என் மலர்
நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் தொடர்"
- ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்தன.
- இரு அணிகள் இடையிலான தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்தன.
இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு அணிகள் இடையிலான தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இதனிடையே இந்த இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நாளை (டிசம்பர் 14) தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியாவின் 11 வீரர்கள் அடங்கிய பிளேயிங் 11 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா தரப்பில் கடந்த போட்டியில் காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இதுதவிர அந் அணியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் 11 அணியில்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
- மழை காரணமாக போட்டி தடைப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் இடையிலான மூன்றாவது போட்டி காபாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி தொடங்கிய முதல் நாளில் இருந்தே மழை காரணமாக போட்டி பலமுறை தடைப்பட்டு வந்தது.
இந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆகி இருந்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இடையில், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ஆகியோர் விக்கெட்டை பறிக்கொடுக்காமல் ஆடி வந்தனர். எனினும், இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க போராடியது. இந்த நிலையில், களத்தில் இருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனால் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க முடிந்தது. இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஆகாஷ் தீப் 31 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்களை சேர்த்துள்ளது. ஸ்கோர் அடிப்படையில் இந்திய அணி 185 பின்னணியில் உள்ள நிலையில், மழை காரணமாக போட்டி தடைப்பட்டுள்ளது.
- மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காபாவில் நடைபெற்றது.
- செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காபாவில் நடைபெற்றது.
இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்படி இந்திய அணி பேட்டிங் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜஸ்பிரித் பும்ரா, "நீங்கள் என் பேட்டிங் திறமை பற்றி கேள்வி எழுப்பியுள்ளீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர் நான் தான். இதுபற்றி அறிந்து கொள்ள நீங்கள் கூகுளை பயன்படுத்தலாம். நகைச்சுவையை விட்டு விடுங்கள்," என்று பதில் அளித்தார்.

கூகுள் தேடல் குறித்த பும்ராவின் கருத்துக்கு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நான் கூகுள் செய்தேன். கம்மின்ஸ் பந்தில் சிக்சர் விளாசுபவர் யாராக இருந்தாலும் அவருக்கு நிச்சயம் பேட்டிங் தெரியும். ஆகாஷ் தீப் உடன் இணைந்து ஃபாலோ ஆன்-ஐ தடுத்த விதம் நன்றாக இருந்தது ஜஸ்பிரித் பும்ரா," என்று குறிப்பிட்டுள்ளார்.
சுந்தர் பிச்சையின் எக்ஸ் பதிவுக்கு பதில் அளித்த எலான் மஸ்க், "அருமை" என்று பதில் அளித்து இருந்தார். இந்திய வீரர் பும்ராவின் கருத்துக்கு சுந்தர் பிச்சை எக்ஸ் தளத்தில் பதில் அளித்தது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.






