என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகம் ஆனார்
    • அடிலெய்டு டெஸ்ட் போட்டியே அஸ்வினின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் 3 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று டிராவில் முடிந்தது. இந்த தொடரில் அஸ்வின் 2-வது போட்டியில் மட்டுமே விளையாடினார். முதல் மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியே அஸ்வினின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.

    அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

    ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் அஷ்வினுக்கு ஐசிசி தலைவரான ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "தன்னுடைய சுழற்பந்து வீச்சு மூலமும் கிரிக்கெட் விளையாட்டை பற்றிய சிறந்த அறிவாலும் இந்திய அணியின் மிகசிறந்த மேட்ச் வின்னராக திகழ்ந்தவர் அஷ்வின். பெருமைப்பட வேண்டிய சர்வதேச கிரிக்கெட்டை அவர் விளையாடியுள்ளார். உங்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் காசிமா தங்கம் வென்றார்.
    • குழு போட்டியில் பங்கேற்ற நாகஜோதி தங்கம் வென்றார்.

    உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர். சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்-க்கு தமிழக அரசு பரிசுத் தொகை அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், கேரம் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கு தமிழக அரசு எந்த ஊக்கத்தொகையும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கேரம் சாம்பியன் காசிமாவின் தந்தை தமிழக அரசு தனது மகளுக்கு ஊக்கத்தொகை அறிவிக்காததில் வருத்தம் இருப்பதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கம் வென்ற காசிமாவுக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. குழு போட்டியில் தங்கம் வென்ற நாகஜோதிக்கு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரட்டையர் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கும் ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய அணி என்ன சிந்திக்கிறது எந்த கலவையை விரும்புகிறது என்பதை அஸ்வின் புரிந்துள்ளார்.
    • அஸ்வின் எடுக்கும் முடிவுக்கு மரியாதை கொடுத்து நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருப்பது அவசியம்.

    அஸ்வின் ஓய்வு குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். முதல் போட்டியின் முடிவிலேயே ஓய்வை அறிவிக்க போவதாக அஸ்வின் கூறினார். நான் தான் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுங்கள் என கூறி அவரை சம்மதிக்க வைத்தேன் என ரோகித் சர்மா கூறினார்.

    இது பற்றி ரோகித் சர்மா கூறியதாவது:-

    முதல் போட்டியின் போதே இந்த முடிவில் அவர் உறுதியாக இருந்தார். அப்போட்டியின் முதல் 3 -4 நாட்கள் நான் இந்திய கிரிக்கெட் அணியில் இல்லை. அப்போது இது தான் அவரது மனதில் இருந்தது. அதற்குப் பின்னணியில் நிறைய விஷயங்கள் இருந்தன.

    இது பற்றிய தெளிவான விளக்கங்களை அஸ்வின் தன்னுடைய இடத்தில் கொடுப்பார் என்று நினைக்கிறேன். இந்திய அணி என்ன சிந்திக்கிறது எந்த கலவையை விரும்புகிறது என்பதை அஸ்வின் புரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் எந்த ஸ்பின்னர் விளையாடுவார் என்பது சூழ்நிலை காரணமாக எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை.

    அதனால் மைதானத்தை பார்த்த பின்பே முடிவை எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் பெர்த் நகருக்கு வந்ததும் இதைத்தான் நாங்கள் பேசினோம். எப்படியோ நான் அவரை சம்மதிக்க வைத்து இரண்டாவது போட்டியில் விளையாட வைத்தேன். அனேகமாக இந்தத் தொடருக்கு தேவைப்படாத நான் வெளியே செல்வதே சிறந்த வழி என்று அஸ்வின் உணர்ந்திருக்கலாம்.

    அதனால் கிரிக்கெட்டுக்கு அவர் குட் பை சொல்லியிருக்கலாம். அடுத்தப் போட்டியில் எந்த ஸ்பின்னர் தேவை என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும் அஸ்வின் எடுக்கும் முடிவுக்கு மரியாதை கொடுத்து நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருப்பது அவசியம் என்று கூறினார். 

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு இடையே தனது ஓய்வு முடிவை அறிவித்த 3-வது இந்தியராக அஸ்வின் உள்ளார்.
    • 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தோனி தனது ஓய்வை அறிவித்தார்.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் 3 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று டிராவில் முடிந்தது. இந்த தொடரில் அஸ்வின் 2-வது போட்டியில் மட்டுமே விளையாடினார். முதல் மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியே அஸ்வினின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.

    இதன் மூலம் எம்.எஸ்.தோனி பாணியில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடருக்கு நடுவே ஓய்வை அறிவித்துள்ளார்.

    2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்திய சுற்றுப்பயணத்தின் போது எம்.எஸ்.தோனி தனது ஓய்வை அறிவித்தார். தொடரின் 3-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அணியின் கேப்டனாக இருக்கும் போது அவர் தனது ஓய்வை அறிவித்தார். தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 38.09 சராசரியில் 4,876 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு இடையே தனது ஓய்வு முடிவை அறிவித்த 3-வது இந்தியராக அஸ்வின் உள்ளார்.

    ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அனில் கும்ப்ளே தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கும்ப்ளே ஓய்வு முடிவை அறிவித்தார்.

    இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தோனி 3-வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அந்த வகையில் அஸ்வினும் தொடருக்கு நடுவே ஓவ்யு முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச கிரிக்கெட்டில் இன்றுதான் எனது கடைசி நாள்.
    • ரோகித், விராட், ரகானே, புஜாரா எனப் பல கிரிக்கெட்டர்களுக்கு நன்றி கூற வேண்டியுள்ளது.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டி மழையால் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    ஓய்வு குறித்து அஸ்வின் கூறியதாவது:-

    அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இதுதான் எனது கடைசி நாள். ஒரு கிரிக்கெட்டராக எனக்குள் இன்னும் திறமை இருப்பதாகவே உணர்கிறேன். ஆனாலும், க்ளப் அளவிலான கிரிக்கெட்டில் அதைக் காட்ட விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் இன்றுதான் எனது கடைசி நாள்.

    ரோகித், விராட், ரகானே, புஜாரா எனப் பல கிரிக்கெட்டர்களுக்கு நன்றி கூற வேண்டியுள்ளது. நன்றி சொல்வதற்கு நிறைய பேர் உள்ளனர். நிறைய நினைவுகளைச் சேகரித்துள்ளேன். இது மிகவும் உணர்ச்சி மிகுந்த தருணம்.

    என்று கூறினார்.

    இன்றைய போட்டிக்கு முன்னதாக, விராட் கோலி- அஸ்வின் இருவரும் அமர்ந்து பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்தக் வீடியோவில், விராட் கோலி, அஸ்வினை ஆரத் தழுவுகிறார். அப்போது, அஸ்வின் உணர்ச்சிவசப்பட்டு கணகலங்கினார்.

    இதைத் தொடர்ந்து, அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என்ற யூகங்களும் கிளம்பிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

    • முதல் ஆட்டத்தில் வங்கதேசம் அணி 7 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது.
    • இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் கைப்பற்றியது.

    கிங்ஸ்டன்:

    வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் தோற்று தொடரை இழந்தது.

    கிங்ஸ்டனில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்காளதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஷமிம் ஹொசைன் 35 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மோட்டி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 102 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 32, அகேல் ஹொசின் 31 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேசம் 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதல் ஆட்டத்திலும் அந்த அணி 7 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டி 20-ந்தேதி நடக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காபாவில் நடைபெற்றது.
    • செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காபாவில் நடைபெற்றது.

    இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    அப்படி இந்திய அணி பேட்டிங் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜஸ்பிரித் பும்ரா, "நீங்கள் என் பேட்டிங் திறமை பற்றி கேள்வி எழுப்பியுள்ளீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர் நான் தான். இதுபற்றி அறிந்து கொள்ள நீங்கள் கூகுளை பயன்படுத்தலாம். நகைச்சுவையை விட்டு விடுங்கள்," என்று பதில் அளித்தார்.

     


    கூகுள் தேடல் குறித்த பும்ராவின் கருத்துக்கு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நான் கூகுள் செய்தேன். கம்மின்ஸ் பந்தில் சிக்சர் விளாசுபவர் யாராக இருந்தாலும் அவருக்கு நிச்சயம் பேட்டிங் தெரியும். ஆகாஷ் தீப் உடன் இணைந்து ஃபாலோ ஆன்-ஐ தடுத்த விதம் நன்றாக இருந்தது ஜஸ்பிரித் பும்ரா," என்று குறிப்பிட்டுள்ளார்.

    சுந்தர் பிச்சையின் எக்ஸ் பதிவுக்கு பதில் அளித்த எலான் மஸ்க், "அருமை" என்று பதில் அளித்து இருந்தார். இந்திய வீரர் பும்ராவின் கருத்துக்கு சுந்தர் பிச்சை எக்ஸ் தளத்தில் பதில் அளித்தது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
    • இந்த போட்டி முடிந்த பிறகு தமிழக வீரர் அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.

    பிரிஸ்பேன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டி 2-வது நாள் மட்டுமே முழுமையாக நடைபெற்றது. மற்ற 4 நாட்களுமே மழையால் அடிக்கடி பாதிக்கப்பட்டது. இன்று 5-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இந்த போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் சக வீரர்களுக்கும் பிசிசிஐ-க்கு நன்றி தெரிவித்தார்.

    அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

    • 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 89/7 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
    • இந்திய தரப்பில் பும்ரா 3, சிராஜ், ஆகாஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பிரிஸ்பேன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்து இருந்தது.

    கே.எல். ராகுல் 84 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 77 என்னும் எடுத்தனர். ஜஸ்பிரீத் பும்ரா 10 ரன்னும், ஆகாஷ் தீப் 27 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கடைசி விக்கெட்டான இந்த ஜோடி பாலோ ஆனை தவிர்த்தது. இந்த டெஸ்டில் 2-ம் நாள் ஆட்டத்தை தவிர எஞ்சிய 3 நாட்களும் மழையால் பாதிக்கப்பட்டது. முதல் நாளில் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. 193 ரன்கள் பின்தங்கி, கைவசம் 1 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது.

    போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் கடைசி விக்கெட் சரிந்தது. இந்திய அணி 78.5 ஓவரில் 260 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 185 ரன் குறைவாகும்.

    ஆகாஷ் தீப் 31 ரன்னில் ஆட்டம் இழந்தார். பும்ரா அதே 10 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்த கடைசி விக்கெட் ஜோடி 47 ரன் எடுத்தது. கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹசில்வுட், நாதன் லயன், டிராவிஸ் ஹெட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    185 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கிய போது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை போட்டி மீண்டும் தொடங்கவில்லை.

    மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மழை விட்டதும் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சாலும் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிந்தன. 11 ஓவரில் 33 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 5 விக்கெட்டை இழந்தது. உஸ்மான் கவாஜா (8 ரன்), லபுஷேன் (1) ஆகியோர் பும்ரா பந்திலும், நாதன் மெக்ஸ்வீனி (47), மிச்செல் மார்ஷ் (2) ஆகியோர் ஆகாஷ்தீப் பந்திலும் அவுட் ஆனார்கள். ஸ்டீவ் சுமித் 4 ரன்னில், முகமது சிராஜ் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

    ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் சரிந்ததால் இந்த டெஸ்டில் பரபரப்பு ஏற்பட்டது. டிரெவிஸ் ஹெட் 17 ரன்கள் விளாசி அவுட் ஆனார். அடுத்து கேப்டன் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி 10 பந்தில் 22 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். 18 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்த போது ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

    இதனால் இந்தியாவுக்கு 275 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்ததுள்ளது. தொடர்ந்து மழை பெறுவதால் ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.

    • இலங்கை அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.

    நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய நியூசிலாந்து அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் நியூசிலாந்து நாட்டிலேயே நடைபெறுகிறது. இந்த நிலையில், நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு மிட்செல் சாண்ட்னெர்-ஐ நியமித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.

    இதைத் தொடர்ந்து நியூசிலாந்து கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மிட்செல் சான்ட்னெர் நியூசலாந்து அணிக்காக 30 டெஸ்ட், 107 ஒருநாள் மற்றும் 106 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 

    • இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
    • மழை காரணமாக போட்டி தடைப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் இடையிலான மூன்றாவது போட்டி காபாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி தொடங்கிய முதல் நாளில் இருந்தே மழை காரணமாக போட்டி பலமுறை தடைப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆகி இருந்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இடையில், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ஆகியோர் விக்கெட்டை பறிக்கொடுக்காமல் ஆடி வந்தனர். எனினும், இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க போராடியது. இந்த நிலையில், களத்தில் இருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இதனால் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க முடிந்தது. இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஆகாஷ் தீப் 31 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்களை சேர்த்துள்ளது. ஸ்கோர் அடிப்படையில் இந்திய அணி 185 பின்னணியில் உள்ள நிலையில், மழை காரணமாக போட்டி தடைப்பட்டுள்ளது. 

    • புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது.
    • மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இந்த தொடரில் நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் - பெங்களூரு அணிகள் மோதின.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய ஜெய்ப்பூர் ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 35-26என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

    ×