search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    Italys Valentina Petrillo
    X

    பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் திருநங்கை

    • இத்தாலியைச் சேர்ந்த வாலண்டினா பெட்ரில்லோ பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    • பார்வை குறைபாடுள்ள வீரர்களுக்கான T12 பிரிவில் 200மீ மற்றும் 400மீ ஓட்டப் பந்தயத்தில் அவர் பங்கேற்றார்.

    பிரான்ஸ் தலைநகரில் பாரா விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை இத்தாலியைச் சேர்ந்த வாலண்டினா பெட்ரில்லோ பெற்றுள்ளார்.

    50 வயதான வாலண்டினா பெட்ரில்லோ பார்வை குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களுக்கான T12 பிரிவில் 200மீ மற்றும் 400மீ ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார்.

    1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இத்தாலிய ஓட்டப்பந்தய வீரர் பியட்ரோ மென்னியா தங்கம் வென்றதைப் பார்த்து 7 வயதிலேயே தடகள விளையாட்டின் மீது காதல் கொண்டதாக பெட்ரில்லோ தெரிவித்தார்.

    தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆணாக வாழ்ந்த வாலண்டினா பெட்ரில்லோ கடந்த 2017 ஆம் ஆண்டு ஹார்மோன் தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டு திருநங்கையாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×