என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நிறைய நினைவுகளைச் சேகரித்துள்ளேன்.. ஓய்வு குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி
    X

    நிறைய நினைவுகளைச் சேகரித்துள்ளேன்.. ஓய்வு குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி

    • சர்வதேச கிரிக்கெட்டில் இன்றுதான் எனது கடைசி நாள்.
    • ரோகித், விராட், ரகானே, புஜாரா எனப் பல கிரிக்கெட்டர்களுக்கு நன்றி கூற வேண்டியுள்ளது.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டி மழையால் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    ஓய்வு குறித்து அஸ்வின் கூறியதாவது:-

    அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இதுதான் எனது கடைசி நாள். ஒரு கிரிக்கெட்டராக எனக்குள் இன்னும் திறமை இருப்பதாகவே உணர்கிறேன். ஆனாலும், க்ளப் அளவிலான கிரிக்கெட்டில் அதைக் காட்ட விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் இன்றுதான் எனது கடைசி நாள்.

    ரோகித், விராட், ரகானே, புஜாரா எனப் பல கிரிக்கெட்டர்களுக்கு நன்றி கூற வேண்டியுள்ளது. நன்றி சொல்வதற்கு நிறைய பேர் உள்ளனர். நிறைய நினைவுகளைச் சேகரித்துள்ளேன். இது மிகவும் உணர்ச்சி மிகுந்த தருணம்.

    என்று கூறினார்.

    இன்றைய போட்டிக்கு முன்னதாக, விராட் கோலி- அஸ்வின் இருவரும் அமர்ந்து பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்தக் வீடியோவில், விராட் கோலி, அஸ்வினை ஆரத் தழுவுகிறார். அப்போது, அஸ்வின் உணர்ச்சிவசப்பட்டு கணகலங்கினார்.

    இதைத் தொடர்ந்து, அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என்ற யூகங்களும் கிளம்பிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

    Next Story
    ×