என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நீங்களே சொல்லுங்கள் கடவுளே.. மும்பை அணியில் இடம் பெறாதது குறித்து ஸ்டோரி வைத்த பிரித்வி ஷா
- விஜய் ஹசாரே கோப்பைக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டது.
- இந்த அணியில் இந்திய வீரர் ரகானே, ப்ரித்விஷா ஆகியோர் இடம் பெறவில்லை.
விஜய் ஹசாரே கோப்பை வரும் 21-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 37 அணிகள் பங்கேற்கின்றனர். இந்த தொடருக்கான தமிழக அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் 3 போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியில் இந்திய வீரர் ரகானே, ப்ரித்விஷா ஆகியோர் இடம் பெறவில்லை.
இந்நிலையில் அணியில் இடம் கிடைக்காதது குறித்து பிரித்வி ஷா இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், நான் இன்னும் என்ன எல்லாம் பார்க்க வேண்டும். நீங்களே சொல்லுங்கள் கடவுளே. 65 போட்டிகளில் விளையாடி 3399 ரன்கள் எடுத்துள்ளேன். ஸ்ட்ரைக் ரேட் 126, சராசரி 55.7 வைத்துள்ளேன். இது போதுமானதாக இல்லை. ஆனாலும் என் மேல் நம்பிக்கையை வைத்திருப்பேன். மக்கள் இன்னும் என்னை நம்புவார்கள் என்று நம்புகிறேன். காரணம் நான் நிச்சயமாக திரும்பி வருவேன்.. ஓம் சாய் ராம் என கூறியுள்ளார்.






