமாக திரையுலகினர் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு கண்டுகளித்தனர்.
நடிகர்கள் நாக சைதன்யா, ஜான் ஆபிரகாம், நடிகர் திரிஷா உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் முடிவடைந்தது.
இதையடுத்து சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியிருப்பதாவது:-
பார்முலா 4 கார் பந்தயம் மூலம் சென்னைக்கு பெருமை கிடைத்துள்ளது. தமிழ்நாட்டு விளையாட்டுத்துறை வரலாற்றில் இந்த கார் பந்தயம் சிறந்த இடம் என்று கூறியுள்ளார்.
- தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது.
- திரையுலகினர் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு கண்டுகளித்தனர்.
சென்னை:
சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது.
எப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் நேற்று கால தாமதம் ஆன நிலையில், பார்முலா 4 பந்தயம் நேற்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. இன்றைய தினம் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் தொடங்கியது. போட்டிகளை ஆர்வமாக திரையுலகினர் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு கண்டுகளித்தனர்.

நடிகர்கள் நாக சைதன்யா, ஜான் ஆபிரகாம், நடிகர் திரிஷா உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் முடிவடைந்தது.
இதையடுத்து சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
- இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இலங்கை அணி 2வது இன்னிங்சில் 292 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
லண்டன்:
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 427 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் சதமடித்து 143 ரன்னில் ஆட்டமிழந்தார். கஸ் அட்கின்சன் சதமடித்து 118 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 40 ரன்னிலும், ஹாரி புரூக் 33 ரன்னிலும் அவுட்டாகினர்.
இலங்கை சார்பில் அஷிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டும், மிலன் ரத்னாயகே, லஹிரு குமரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இங்கிலாந்து வீரர்கள் துல்லியமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் அரை சதமடித்து 74 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஒல்லி ஸ்டோன், மேத்யூ பாட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 231 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் வீரர்கள் விரைவாக ரன் எடுக்க முயன்றனர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஜோ ரூட் சிறப்பாக ஆடி 34வது சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார்.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டும், ரத்னாயகே, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 483 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்கம் முதலே நிதானமாக ஆடியது.
தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். தினேஷ் சண்டிமால் 58 ரன்னும், தனஞ்செய டி சில்வா 50 ரன்னும் எடுத்தனர். பிரியநாத் ரத்நாயகே 43 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 292 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 190 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இங்கிலாந்து சார்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.
- பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- பேட்மிண்டனில் இந்தியாவின் நிதேஷ குமார் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இதற்கிடையே, பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நிதேஷ் குமார் ஜப்பான் வீரரை 21-16, 21-12 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 1 வீரர் சின்னர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் உடன் மோதினார்.
இதில் சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 4-வது சுற்று ஆட்டத்தில் சின்னர், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோத உள்ளார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலி வீரர் கபோலியை 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முனனேறினார். நாளை நடைபெறும் 4-வது சுற்றில் மெத்வதேவ் போர்த்துக்கீசிய வீரர் நுனோ போர்ஜசை சந்திக்கிறார்.
- முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வங்கதேசம் வீழ்த்தியது.
- 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 274 ரன்கள் எடுத்தது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்துசெய்யப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் நேற்று டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சை தொடங்கியது. முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் டக் அவுட்டானார். கேப்டன் ஷான் மசூத், தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் அரை சதம் கடந்தனர். ஷான் மசூத் 58 ரன்னிலும், சயீம் அயூப் 57 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஆகா சல்மான் அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார்.
வங்கதேசம் அணி சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினர் துல்லியமாக பந்துவீசினர். இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் 26 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் திணறியது.
7-வது விக்கெட்டுக்கு இணைந்த லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. விரைவில் வங்கதேசத்தை வீழ்த்தி விடலாம் என நினைத்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு திறமையாக ஆடி பதிலடி கொடுத்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர்.
7வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 165 ரன்கள் சேர்த்த நிலையில், மெஹிதி ஹசன் 78 ரன்னில் அவுட்டானார். லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 138 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத் 6 விக்கெட்டும், மீர் ஹம்சா, ஆகா சல்மான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 5 பதக்கங்களை வென்றுள்ளது.
- இதில் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் ஆகியவை அடங்கும்.
புதுடெல்லி:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது.
துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றுள்ளனர்.
ஆண்கள் பிரிவில் மணீஷ் நர்வால் வெள்ளி வென்றார். தடகளத்தில் பிரீத்தி பால் ஒரு வெண்கலம் வென்றார். நேற்று ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றார்.
இதையடுத்து, பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் இன்று உரையாடினார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதக்கம் வென்ற மோனா அகர்வால், பிரீத்தி பால், மணீஷ் நர்வால் மற்றும் ரூபினா பிரான்சிஸ் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர்களுக்கு தனித்தனியாக வாழ்த்து தெரிவித்தார். தங்கம் வென்ற அவனி லெகராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ஆனால் அவனி லெகரா இந்த உரையாடலில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளது.
- விராட் கோலி கடந்த 16 ஆண்டுக்கு மேலாக விளையாடி, பல்வேறு சாதனை படைத்து வருகிறார்.
- உலக கிரிக்கெட்டில் விராட் கோலிதான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என டோனி பாராட்டினார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி, பல்வேறு சாதனை படைத்து வருகிறார்.
விராட் கோலி இதுவரை 26,000-க்கும் அதிகமான ரன்களையும், 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
இவருடைய வளர்ச்சிக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.
ஆரம்ப காலங்களில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தடுமாறினார். அதனால் அவரை நீக்குவதற்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு முடிவெடுத்ததாக கூறப்பட்டது. அப்போது தேர்வுக் குழுவை எதிர்த்து தொடர்ந்து வாய்ப்பு கொடுத்ததாக அப்போதைய துணை கேப்டன் சேவாக் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
2019-ம் ஆண்டுக்குப் பின்னர் சதமடிக்காமல் தடுமாறிய காலங்களில் டோனிதான் தமக்கு மெசேஜ் செய்து ஆதரவு கொடுத்ததாக விராட் கோலி தெரிவித்ருந்தார்.
இந்நிலையில், சமீபத்திய நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோலிக்கும் உங்களுக்கும் எம்மாதிரியான உறவு இருக்கிறது? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
சமீபத்திய நிகழ்ச்சியில் விராட் கோலிக்கும் உங்களுக்கும் எம்மாதிரியான உறவு இருக்கிறது? என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த டோனி, நாங்கள் 2008 -ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறோம். எங்களுக்கு இடையே வயது வித்தியாசம் இருக்கிறது. எனவே அவருக்கு நான் பெரிய அண்ணன் போன்றவரா அல்லது சக வீரரா என்பது தெரியவில்லை. நாளின் இறுதியில் நாங்கள் நாட்டுக்காக விளையாடிய சக வீரர்கள். நாங்கள் இந்தியாவுக்காக நீண்ட காலம் ஒன்றாக விளையாடினோம் என்பது உங்களுக்கு தெரியும். உலக கிரிக்கெட் என வரும்போது விராட் கோலி மிகவும் சிறந்தவர் என தெரிவித்தார்.
- பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- பேட்மிண்டனில் இந்தியாவின் மணீஷா அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றுள்ளனர். ஆண்கள் பிரிவில் மணீஷ் நர்வால் வெள்ளி வென்றார். நேற்று ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றார்.
இதையடுத்து, பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இதற்கிடையே, பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியாவின் மணீஷா ராம்தாஸ், ஜப்பானின் டொயோடா மோமிகாவை 21-13, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் சக வீராங்கனை துளசிமதி முருகேசனை மணீஷா ராமதாஸ் சந்திக்க உள்ளார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதன் 3-வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை பவுலியுசென்கோவா உடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கைப்பற்றி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 4-வது சுற்று ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் சாம்சனோவா உடன் மோத உள்ளார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, கஜகஸ்தானின் யுலியா புடின்சேவாவை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முனனேறினார். நாளை நடைபெறும் 4-வது சுற்றில் பவுலினி செக் வீராங்கனை கரோலினா முச்சோவாவை சந்திக்கிறார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
நியூயார்க்:
நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி,
ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ்-செக் வீராங்கனை கத்ரினா சினிகோவா ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 0-6, 7-6 (7-5), 10-7 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
- இத்தாலியைச் சேர்ந்த வாலண்டினா பெட்ரில்லோ பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- பார்வை குறைபாடுள்ள வீரர்களுக்கான T12 பிரிவில் 200மீ மற்றும் 400மீ ஓட்டப் பந்தயத்தில் அவர் பங்கேற்றார்.
பிரான்ஸ் தலைநகரில் பாரா விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை இத்தாலியைச் சேர்ந்த வாலண்டினா பெட்ரில்லோ பெற்றுள்ளார்.
50 வயதான வாலண்டினா பெட்ரில்லோ பார்வை குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களுக்கான T12 பிரிவில் 200மீ மற்றும் 400மீ ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார்.
1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இத்தாலிய ஓட்டப்பந்தய வீரர் பியட்ரோ மென்னியா தங்கம் வென்றதைப் பார்த்து 7 வயதிலேயே தடகள விளையாட்டின் மீது காதல் கொண்டதாக பெட்ரில்லோ தெரிவித்தார்.
தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆணாக வாழ்ந்த வாலண்டினா பெட்ரில்லோ கடந்த 2017 ஆம் ஆண்டு ஹார்மோன் தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டு திருநங்கையாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.






