என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    நியூயார்க்:

    நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி, செக் நாட்டின் பார்பரா பிரெஜ்சிகோவா-ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-4), 2-6, 10-7 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • 50 ஓவர் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதால் சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது.
    • 2024 சீசனில் சிஎஸ்கே அணிக்காக 10 போட்டிகளில் 222 ரன்கள் அடித்தார்.

    நியூசிலாந்து அணியின் இளம் இடது கை அதிரடி பேட்ஸ்முன் ரச்சின் ரவீந்திரா. நியூசிலாந்து வாழ் இந்தியரான இவர் தனது அதிரடி ஆட்டம் மூலம் இந்தியாவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இவரது அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் 2024 சீசனில் ஏலத்தில் எடுத்தது.

    தனது 12 மாத சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பிடித்தார். இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவருடன் சியர்ஸ் என்பவரும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் உள்ள கிரேட்டர் நொய்டா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த போட்டிக்கு முன்னோட்டமாக பயிற்சி மேற்கொண்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

    ஆப்கானிஸ்தான் போட்டிக்குப் பிறகு இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிராக தலா இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக்கோப்பையில் 10 இன்னிங்சில 578 ரன்கள் குவித்தார். சராசரி 64.22 ஆகும். இதன்காரணமாக ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அவரை 1.80 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. சிஎஸ்கே அணிக்காக 10 போட்டிகளில் 222 ரன்கள் அடித்தார். முதல் இரண்டு போட்டிகளில் 35 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார்.

    • இன்றைக்கு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும்-தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தந்துள்ள அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.
    • நம் வீராங்கனையரின் சாதனைப் பயணம் தொடர நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்.

    சென்னை:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் எஸ்.யூ.5 பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், தங்கை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தி உள்ளனர். சர்வதேச அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்திருக்கும் தங்கைகள் இருவருக்கும் நம் பாராட்டுகள்.

    தமிழ்நாடு அரசின் எலைட் திட்டம் மற்றும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பயன்பெற்று வரும் இவ்விரு வீராங்கனையருக்கும், பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான போதே தலா ரூ.7 லட்சத்தை சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்தினோம்.

    இன்றைக்கு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும்-தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தந்துள்ள அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.

    நம் வீராங்கனையரின் சாதனைப் பயணம் தொடர நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்.

    பாரா ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யா ஸ்ரீ சிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    பாரா தடகள வீரர்களின் வரலாற்று சாதனைகளால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மேலும் அவர்கள் எதிர்கால போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் 3 பதக்கத்தை வென்றுள்ளனர்.
    • பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீராங்கனை துளசிமதி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் 3 பதக்கத்தை வென்றுள்ளனர்.

    பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீராங்கனை துளசிமதி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். மற்றொரு தமிழக வீராங்கனையான மனிஷா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இவர் திருவள்ளூரைச் சேர்ந்தவர்.

    பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் நித்யஸ்ரீ சிவன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    இந்நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யஸ்ரீ சிவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யா ஸ்ரீ சிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    நித்யஸ்ரீ சிவனின் திறமை மற்றும் கடின உழைப்பு எங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கதேச அணிக்கெதிராக இலங்கை வீரர் மேத்யூஸ் டைம்டு அவுட் மூலம் வெளியேறினார்.
    • அதேபோல் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என பயந்து அப்ரார் அவ்வாறு வந்திருக்கலாம் என நெட்டிசன்கள் கிண்டல்.

    பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் 172 ரன்னில் சுருண்டது.

    முன்னதாக பாகிஸ்தான் 136 ரன்னில் 8-வது விக்கெட்டை இழந்தபோது அப்ரார் அகமது பேட்டிங் செய்ய களம் இறங்கிறார். சரியாக கையுறைகளை (Gloves) அணியாமல் அவசர அவசரமாக கையுறையை மாட்டியவாறு மைதானத்திற்குள் வந்தார். அப்போது ஒரு கையுறை கீழே விழுந்தது. அதை எடுத்து சரி செய்யாமல் அப்படியே ஆடுகளத்தை நோக்கி ஓடினார்.

    அப்போது சாஹிப் அல் ஹசன் பந்து வீச தயாராக இருந்தார். வங்கதேசம்- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் பேட்டிங் செய்ய வரும்போது திடீரென ஹெல்மெட் சரியில்லாமல் போவதால் வேறு ஹெல்மெட் கேட்பார்.

    பின்னர் ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய தயாராகும்போது சாகிப் அல் ஹசன், நடுவரிடம் சென்று குறிப்பிட்ட நேரத்திற்குள் மேத்யூஸ் ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய தயாராகவில்லை. இதனால் அவுட் கொடுக்க வேண்டும் என முறையிடுவார். நடுவரும் டைம்டு அவுட் (Times Out) கொடுத்துவிடுவார். இது மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    அதேபோல் தற்போது சாகிப் அல் ஹசன் அவுட் கேட்டுவிடக் கூடாது என பயந்து அவசர அவசரமாக அப்ரார் அகமது வந்திருப்பாரோ என நெட்டிசன்கள் கிண்டல் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • சின்னர் முதல் இரண்டு செட்களையும் டை-பிரேக்கர் வரை சென்ற நிலையில் கைப்பற்றினார்.
    • ஸ்வியாடெக் ரஷிய வீராங்கனை சம்சோனோவாவை 6-4, 6-1 என எளிதில் வீழ்த்தினார்.

    கிராணட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 5-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மேட்வதேவ், தரநிலை பெறாத போர்ச்சுக்கல் வீரர் நுனோர் போர்ஜஸை எதிர்கொண்டார். இதில் மெட்வதேவ் 6-0, 6-1, 6-3 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இங்கிலாந்து வீரர் டிராப்பர் 6-3, 6-1, 6-2 என நேர்செட் கணக்கில் செக்குடியரசின் தாமஸ் மச்சாச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    முதல் நிலை வீரரான இத்தாலியின் சின்னர் அமெரிக்காவின் டாமி பால்-ஐ எதிர்கொண்டார். முதல் இரண்டு செட்களும் டை-பிரேக்கர் வரை சென்றது. இருந்த போதிலும் சின்னர் 7(7)-6(3), 7(7)-6(5) என கைப்பற்றினார். அடுத்த செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் காலிறுதி போட்டி ஒன்றில் ஸ்வரேவ்- பிரிட்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். நாளை நடைபெறும் காலிறுதி போட்டிகளில் டிமிட்ரோவ்- தியாபோ, டிராப்பர்- டி மினாயுர் மோதுகிறார்கள்.

    பெண்களுக்கான போட்டியில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக், பிரேசில் வீராங்கனை ஹட்டாட் மையா காலிறுதிக்கு முன்னேறினர். ஸ்வியாடெக் ரஷிய வீராங்கனை சம்சோனோவாவை 6-4, 6-1 என எளிதில் வீழ்த்தினார்.

    • முதல் இன்னிங்சில் 274 ரன்கள் அடித்த பாகிஸ்தான், 2-வது இன்னிங்சில் 172 ரன்னில் சுருண்டது.
    • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 26-6 என நிலையில் இருந்தது. லிட்டோன் தாஸ் சதம் அடித்து அணியை மீட்டார்.

    பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது.

    2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வங்கதேச அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 274 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தொடக்க வீரர் சாய்ம் அயூப் 58 ரன்களும், அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களும், சல்மான் ஆகா 54 ரன்களும் அடித்தனர். வங்கதேச அணி சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அந்த அணி 26 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது திணறியது, லிட்டோன் தாஸ் சிறப்பாக விளையாடி 138 ரன்கள் குவித்தார். அவருக்கு ஆதரவாக விளையாடிய மெஹிதி ஹசன் மிராஸ் 78 ரன்கள் சேர்த்தார். இதனால் வங்கதேசம் 262 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அணியில் குர்ராம் ஷேசாத் 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பின்னர் 12 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. வங்கதேசத்தின் ஹசன் மெஹ்மூத், நஹித் ராணா சிறப்பாக பந்து வீச பாகிஸ்தான் 172 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 43 ரன்களும், சல்மான் ஆகா ஆட்டமிழக்காமல் 47 ரன்களும் சேர்த்தனர். வங்கதேச அணி சார்பில் ஹசன் மெஹ்மூத் 5 விக்கெட்டுகளும், நஹித் ராணா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பாகிஸ்தான் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 184 ரன்கள் முன்னிலை பெற்றிந்ததால் வங்கதேச அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த களம் இறங்கியது. அந்த அணி 7 ஓவரில் 42 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. அதனால் நேற்றைய 4-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.

    ஜகீர் ஹசன் 31 ரன்களுடனும், ஷத்மான் இஸ்லாம் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது. கைவசம் 10 விக்கெட் உள்ளது. இன்னும் 143 ரன்கள்தான் அடிக்க வேண்டும்.

    மழை குறுக்கிடாமல் இருந்தால் வங்கதேச அணி இலக்கை எட்டி தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது. வங்கதேச அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் மண்ணில் முதன்முறையாக பாகிஸ்தான் அந்த அணிக்கு எதிராக தொடரை இழக்கும். மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் வங்கதேசம் தொடரை கைப்பற்றிவிடும்.

    • துளசிமதி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி உள்ளார்.
    • மனிஷா ராமதாஸ், டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரென் உடன் மோதினார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. மகளிர் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர், எஸ்யு 5 பிரிவின் இறுதிப் போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் சீனாவின் கியு ஹ்யா யங்-ஐ எதிர்கொண்டு விளையாடினர். இந்த போட்டியில் துளசிமதி முருகேசன் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் க்யு ஹ்யா யங்கிடம் தோல்வி அடைந்தார். இதனால் துளசிமதி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி உள்ளார்.

    இதே பிரிவில் (பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவு) வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ், டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரென் உடன் மோதினார். இந்தில் அபாரமாக செயல்பட்ட மனிஷா ராமதாஸ் 21-12, 21-8 என்ற செட் கணக்கில் கேத்ரின் ரோசன்கிரெனை வீழ்த்தினார்.

    இந்த நிலையில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் துளசி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள்! உங்களின் அர்ப்பணிப்பும், நெகிழ்ச்சியும், தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது. நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம்!

    பாரா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாசுக்கு வாழ்த்துகள்! உங்கள் தைரியமும், மன உறுதியும் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தொடர்ந்து பிரகாசியுங்கள்!" என்று தெரிவித்துள்ளார்.

    • இந்தியா இதுவரை 14 பதக்கங்களை வென்றுள்ளது.
    • இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலப்பு அணி வில்வித்தையில் ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமார் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளது.

    • இனிவரும் முயற்சிகளுக்கு வெற்றிபெற வாழ்த்துகள்.
    • இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றுள்ளது.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் F64 போட்டியில் 70.59 மீ தூரம் என்ற புதிய உலக சாதனையுடன் இந்தியாவின் சுமித் ஆன்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

    சுமித்துக்கு பாராலிம்பிக்கில் தொடர்ந்து 2வது தங்கம்.


    இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றுள்ளது.

    இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்64 போட்டியில் தங்கம் வென்றத சுமித்துக்கு வாழ்த்துகள்! சிறப்பான நிலைத்தன்மையையும், சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். சுமித்தின் இனிவரும் முயற்சிகளுக்கு வெற்றிபெற வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.


    • இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றுள்ளது.
    • புதிய உலக சாதனையுடன் இந்தியாவின் சுமித் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் F64 போட்டியில் 70.59 மீ தூரம் என்ற புதிய உலக சாதனையுடன் இந்தியாவின் சுமித் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

    சுமித்துக்கு பாராலிம்பிக்கில் தொடர்ந்து 2வது தங்கம்.

    இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றுள்ளது.

    • இந்தியா இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது.
    • இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    ஆண்கள் ஒற்றையர் SL4 இறுதிப் போட்டியில் சுஹாஸ் யாதிராஜ் 9-21, 13-21 என்ற செட் கணக்கில் நடப்புச் சாம்பியனான லூகா மசூரிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

    இவர் உத்தரபிரதேச கேடரின் 2007 பேட்ச்சின் ஐஏஎஸ் அதிகாரி ஆவார், மேலும் கவுதம் புத்த நகர் மற்றும் பிரயாக்ராஜ் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக பணியாற்றியுள்ளார். அவர் 2018 இல் தேசிய பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார்.

    இந்தியா இதுவரை 2 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றுள்ளது.

    ×