என் மலர்
நீங்கள் தேடியது "ICC Women Cricket"
- ஒருநாள் தரவரிசையில் மந்தனா 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
- டி20 தரவரிசையில் 3-வது இடத்தை மந்தனா பிடித்துள்ளார்.
மகளிருக்கான டி20 மற்றும் ஒருநாள் பேட்டர் மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் மந்தனா ஒருநாள் போட்டியில் 3 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் மந்தனா 2-வது இடத்தை பிடித்துள்ளார். டி20-யில் 1 இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
கேப்டன் கவுர் 2 இடங்கள் பின் தங்கி 13-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். டி20-யில் 1 இடம் முன்னேறி 11-வது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் டி20-யில் 6 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சை பொறுத்த வரையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒருநாள் போட்டியில் 5-வது இடத்தையும் டி20 போட்டியில் 2-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஐசிசி-யின் இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கான சிறந்த வீராங்கனை ஆகிய விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே ஹீலி சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.






