என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் போபண்ணா ஜோடி அபார வெற்றி பெற்றது.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-குரோசியாவின் இவான் டோடிக், ஸ்பெயினின் பெட்ரோ மார்ட்டின்-பேப்லோ கரீனோ ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி சிறப்பாக ஆடி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த நியூசிலாந்து 160 ரன்கள் குவித்தது.

    ஷார்ஜா:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடந்த 2வது போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்தது. கேப்டன் சோபி டிவைன் அரை சதமடித்து 57 ரன்கள் எடுத்தார்.

    இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அந்த அணியின் வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடாமல் விரைவில் அவுட் ஆகினர்.

    இறுதியில், இந்திய அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் ரோஸ்மேரி மெய்ர் 4 விக்கெட்டும், லீ டஹுஹு 3 விக்கெட்டும், ஈடன் கார்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, செக் வீராங்கனை கரோலினா முச்சோவா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை முச்சோவா 7-6 (7-5) என வென்றார். அதிரடியாக ஆடிய சபலென்கா 2வது செட்டை 6-2 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை முச்சோவா 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் முச்சோவா, சீன வீராங்கனை குயின்வென் ஷெங் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதல் பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • ஸ்டஃபைன் டெய்லர் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் கேப்டன் ஹேலே மேத்யூஸ் மற்றும் கியானா ஜோசப் முறையே 10 மற்றும் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டஃபைன் டெய்லர் பொறுப்புடன் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் இணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்களை எடுத்தது.

    ஸ்டஃபைன் டெய்லர் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்துவீசிய நொன்குலேகோ லாபா 4 விக்கெட்டுகளையும், மரிசேன் கப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீராங்கனைகளான கேப்டன் லாரா வொல்வூராட் மற்றும் டாஸ்மின் ப்ரிட்ஸ் முறையே 59 மற்றும் 57 ரன்களை அடித்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 

    • இந்தியா இடம் பிடித்துள்ள "ஏ" பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் உள்ளன.
    • இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர், ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா, ரோட்ரிக்ஸ் உள்ள பேட்டர்கள் உள்ளனர்.

    சார்ஜா மற்றும் துபாயில் பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் உள்ளன.

    நேற்று "ஏ" பிரிவில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்தியா ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா, ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீராங்கனைகளுடன் பலமான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. பந்து வீச்சிலும் தீப்தி சர்மா உள்ளிட்டோர் உள்ளனர்.

    இதனால் முழு பலத்தையும் வெளிப்படுத்தி நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூட விரும்பும். அதேவேளையில் நியூசிலாந்து அணியும் பலம் வாய்ந்தது. இந்திய அணியை வீழ்த்த முனைப்பு காட்டும். இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    "பி" பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை வங்கதேசம் வீழ்த்தியிருந்தது.

    • இந்த ஆண்டுக்கான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றது.

    இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என 5 வகை பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டன.

    மாநிலம் முழுவதில் இருந்தும் 11½ லட்சம் பேர் பங்கேற்றனர். மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இதில் வெற்றி பெற்றுள்ள 33 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் இன்று முதல் 24-ந்தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது. தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், கபடி, சிலம்பம், பளுதூக்குதல், கால்பந்து, ஆக்கி, குத்துச்சண்டை, நீச்சல், கிரிக்கெட், கூடைப்பந்து, கைப்பந்து, கேரம், வாள்வீச்சு, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் உள்பட 36 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. இந்த முறை காட்சி போட்டியாக இ-ஸ்போர்ட்ஸ் இடம் பெறுகிறது.

    போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அணியினருடன் வரும் அலுவலர்களுக்கு டி-ஷர்ட் வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்களின் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவுகள் அவர்களின் சொந்த மாவட்டத்திலிருந்து கவனித்துக் கொள்ளப்படுகின்றன.

    இந்த ஆண்டுக்கான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதி, டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் ஆகியோர் தொடக்க விழாவில் ஜோதியை ஏந்தி செல்கின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைக்கிறார்.

    • இந்தியாவுக்கு சவால் விடும் திறன் வங்காளதேச அணிக்கு இல்லை.
    • வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.

    கராச்சி:

    இந்திய கிரிக்கெட் அணி, வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை (2-0) முழுமையாக கைப்பற்றியது.

    கான்பூரில் நடந்த கடைசி டெஸ்டின் முதல் 3 நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டது. அதன்பின் போட்டி தொடங்கியபோது இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது. இதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18-வது டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது.

    இந்த நிலையில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கனவில்தான் நடக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் பலம் வாய்ந்த அணியாக இந்தியா திகழ்கிறது. இந்திய மண்ணில் விளையாடும் எந்த அணிக்கும் அங்கு டெஸ்ட் தொடரை வெல்வது கனவாக மட்டுமே இருக்கும். அது கனவில்தான் நடக்கும். சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பது தற்போது ஒரு கனவாக மாறியுள்ளது.

    இதுபோன்ற வெற்றிகரமான அணிக்கு கடினமான நேரத்தை கொடுக்க வங்காளதேசம் நிறைய செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்தியாவுக்கு சவால் விடும் திறன் வங்காளதேச அணிக்கு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த வங்காளதேச அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
    • ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலர் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானுக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ மற்றும் படங்கள் வைரலாகி வருகின்றன.

    இவர்களுடைய திருமணம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள ஓட்டலில் நடந்துள்ளது. ஓட்டலுக்கு வெளியே ஏராளமானோர் நடந்து கொண்டிருக்க துப்பாக்கியுடன் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி "ஒரேயொரு கிங் கான் (King Khan) ஆன ரஷித் கானுக்கு திருமண வாழ்த்துக்கள். வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி நிறைந்திருக்க வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

    26 வயதாகும் ரஷித் கான் ஐந்து டெஸ்ட், 105 ஒருநாள் மற்றும் 93 டி20 போட்டிகளில் விளையாடிள்ளார். டெஸ்ட் போட்டியில் 34 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 190 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 152 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

    2015-ம் ஆண்டு முதன்முறையாக ஜிம்பாப்வே அணிக்கெதிராக டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்.

    • அந்த்ரே ரசல் அணி 19.1 ஓவர்கள் விளையாடிய நிலையில் லைட் பழுதால் ஆட்டம் தடைபட்டது.
    • கட்ஆஃப் நேரம் முடிவதற்கு 5 நிமிடத்திற்கு முன் சரி செய்யப்பட்டதால் ஆட்டம் 5 ஓவராக குறைக்கப்பட்டது.

    வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி கடந்த 1-ந்தேதி எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இதில் டிரிபான்கோ நைட் ரைடர்ஸ்- பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் மோதின.

    அந்த்ரே ரஸல் இடம் பிடித்துள்ள டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தபோது லைட்டில் (floodlights) பழுது ஏற்பட்டது. 6 கோபுர லைட்களில் 3-ல் பழுது ஏற்பட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது.

    இத்தனை மணி நேரத்திற்குள் தொடங்கவில்லை என்றால் போட்டி கைவிடப்படும் என ஒரு நேரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நேரம் முடிவடைய 10 நிமிடம் இருக்கும்போது லைட் பழுது சரிபார்க்கப்பட்டது.

    இதனால் பார்படோஸ் அணி 5 ஓவரில் 60 ரன்கள் அடித்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டேவிட் மில்லர் 17 பந்தில் 50 ரன்கள் அடிக்க பார்படோஸ் ராயல்ஸ் 4.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இதனால் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக அந்த்ரே ரஸல் கடும் ஏமாற்றம் அடைந்தார். இந்த நிலையில் இந்த முடிவை கொள்ளையடிக்கப்பட்டதாக உணர்கிறேன் என ரஸல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அந்த்ரே ரசல் வெளியிட்டுள்ள இஸ்டாகிராம் ஸ்டோரியில் "இணையத்தில் வந்து கருத்து தெரிவிக்கும் நபர் நான் அல்ல. என்னுடைய கருத்தின்படி இந்த வருட கரீபியன் பிரீமியர் லீக் கொள்ளை அடிக்கப்பட்டதாக உணர்கிறேன்.

    லைட் சூழ்நிலை ****ry. கட்ஆஃப் நேரம் முடிவடைவதற்கு சற்று முன் லைட் வந்தது மேலும் ****ry. அதனை விட 30 பந்தில் 60 ரன்கள் என்பது மிகப்பெரிய ****ry. இது உண்மையான ****ry என நான் கருதுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் ராமநாதன் தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ உடன் மோதினார்.

    இதில் ராமநாதன் 1-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • முதலில் ஆடிய மும்பை அணி 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் அபிமன்யு சதமடித்தார்.

    லக்னோ:

    இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் இரட்டை சதம் அடித்து 222 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரகானே 97 ரன்னும், தனுஷ் கோட்யான் 64 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.

    ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டும், யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ருத்ராஜ் கெயிக்வாட் 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    சாய் சுதர்சன் 32 ரன்னும், தேவ்தத் படிக்கல் 16 ரன்னும், இஷான் கிஷன் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பாக ஆடி சதமடித்தார்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா 4 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் 151 ரன்னும், துருவ் ஜுரல் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 116 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    ஷார்ஜா:

    9-வது மகளிர் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வங்கதேசம் வென்றது.

    இந்நிலையில், இன்று நடந்த 2வது போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 116 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாத்திமா சனா அதிகபட்சமாக 30 ரன் எடுத்தார்.

    இலங்கை அணி சார்பில் பிரபோதனி, சுகந்திகா குமாரி, சமாரி அடப்பட்டு தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    117 ரன்கள் எடுத்தால் வெற்ரி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. அந்த அணியின் வீராங்கனைகள் விரைவில் அவுட் ஆகினர்.

    இறுதியில், இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் சார்பில் சாடியா இக்பால் 3 விக்கெட்டும், பாத்திமா சனா, ஒமைமா சோகைல், நர்ஷா சாந்து தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ×