என் மலர்
விளையாட்டு
- உன்னால் முடியாது என்று சொன்னால்தான் நான் எழுவேன்.
- உன்னால் முடியும் என்று சொன்னால் தூங்கிவிடுவேன்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடியது. இதில் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. மழையால் ஆட்டம் டிரா ஆனது.
இந்த போட்டி முடிந்த பிறகு அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். அவர் 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
இந்நிலையில் இந்திய அணிக்கு கேப்டனாகாதது ஏன் என்பது குறித்து தமிழக வீரர் அஸ்வின் விளக்க அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டன் ஆகாததற்கே ENGINEERINGதான் காரணம். உன்னால் முடியாது என்று சொன்னால்தான் நான் எழுவேன்.
உன்னால் முடியும் என்று சொன்னால் தூங்கிவிடுவேன். அதுபோலதான் 'நீ இந்திய அணிக்கு கேப்டன் ஆகலாம்' என நிறைய பேர் என்னிடம் சொன்னதால்தான் நான் தூங்கிவிட்டேன்.
என அஸ்வின் கூறினார்.
- அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது.
- இந்திய தரப்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை விழ்த்தினார்.
அயர்லாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அயர்லாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளாக சாரா ஃபோர்ப்ஸ் - கேப்டன் கேபி லூயிஸ் களமிறங்கினர்.
இதில் சாரா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உனா ரேமண்ட்-ஹோய் 5, ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 9, லாரா டெலானி 0 என அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனையடுத்து கேப்டன் கேபி லூயிஸ் மற்றும் லியா பால் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
லியா பால் 59 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் லூயிஸ் 92 ரன்னில் தீப்தி சர்மா பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை விழ்த்தினார்.
- நான் மைதானத்தை விட்டு வெளியேறினாலும், அது எப்போதும் நான் யார் என்பதில் ஒரு பகுதியாகவே இருக்கும்.
- இந்திய அணிக்காக 9 ஒருநாள் போட்டி மற்றும் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் சராசரியாக 145 வேகத்தில் பந்து வீசக்கூடியவர். இவர் இந்திய அணிக்காக 9 ஒருநாள் போட்டி மற்றும் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த 20 ஆண்டுகளாக, நான் வேகமாகப் பந்து வீசுவதில்தான் வாழ்ந்திருக்கிறேன், சுவாசித்திருக்கிறேன், செழித்திருக்கிறேன். இன்று, மிகுந்த நன்றியுடன், பிரதிநிதித்துவ கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.
மேலும் பிசிசிஐ மற்றும் மாநில அணியான ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி. தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பிசியோக்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் நன்றி.
ஆரோன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு பங்கை வகித்ததற்காக தனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், பயிற்சியாளர்கள், அணி வீரர்கள் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்தார்.
வேகப்பந்து வீச்சுதான் எனது முதல் காதல். நான் மைதானத்தை விட்டு வெளியேறினாலும், அது எப்போதும் நான் யார் என்பதில் ஒரு பகுதியாகவே இருக்கும்.
என்று ஆரோன் கூறினார்.
- உலகின் 3-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் ஷெவ்செங்கோவுடன் தனது மோதலை தொடங்குகிறார்.
- சபலென்கா கடந்த வாரம் நடந்த பிரிஸ்பேன் சர்வதேச போட்டியில் வென்ற உத்வேகத்துடன் கால் பதிக்கிறார்.
மெல்போர்ன்:
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 12-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் (டிரா) மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான ஜானிக் சினெர் (இத்தாலி) முதல் சுற்றில் தரவரிசையில் 34-வது இடம் வகிக்கும் சிலி வீரர் நிகோலஸ் ஜாரியை சந்திக்கிறார்.
கடந்த ஆண்டு அரையிறுதியில் ஜோகோவிச்சையும், இறுதிப்போட்டியில் டேனில் மெட்விடேவையும் வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சினெர் அதனை தக்கவைத்து கொள்ளும் முனைப்புடன் தயாராகி வருகிறார். ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய அவர் காலிறுதியில் சிட்சிபாஸ் (கிரீஸ்) அல்லது அலெக்ஸ் டி மினாரையோ (ஆஸ்திரேலியா), அரையிறுதியில் மெட்விடேவையோ சந்திக்க வேண்டியது வரலாம்.
10 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தனது முதலாவது ஆட்டத்தில் 'வைல்டு கார்டு' மூலம் களம் இறங்கும் 133-ம் நிலை வீரரான அமெரிக்காவின் நிஷேஷ் பசவாரெட்டியை எதிர்கொள்கிறார். ஆஸ்திரேலிய ஓபன் (10 முறை) மற்றும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அதிக முறை (24) வென்ற வீரர் என்ற பெருமைக்குரிய ஜோகோவிச் கடந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் எதுவும் வெல்லவில்லை. அந்த குறையை போக்கும் ஆர்வத்துடன் இருக்கும் அவருக்கு இந்த போட்டி தொடரில் கடும் பலப்பரீட்சை காத்திருக்கிறது. அவர் எதிர்பார்த்தப்படி முன்னேற்றம் கண்டால் காலிறுதியில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான கார்லஸ் அல்காரசுடனும் (ஸ்பெயின்), அரையிறுதியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவுடனும் (ஜெர்மனி) மோதக்கூடும்.
உலகின் 3-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் ஷெவ்செங்கோவுடன் தனது மோதலை தொடங்குகிறார். 2-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ், வைல்டு கார்டு மூலம் வாய்ப்பு பெற்றுள்ள பிரான்சின் லூகாஸ் பொய்லியை சந்திக்கிறார். இதேபோல் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் டெல்யர் பிரிட்ஸ், சக நாட்டை சேர்ந்த ஜெனசன் புரூக்ஸ்பியையும், 6-ம் நிலை வீரரான நார்வேயின் கேஸ்பர் ரூட், ஸ்பெயினின் ஜாமி முனாரையும், ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், வைல்டு கார்டு வாய்ப்பு மூலம் நுழைந்துள்ள காசிடிக் சாம்ராஜையும் (தாய்லாந்து) சந்திக்கின்றனர்.
உலக தரவரிசையில் 96-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் 26-ம் நிலை வீரரான தாமஸ் மச்சாக்குடன்(செக்குடியரசு) பலப்பரீட்சை நடத்துகிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் தொடக்க சுற்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான அரினா சபலென்காவுக்கு (பெலாரஸ்) கடும் சவால் காத்து இருக்கிறது. தொடர்ந்து 3-வது முறையாக பட்டம் வெல்லும் ஆர்வத்துடன் இருக்கும் சபலென்கா, 2017-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோன் ஸ்டீபன்சுடன் தனது பயணத்தை தொடங்குகிறார். சபலென்கா கடந்த வாரம் நடந்த பிரிஸ்பேன் சர்வதேச போட்டியில் வென்ற உத்வேகத்துடன் கால் பதிக்கிறார்.
'டிரா' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சபலென்கா கூறுகையில், 'ஆஸ்திரேலிய ஓபனை தொடர்ந்து 2 முறை வென்று திரும்பி இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் தொடர்ந்து என்னால் சிறப்பாக செயல்பட முடியும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளவருமான அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன் முன்னாள் சாம்பியனும், சக நாட்டு வீராங்கனையுமான சோபியா கெனினுடன் மோதுகிறார்.
2-ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து). செக்குடியரசின் கேத்ரினா சினியாகோவாவையும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்), கரோலின் கார்சியாவையும் (ஜெர்மனி), விம்பிள்டன் முன்னாள் சாம்பியனான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), வைல்டு கார்டு மூலம் வாய்ப்பு பெற்று இருக்கும் எமெர்சன் ஜோன்சையும் (ஆஸ்திரேலியா), பிரெஞ்சு ஓபன் முன்னாள் சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா), பெலின்டா பென்சிச்சையும் (சுவிட்சர்லாந்து), 4-ம் நிலை வீராங்கனை ஜாஸ்மின் பாலினி (இத்தாலி), தகுதி சுற்று மூலம் முன்னேறிய சீனாவின் சிஜி வெய்யையும், ஒலிம்பிக் சாம்பியன் கின்வென் செங் (சீனா), ருமேனியாவின் அன்கா தடோனியையும் எதிர்த்து ஆடுகின்றனர்.
- ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
- இந்திய அணி துபாயில் விளையாடுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர் கே.எல். ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி துவங்கும் கிரிக்கெட் தொடரில் ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
இந்த தொடர் அடுத்த மாதம் துவங்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போட்டிகளை இந்திய அணி துபாயில் விளையாடுகிறது. மற்ற போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.
"இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தனக்கு பிரேக் வேண்டும் என்று அவர் (கே.எல். ராகுல்) கேட்டுக் கொண்டுள்ளதாகவும், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணி தேர்வில் அவர் பங்கேற்பார்," என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கே.எல். ராகுல் இடம்பெறாத பட்சத்தில், ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
- ஓய்வுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார்.
- வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் ஜாம்பவானும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனுமான டோனி, கிரிக்கெட் ஆடுகளத்தில் தனது விளையாட்டு நுணுக்கங்களுக்காவும், கனநேரத்தில் முடிவு எடுக்கும் திறனுக்காகவும் பெரிதும் போற்றப்படுபவர். கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றநிலையில் சி.எஸ்.கே அணிக்காக ஐ.பி.எல்-லில் மட்டும் விளையாடி வருகிறார்.
ஓய்வுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். குறிப்பாக தனது மகள் ஜிவாவுடன் பொழுதுபோக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ள டோனி, மகளுடன் இணைந்து செல்லப்பிராணி பராமரிப்பில் ஈடுபட்டார்.
தனது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செல்லப்பிராணி நாய்க்கு, டோனி 'சீப்பு'வை கொண்டு வாரி விட்டார். அருகில் உட்கார்ந்திருந்த ஜிவா, தந்தையின் நடவடிக்கையை பார்த்து சிரித்தப்படி நாயுடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- இந்தி நமது தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி மட்டும் தான் என்று அஸ்வின் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பட்டமளிப்பு விழாவில் பேசிய அஸ்வின், 'ஆங்கில மாணவர்கள் யார் எல்லாம் இருக்கிறீர்கள், தமிழ் மாணவர்கள் யாரெல்லாம் இருக்கிறீர்கள்' என கேட்க தமிழ் மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் 'இந்தி மாணவர்கள் யார் எல்லாம் இருக்கிறீர்கள்' என்று அஸ்வின் கேட்க மாணவர்கள் அனைவரும் அமைதியானார்கள்.
இதனையடுத்து பேசிய அஸ்வின், "இந்தி நமது தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி மட்டும் தான்" என்று தெரிவித்தார்.
இந்தி தேசிய மொழி அல்ல என்று அஸ்வின் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கோப்பையை வெல்ல அனைத்து வீரர்களும் உழைத்தனர்.
- காலிஸ், நரைன் மற்றும் நான் அனைவரும் இந்த முயற்சிக்கு பங்களித்தோம்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி. இவர் இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டி 3 டி20 போட்டியில் விளையாடி 1 அரைசதம் 1 சதம் விளாசியுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் 98 போட்டிகள் விளையாடி உள்ளார். இதில் 7 அரை சதம் அடித்துள்ளார்.
2012-ம் ஆண்டு கொல்கத்தா அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. அந்த அணியில் மனோஜ் திவாரி இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் கோப்பையை வெல்ல அனைத்து வீரர்களும் உழைத்தனர். ஆனால் பெருமையெல்லாம் கேப்டனான கவுதம் கம்பீருக்கு சென்றது என மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் அனைவரும் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டோம். கவுதம் கம்பீர் தனியாக கொல்கத்தா அணியை வெல்ல அழைத்துச் செல்லவில்லை. காலிஸ், நரைன் மற்றும் நான் என அனைவரும் இந்த முயற்சிக்கு பங்களித்தோம்.
ஆனால் யார் அந்த பெருமையை ஏற்றுக்கொண்டார்கள்? கவுதம் கம்பீர் ஐபிஎல்-க்கு முன்பு ஒரு வலுவான பிஆர் அணியை நியமித்து, அனைத்து பெருமையும் அவருக்கே சேரும்படி செய்துவிட்டார்.
இவ்வாறு மனோஜ் கூறினார்.
- 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய், சீன வீரரான லி ஷிஃபெங் உடன் மோதினார்.
- முதல் செட்டை லி ஷிஃபெங் எளிதாக வென்றார். 2-வது செட்டை பிரணாய் 21-15 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய், சீன வீரரான லி ஷிஃபெங் உடன் மோதினார்.
முதல் செட்டை லி ஷிஃபெங் எளிதாக வென்றார். 2-வது செட்டை பிரணாய் 21-15 என்ற கணக்கில் வீழ்த்தினார். வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட் பரபரப்பாக சென்றது. இந்த செட்டில் 23-21 என்ற கணக்கில் லி ஷிஃபெங் வெற்றி பெற்றார்.
இதனால் லி ஷிஃபெங் 21-6, 15-21, 23-21 என்ற செட் கணக்கில் பிரணாய்யை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். சீன வீரர் முதல் சுற்றில் இந்திய வீரரான பிரியன்ஷு ரஜாவதை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2 முறை கவர் ட்ரைவ் அடித்து ஆட்டம் இழந்ததால் சச்சின், சரி சிட்னியில் நான் இரட்டை சதம் அடிப்பேன் என்று கூறிவிட்டு அடித்தார்.
- விராட் கோலியை விட சச்சின் முற்றிலும் வித்தியாசமான வீரர்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 190 ரன்கள் தான் சேர்த்தார்.
இதனால் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி களத்தில் இருந்தாலே அது இந்திய அணிக்கு மதிப்பை தான் கொடுக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி நாளைய டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து விடுவார். அவர் அந்த அளவுக்கு ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். கோலி நன்றாக விளையாடக் கூடியவர். அவர் எப்போது எனக்கு போதும் என்று முடிவு எடுக்கிறாரோ அதுவரை அவர் விளையாட வேண்டும்.
திடீரென்று விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால், அது ஒரே ஒரு அணிக்கு தான் இழப்பு. அது இந்தியா தான்! விராட் கோலி இருக்கும் அணியில் நான் கேப்டனாக இருந்தால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் அடிக்க வில்லை என்றாலும் நான் அவர் எனது அணியில் இருக்க வேண்டும் என தேர்வு குழுவினரிடம் சண்டை போடுவேன்.
பலரும் சச்சினின் சிட்னியில் இரட்டை சதம் அடித்தது குறித்து பேசுகிறார்கள். ஆனால் விராட் கோலியை விட சச்சின் முற்றிலும் வித்தியாசமான வீரர். அந்த தொடரில் இரண்டு முறை கவர் ட்ரைவ் அடித்து ஆட்டம் இழந்ததால் சச்சின், சரி சிட்னியில் நான் இரட்டை சதம் அடிப்பேன் என்று கூறிவிட்டு அடித்தார். எனவே சச்சினை யாருடனும் ஒப்பிட முடியாது.
விராட் கோலியின் பலமே பந்து பேட்டில் படுவதுதான். கோலியும் வித்தியாசமாக விளையாடக்கூடிய வீரராக இருக்கிறார். விராட் கோலி பேட்டிங்கில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவர் களத்தில் இருந்தாலே அது இந்திய அணிக்கு மதிப்பை தான் கொடுக்கும். எதிரணியின் விக்கெட்டுகளை எடுக்க விராட் கோலி நல்ல பிளான்களை வழங்குவார்.
என்று கிளார்க் கூறினார்.
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடக்கிறது.
- இந்த தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் தோனி நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான அணிகளை வருகிற 12-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ளது. இந்த வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய பிப்ரவரி 12-வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் எம்எஸ் டோனி நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்கில் வெளியாகி வருகிறது.
2021-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பைக்கான தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டார். அதில் இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்குகிறது.
- பேட் கம்மின்ஸ்-க்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானும் இடம் பெற்றுள்ளன. பிப்.19-ந்தேதி கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்த தொடரில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்கேன் செய்ய உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
வருகிற 29-ந் தேதி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இருந்து கம்மின்ஸ் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






