என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சு தரவரிசையில் பும்ரா முதல் இடம் பிடித்தார்.
    • அவரை தொடர்ந்து அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றி அசத்தியது.

    இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் போட்டியில் 5 விக்கெட், 2-வது போட்டியில் 6 விக்கெட் என மொத்தம் 11 விக்கெட் சாய்த்தார்.

    இந்நிலையில், டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் பும்ரா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    அவரை தொடர்ந்து அஸ்வின் 2வது இடத்தில் நீடிக்கிறார். ஹேசில்வுட் 3வது இடத்திலும், கம்மின்ஸ் 4வது இடத்திலும் உள்ளார். ரபடா 5-வது இடத்தில் நீடிக்கிறார்.

    • முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    புதுடெல்லி:

    ஐபிஎல் 2024 சீசனில் 68வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 191 ரன்கள் மட்டுமே எடுத்து

    தோல்வி அடைந்தது. அத்துடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் சி.எஸ்.கே. இழந்தது.

    போட்டியில் தோல்வி அடைந்ததால் எம்.எஸ்.டோனி கோபம் அடைந்ததாகவும், அதனால் போட்டி முடிந்ததும் அவர் எதிரணி வீரர்கள் யாருக்கும் கை கொடுக்காமல் சென்றார் என கூறப்பட்டது.

    இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் யாரி என்ற யூடியூப் சேனலுக்கு ஹர்பஜன் சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாக சுஷாந்த் மேத்தா என்பவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

    எம்.எஸ்.டோனி ஏன் ஆர்.சி.பி. வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்றார் என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், டோனி கை குலுக்காமல் சென்றது மட்டுமின்றி அங்கு டிவி ஒன்றையும் உடைத்துள்ளார். அங்கிருந்த எதையோ ஒன்றை பலமாக குத்தியுள்ளார். அந்த ஷாட்டை அடிக்காததால் அவர் மிகவும் கோபமாக இருந்ததாக தெரிவித்தார் என பதிவிட்டுள்ளார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 2 வீரரான அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இறுதிச்சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில் நம்பர் 2 வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன் மோதினார்.

    இதில் சின்னர் முதல் செட்டை 7-6 (8-6) என கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-3) என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய மும்பை அணியின் சர்பராஸ் இரட்டை சதமடித்தார்.

    லக்னோ:

    இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, மும்பை அணி முதலில் பேட் செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 68 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 86 ரன்னும், சர்பராஸ் கான் 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகானே 97 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய தனுஷ் கோட்யான் சர்பராஸ் கானுடன் ஜோடி சேர்ந்தார்.

    இருவரும் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த நிலையில் தனுஷ் கோட்யான் 64 ரன்னில் அவுட் ஆனார். ஷர்துல் தாக்கூர் 36 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் மும்பை அணி 138 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 536 ரன்கள் எடுத்துள்ளது. சர்பராஸ் கான் 221 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

    ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும், யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய சபலென்கா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு போட்டியில் செக் வீராங்கனை கரோலினா முச்சோவா, ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா பக்சா உடன் மோதினார்.

    இதில் முச்சோவா 6-2, 6-0 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் சபலென்கா, முச்சோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

    • அவரது காயத்தின் தன்மை குறித்து கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு கண்காணித்து வருகிறது.
    • முகமது ஷமி கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 50 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடி இருந்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேசன் செய்து கொண்டபின் அவர் ஓய்வில் இருந்தார்.

    தற்போது முகமது ஷமி பந்துவீச்சு பயிற்சியை தொடங்கி உள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது முழங்கால் வீக்கத்தால் முகமது ஷமி பாதிக்கப்பட்டுள்ளார்.

    அதிலிருந்து குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது. இதனால் ஆஸ்திரேலிய தொடரில் அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது காயத்தின் தன்மை குறித்து கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு கண்காணித்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது ஷமி கூறும் போது, நான் திரும்பி வரும்போது எந்த அசவுகரியமும் இல்லை என்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். இதற்கு எனது உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்.

    நான் எவ்வளவு வலிமையாக திரும்புகிறேனோ, அது எனக்கு நல்லது. நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலிய தொடருக்கு எதிராக நான் அவசரப்பட்டு மீண்டும் காயமடைய விரும்பவில்லை.

    நான் ஏற்கனவே பந்துவீச ஆரம்பித்து விட்டேன். 100 சதவீதம் உடற்தகுதி பெறும் வரை காத்திருப்பேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முகமது ஷமி கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 50 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடி இருந்தார். அதன்பின் காயம் காரணமாக அவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

    • ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடுவது போன்று ஒரு விளம்பர வீடியோவில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
    • கோலி வீசிய முதல் பந்திலேயே அனுஷ்கா அவுட் ஆக இது ட்ரையல் பந்து என்று புதிய விதியை சொல்லி சமாளிக்கிறார்.

    இந்திய வீரர் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் சமூக வலைத்தளத்தில் மில்லியன் கணக்கான பாலோவர்ஸ்களை கொண்டுள்ளனர். அவர்கள் பதிவிடும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

    இந்நிலையில், அனுஷ்கா ஷர்மா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் விராட் கோலி தன் மனைவி அனுஷ்காவுடன் இணைந்து ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

    ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடுவது போன்று ஒரு விளம்பர வீடியோவில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

    அந்த வீடியோவில், பல கிரிக்கெட் விதிமுறைகளை கோலிக்கு அனுஷ்கா ஷர்மா விவரிக்கிறார். 3 முறை பந்தை அடிக்கவிட்டால் நீங்கள் அவுட். நீங்கள் கோபப்பட்டாலும் அவுட் என்று கோலியிடம் அனுஷ்கா கிண்டலாக தெரிவிக்கிறார்.

    பின்னர் இருவரும் இணைந்து கிரிக்கெட் விளையாட தொடங்குகிறார்கள். அப்போது யார் சொந்தமாக பேட் வைத்திருக்கிறார்களோ அவர் தான் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கூறி அனுஷ்கா பேட்டிங் செய்கிறார்.

    கோலி வீசிய முதல் பந்திலேயே அனுஷ்கா அவுட் ஆக இது ட்ரையல் பந்து என்று புதிய விதியை சொல்லி சமாளிக்கிறார். பின்னர் கோலி பேட்டிங் செய்து முதல் பந்திலேயே வெற்றி பெற்ற பின்பு பந்தை அடித்தவர் தான் எடுத்து வரவேண்டும் என்று கோலியிடம் அனுஷ்கா கூறுகிறார்.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • மொத்தம் 23 ஆட்டங்கள் நடக்கிறது.
    • 20 ஓவர் உலக கோப்பையில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    ஷார்ஜா:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி.) மகளிர் 20 ஓவர் உலககோப்பை போட்டியை 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

    இங்கிலாந்தில் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. கடைசியாக கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 இருபது ஓவர் உலக கோப்பை நடை பெற்றுள்ளது.

    ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 6 தடவை (2010, 2012, 2014, 2018, 2020, 2023) உலககோப் பையை வென் றுள்ளது. இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2016) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளன.

    9-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 20-ந் தேதி வரை துபாய், ஷார்ஜாவில் போட்டிகள் நடைபெறுகிறது.

    வங்காள தேசத்தில் நடைபெற இருந்த போட்டி அங்கு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது.

    20 ஓவர் உலக கோப்பையில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிக்கப் படுள்ளன. அதன் விவரம்:

    ஏ பிரிவு : நடப்பு சாம்பி யன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை.

    பி பிரிவு: இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் 15-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது.

    முதல் அரை இறுதி அக்டோபர் 17-ந் தேதியும், 2-வது அரை இறுதி 18-ந் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 20-ந் தேதியும் நடக்கிறது. மொத்தம் 23 ஆட்டங்கள் நடக்கிறது.

    ஸ்மிருதி மந்தனா தலைமையில் இந்திய அணி இந்த போட்டியில் கலந்து கொள்கிறது. இந்திய அணி இதுவரை உலக கோப்பையை வென்ற தில்லை. 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் இறுதிப்போட்டியில் தோற்றது சாம்பியன் பட்டத்தை இழந்தது.

    முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 4-ந்தேதி எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு துபாயில் இந்த போட்டி நடக்கிறது. 6-ந் தேதி பாகிஸ்தானுடனும் (மாலை 3.30), 9-ந் தேதி இலங்கையுடனும் (இரவு 7.30), 13-ந் தேதி ஆஸ்திரேலியாவுடனும் (இரவு 7.30) மோதுகிறது.

    நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் வங்காளதேசம்-ஸ்காட் லாந்து (மாலை 3.30) பாகிஸ்தான்-இலங்கை (இரவு 7.30) அணிகள் மோதுகின்றன.

    • டி20 உலகக்கோப்பையை ஒட்டி மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.
    • டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் பரிதாபமாக பாகிஸ்தான் வெளியேறியது.

    இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததைத் தொடர்ந்து பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து.

    இதனையடுத்து டி20 உலகக்கோப்பையை ஒட்டி மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.

    ஆனால் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் பரிதாபமாக பாகிஸ்தான் வெளியேறியது.

    இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.

    பணிச்சுமை அதிகமாக உள்ளதால் கேப்டன்சியில் இருந்து விலகி தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக பாபர் அசாம் கூறியுள்ளார்.

    • நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மகள் ஆயிராவை முகமது ஷமி சந்தித்தார்.
    • மகளுடன் ஷாப்பிங் சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகமது ஷமி பகிர்ந்துள்ளார்.

    இந்திய அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளராக முகமது ஷமி திகழ்ந்து வருகிறார். ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியர்களின் பட்டியலில் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார்.

    கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் முகமது ஷமியின் திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது. முகமது ஷமியுடன் சேர்ந்து வாழ முடியாது என அவரது மனைவி ஹசின் ஜஹான் விவாகரத்து பெற்றார். இந்த தம்பதிக்கு ஆயிரா என்ற ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மகள் ஆயிராவை முகமது ஷமி சந்தித்துள்ளார். தந்தையும் மகளும் ஒன்றாய் சேர்ந்து ஷாப்பிங் சென்றுள்ளனர். மகளுடன் ஒன்றாக ஷாப்பிங் சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகமது ஷமி பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளை மீண்டும் பார்த்தபோது என்னுடைய நேரம் நின்றது. வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு உன்னை நேசிக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமி விரைவில் இந்திய அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 4 வீராங்கனையான கோகோ காப் காலிறுதிக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றுப் போட்டியில் நம்பர் 4 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை ஒசாகா 6-3 என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக அடுத்த செட்டை கோகோ காப் 6-4 என கைப்பற்றினார்.

    அப்போது ஒசாகாவுக்கு தசை பிடிப்பு ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் கோகோ காப் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

    நாளை மறுதினம் நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் கோகோ காப், உக்ரைன் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

    • வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
    • ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.

    கான்பூர்:

    வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடந்தன. சென்னையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி கடந்த 27-ம் தேதி கான்பூரில் தொடங்கியது. இந்த ஆட்டத்தின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. இதில் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

    ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான 2-வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை (179 வெற்றி) பின்னுக்குத் தள்ளி இந்தியா (180 வெற்றி) 4வது இடத்திற்கு முன்னேறியது.

    இந்தப் பட்டியலில் முதல் 3 இடங்களில் ஆஸ்திரேலியா (414 வெற்றி), இங்கிலாந்து (397 வெற்றி), வெஸ்ட் இண்டீஸ் (183 வெற்றி) ஆகிய அணிகள் உள்ளன. தென் ஆப்பிரிக்கா 179 வெற்றியுடன் 5வது இடத்தில் உள்ளது.

    ×