என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் பேட்டிங் செய்த எம்.பி. டைகர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் குவித்தது.
    • உபி பிரிஜ் ஸ்டார்ஸ் அணி 168 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    பிக் கிரிக்கெட் லீக் 2024 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று உபி பிரிஜ் ஸ்டார்ஸ் மற்றும் எம்.பி. டைகர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.

    அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எம்.பி. டைகர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய உபி பிரிஜ் ஸ்டார்ஸ் அணி 168 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    இப்போட்டியில் எம்.பி. டைகர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பவன் நேகி வீசிய ஒரு பந்தில் உபி பிரிஜ் ஸ்டார்ஸ் வீரர் சிராக் காந்தி கிளீன் போல்டானார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஸ்டம்பின் மேல் இருந்த பைல்ஸ் கீழே விழவில்லை. இதனால் அவர் நூலிழையில் ஆட்டமிழக்காமல் தப்பித்ததார்.

    இந்த சம்பவம் நடந்தபோது சிராக் காந்தி 98* (52) ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து அவர் ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார்.

    • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • ஜிம்பாப்வே அணி 44 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது

    ஹராரே:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக இந்தப் போட்டி 28 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. 9.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு ஜிம்பாப்வே அணி 44 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் உ.பி. அணி 11-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் உ.பி. யோதாஸ் அணி, அரியானா ஸ்டீலர்ஸ் அணியுடன் மோதியது. இதில் ஆரம்பம் முதலே உ.பி. அணி சிறப்பாக ஆடியது.

    இறுதியில், உ.பி. யோதாஸ் அணி, அரியானா அணியை 31-24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இது உ.பி. அணிக்கு கிடைத்த 11-வது வெற்றி ஆகும்.

    • இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
    • நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

    துபாய்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.

    இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டியில் அபாரமாக செயல்பட்ட நியூசிலாந்து 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (63.33 சதவீதம்), ஆஸ்திரேலியா (60.71 சதவீதம்), இந்தியா (57.29 சதவீதம்) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களில் தொடர்கின்றன.

    இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் 6-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து (48.21 சதவீதம்) 4-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இலங்கை 5-ம் இடத்திலும், இங்கிலாந்து 6-ம் இடத்திலும் உள்ளன.

    தொடர்ந்து 7 முதல் 9 இடங்களில் முறையே பாகிஸ்தான், வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன.

    • விஜய் ஹசாரே கோப்பைக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டது.
    • இந்த அணியில் இந்திய வீரர் ரகானே, ப்ரித்விஷா ஆகியோர் இடம் பெறவில்லை.

    விஜய் ஹசாரே கோப்பை வரும் 21-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 37 அணிகள் பங்கேற்கின்றனர். இந்த தொடருக்கான தமிழக அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இந்த தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் 3 போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியில் இந்திய வீரர் ரகானே, ப்ரித்விஷா ஆகியோர் இடம் பெறவில்லை.

    இந்நிலையில் அணியில் இடம் கிடைக்காதது குறித்து பிரித்வி ஷா இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     அதில், நான் இன்னும் என்ன எல்லாம் பார்க்க வேண்டும். நீங்களே சொல்லுங்கள் கடவுளே. 65 போட்டிகளில் விளையாடி 3399 ரன்கள் எடுத்துள்ளேன். ஸ்ட்ரைக் ரேட் 126, சராசரி 55.7 வைத்துள்ளேன். இது போதுமானதாக இல்லை. ஆனாலும் என் மேல் நம்பிக்கையை வைத்திருப்பேன். மக்கள் இன்னும் என்னை நம்புவார்கள் என்று நம்புகிறேன். காரணம் நான் நிச்சயமாக திரும்பி வருவேன்.. ஓம் சாய் ராம் என கூறியுள்ளார்.

    • 2024-ம் ஆண்டில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
    • அது மட்டுமே கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2024-ல் நடந்த மகிழ்ச்சியான சம்பவம் ஆகும்.

    2024-ம் ஆண்டில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அது மட்டுமே கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2024-ல் நடந்த மகிழ்ச்சியான சம்பவம் ஆகும்.

    டி20 உலகக் கோப்பையை வென்ற அதே நாளில் ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகிய 3 பேரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். வெற்றி பெற்ற கையோடு அவர்கள் மூவரும் ஓய்வை அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றது. கவுதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக அந்த தொடரில் இருந்து பொறுப்பேற்றார். ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். அந்த ஒருநாள் தொடரை இந்தியா 0-2 (3) என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.

    இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி 27 வருடங்களுக்கு பின் இருதரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும் 2024-ம் ஆண்டில் ஒரு ஒருநாள் போட்டியில் கூட இந்தியா வெற்றி பெறவில்லை என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளது. 2024-ம் ஆண்டில் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி 2024-ல் ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 1979-க்குப் பிறகு இந்தியா ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறாதது இதுவே முதல்முறை மற்றும் ஒட்டுமொத்தமாக மூன்றாவது முறையாகும்.

    இந்த தொடரை தொடர்ந்து நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரை இந்தியா 3-0 என வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நியூசிலாந்து 3-0 என இந்தியாவை ஒயிட் வாஷ் செய்து அதிர்ச்சி அளித்தது.

    முந்தைய ஒருநாள் தொடரில் இலங்கையிடம் வீழ்ந்த இந்தியா, டெஸ்ட்டில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்தது மட்டுமல்லாமல், முதல் முறையாக ஒயிட் வாஷ் ஆகி மோசமான சாதனையை ரோகித் தலைமையிலான இந்திய அணி படைத்தது.

    • ஒருநாள் தரவரிசையில் மந்தனா 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • டி20 தரவரிசையில் 3-வது இடத்தை மந்தனா பிடித்துள்ளார்.

    மகளிருக்கான டி20 மற்றும் ஒருநாள் பேட்டர் மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் மந்தனா ஒருநாள் போட்டியில் 3 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் மந்தனா 2-வது இடத்தை பிடித்துள்ளார். டி20-யில் 1 இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

    கேப்டன் கவுர் 2 இடங்கள் பின் தங்கி 13-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். டி20-யில் 1 இடம் முன்னேறி 11-வது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் டி20-யில் 6 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பந்து வீச்சை பொறுத்த வரையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒருநாள் போட்டியில் 5-வது இடத்தையும் டி20 போட்டியில் 2-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

    • ரோகித் சர்மா 10 ரன்களுடன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
    • 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி கபாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர். இதனால் 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்தது.

    கடந்த சில போட்டிகளாக ரன்களை குவிக்க தடுமாறும் ரோகித் சர்மா இந்த போட்டியிலும் 10 ரன்களுடன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் டெஸ்ட் போட்டிகளின் போது எதிரணியின் கேப்டனை அதிக முறை வீழ்த்திய கேப்டன் என்ற பட்டியலில் தற்போது நான்காவது முறையாக ரோகித் சர்மாவை வீழ்த்திய பேட் கம்மின்ஸ் இந்த பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்த பட்டியலில் முதலிடத்தில் ரிச்சி பென்னட், இம்ரான் கான் ஆகியோர் எதிரணியின் கேப்டன்களை ஐந்து முறை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு அடுத்து கபில் தேவ் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மொனாக்கோ அணியில் இடம் 180 மில்லியன் யூரோ கொடுத்து பிஎஸ்ஜி அணி வாங்கியது.
    • பிஎஸ்ஜி அணிக்காக 178 போட்டிகளில் விளையாடி 162 கோல்கள் அடித்துள்ளார்.

    பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரராக கிலியன் எம்பாப்வே உள்ளார். தற்போது மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோருக்குப் பிறகு உலக அளவில் சிறந்த வீரரான திகழ்ந்து வருகிறார்.

    25 வயதாகும் எம்பாப்வே தொடக்கத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் லீக்-1 கால்பந்து போட்டியில் மொனாக்கோ அணிக்காக விளையாடி வந்தார். தனது 15 வயதில் மொனாக்கோ சீனியர் அணியில் அறிமுகம் ஆனார். 2015 முதல் 2018 வரை மொனாக்கோ அணிக்காக 41 போட்டிகளில் விளையாடி 16 கோல்கள் அடித்தார்.

    2016-17 சீசனில் மொனாக்கோ லீக்-1 டைட்டிலை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக எம்பாப்பேயின் ஆட்டமாகும். இதனால் உலகின் மிகப்பெரிய பணக்கார கிளப்பான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எம்பாப்வேவை லோன் மூலம் வாங்கியது. 2017-18-ல் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக 27 போட்டிகளில் விளையாடி 13 கோல் அடித்தார்.

    அதன்பின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் 180 மில்லியன் யூரோ கொடுத்து மொனாக்கோ அணியில் இருந்து எம்பாப்பவே வாங்கியது. அப்போது எம்பாப்வேவுக்கு 18 வயது.

    பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனதும் எம்பாப்வேயின் ஆட்டம் மெருகேறியது. சுமார் ஆறு ஆண்டுகள் (2018-2024) பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக விளையாடினார். 178 போட்டிகளில் விளையாடி 162 கோல்கள் அடித்தார்.

    பிஎஸ்ஜி அணியில் நெய்மர், மெஸ்சி இணைந்தனர். மூன்று ஜாம்பவான்கள் சேர்ந்து விளையாடிய போதிலும் பிஎஸ்ஜி அணியால் ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல முடியவில்லை.

    பிஎஸ்ஜி அணியில் இருந்து முதலில் மெஸ்சி வெளியேறினார். அதன்பின் எம்பாப்வே வெளியேற முடிவு செய்தார். அவரை பல்வேறு அணிகள் வாங்க முன்வந்தன. ஆனால் எம்பாப்வே லா லிகா லீக்கில் விளையாடும் புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்பினார்.

    இதற்கிடையே பிஎஸ்ஜி- எம்பாப்வே இடையில் ஒப்பந்தம் 2024 சீசன் வரை இருந்தது. ஒப்பந்தம் முடிவடைய இருந்த நேரத்தில் எம்பாப்வே- பிஎஸ்ஜி இடையே ஒப்பந்தம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி அவரை வாங்க முயற்சி மேற்கொண்டது.

    எம்பாப்வே உடனான ஒப்பந்தம் முடிவடைவதற்குள் ஒப்பந்ததத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி தவறியது. இதனால் ரியல் மாட்ரிட் அணிக்கு ப்ரீ டிரான்ஸ்பர் மூலம் சென்றார். 5 வருட ஒப்பந்த கால அடிப்படையில் எம்பாப்பே ரியல் மாட்ரிட் சென்றுள்ளார்.

    ஒரு அணியுடன் ஒப்பந்தம் இல்லை என்றால் மற்றொரு அணி எந்தவிதமான டிரான்ஸ்பர் பீஸ் இல்லாமல் அந்த வீரரை ஒப்பந்தம் செய்ய முடியும். அதேவேளையில் சம்பளம் அதிக அளவில் கொடுக்க நேரிடும். ரியல் மாட்ரிட் எம்பாப்பேவுக்கு வருடத்திற்கு சுமார் 305 கோடி ரூபாய் சம்பளம் வழங்குகிறது.

    இதனால் ரியல் மாட்ரிட் எம்பாப்வே டிரான்ஸ்பருக்கான ஒரு பைசா கூட கொடுக்காமல் ஒப்பந்தம் செய்தது. ரியல் மாட்ரிட் அணிக்காக தற்போது 15 போட்டிகளில் விளையாடி 9 கோல்கள் அடித்துள்ளார்.

    2021-ல் ரியல் மாட்ரிட் 180 மில்லியன் யூரோ கொடுக்க தயாராக இருந்தது. ஆனால் பிஎஸ்ஜி மறுத்துவிட்டது. தற்போது ப்ரீ டிரான்ஸ்பராக சென்றுள்ளார்.

    18 வயதில் சாதனை

    பிஎஸ்ஜி அணியில் இணைந்த போது எம்பாப்வே 2017-ல் தனது 18 வயதில் பிரான்ஸ் அணியில் அறிமுகம் ஆனார். 2018 உலகக் கோப்பையில் கோல் அடித்து, இளம் வயதில் உலகக் கோப்பையில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் உலக அளவில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பட்டியலில் பீலேவுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார். பிஃபா உலகக் கோப்பை சிறந்த இளம் வீரர், பிரான்சின் சிறந்த வீரர் ஆகிய விருதுகளை வென்றார்.

    2021-ல் பிரான்ஸ் யுஇஎஃப்ஏ (UEFA) தேசிய லீக்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இறுதிப் போட்டியில் அதிக கோல்கள் அடித்த வீரருக்கான விருதை வென்றார்.

     2022 உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்தார். தங்க ஷூ (Golden Boot), வெள்ளி பந்து (Silver Ball) ஆகியவற்றை வென்றார்.

    அடுத்தடுத்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆனால் இதுவரை பலோன் டி'ஆர் விருதை மற்றும் பெறவில்லை. 2023-ல் 3-வது இடம் பிடித்தார்.

    • இந்திய அணி 4-வது நாள் முடிவில் 252 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
    • ஆகாஷ் தீப், பும்ரா ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 39 ரன்கள் குவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி கபாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.

    ராகுல் 84 ரன்னிலும் ஜடேஜா 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து இந்தியா பால் ஆனை தவிர்க்க போராடியது. கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா- ஆகாஷ் தீப் பொறுப்புடன் ஆடினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் பாலோ ஆனை தவிர்க்க 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆகாஷ் தீப், தேர்ட் மேன் திசையில் பந்தை அடித்தார். அது பவுண்டரியாக மாறியது.

    இதனால் இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்தது. இதனை ஓய்வு அறையில் இருந்த கவுதம் கம்பீர், விராட் கோலி சந்தோசத்தில் துள்ளி குதித்தனர். அவர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் பெரிய அளவில் ஆரவாரம் செய்தனர். வெற்றி பெற்றது போல ஒரு மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.

    பாலோ ஆனை தவிர்க்கவில்லை என்றால் ஆஸ்திரேலியா இந்தியாவை பேட்டிங் செய்ய அழைக்கும். இதனால் ஒரு நாள் முடிவில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது ஆஸ்திரேலியாவுக்கு பெரிய விஷயாமாக இருக்காது. இப்போது பாலோ ஆனை தவிர்த்ததால் கண்டிப்பாக ஆஸ்திரேலிய அணி தான் பேட்டிங் செய்யும். இதனால் ஆட்டம் டிராவை நோக்கி செல்லும்.

    பாலோ ஆன் தவிர்த்த சந்தோசத்தில் பேட் கம்மின்ஸ் வீசிய அடுத்த பந்தை ஆகாஷ் தீப் சிக்சருக்கு பறக்க விட்டார். இதனை ஓய்வு அறையில் இருந்த விராட் கோலி ஆச்சரியமுடன் பார்த்து சிரித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வெளிச்சமின்மை காரணமாக 4-வது நாள் போட்டி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து வெளி வந்த பும்ரா- ஆகாஷ் தீப்புக்கு சக வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • இந்திய தரப்பில் கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் அரை சதம் விளாசினர்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி கபாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கேஎல் ராகுல் 33 ரன்களுடனும் ரோகித் 0 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    தொடர்ந்து 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரோகித் 10 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து கேஎல் ராகுல் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் 16 ரன்னில் வெளியேறினார்.

    பொறுப்புடன் ஆடிய ஜடேஜா அரை சதம் கடந்தார். சிராஜ் 1 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து ஜடேஜா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 77 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.

    இந்நிலையில் பாலோ ஆனை தவிர்க்க 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இதற்காக பும்ரா- ஆகாஷ் தீப் ஜோடி போராடினர். இவர்களது போராட்டம் வீண் போகவில்லை. இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்தது. இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 39 ரன்கள் குவித்துள்ளது.

    இதனையடுத்து போதிய வெளிச்சம் இல்லாததால் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 252 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பும்ரா 10 ரன்களுடனும் ஆகாஷ் 27 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • ஹசில்வுட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மைதானத்தை விட்டு பாதியில் வெளியேறினார்.
    • இந்த போட்டியில் தொடர்ந்து பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    பிரிஸ்பேன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 117.1 ஓவர்களில் 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 151 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இந்தியா தரப்பில் கேஎல் ராகுல், ஜடேஜா அரைசதம் அடித்து அசத்தினார்.

    இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜோஷ் ஹசில்வுட் இன்றைய ஆட்டத்தில் இருந்து பாதியில் விலகினார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவர் இந்த போட்டியில் தொடர்ந்து பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் காயம் காரணமாக மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஹசில்வுட் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×