என் மலர்
விளையாட்டு
- முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 290 ரன்கள் எடுத்தது.
- நியூசிலாந்து அணியில் 3 பேர் டக் அவுட் ஆகினர்.
இலங்கை -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. ஏற்கனவே தொடரை இழந்த இலங்கை அணி இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பதும் நிசாங்கா - அவிஷ்கா பெர்னாண்டோ களமிறங்கினர். இதில் அவிஷ்கா பெர்னாண்டோ 17 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நிசங்காவுடன் குசல் மெண்டிஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். இருவரும் அரை சதம் அடித்தனர்.
குசல் மெண்டீஸ் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் அசலங்கா 0, நிசங்கா 66 ரன்னிலும் ஆடட்மிழந்தனர். ஜனித் லியனகே அரைசதம் (53) விளாசி அவுட் ஆனார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
இதனால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இலங்கையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மார்க் சாப்மேன் மட்டுமே 81 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 29.4 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இலங்கை அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
- 58 பந்தில் 4 சிக்ஸ், 10 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார்.
- கடைசி ஓவரில் மூன்று சிக்சர்கள் விளாசினார்.
ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ்- பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜோஷ் பிளிப், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோஷ் பிளிப் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆனால் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடினார். பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்க விட்டார். இதனால் சிட்னி சிக்சர்ஸ் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்ததுடன் ஸ்மித்தும் சதத்தை நெருங்கினார்.
19-வது ஓவரின் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 58 பந்தில் சதம் அடித்தார். பிக் பாஷ் லீக்கில் இது அவரிடன் 3-வது சதம் இதுவாகும். அத்துடன் கடைசி ஓவரில் 3 சிக்ஸ் விளாசினார். இதனால் சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. ஸ்மித் 64 பந்தில் 10 பவுண்டரிகள், 7 சிக்சருடன் 121 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ஆஸ்திரேலியா தொடரில் குறிப்பிடத்தகுந்த வகையில் ரன்கள் சேர்த்தார்.
- இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஓய்வு கேட்ட நிலையில் முதலில் அணி நிர்வாகம் சம்மதம் தெரிவித்ததாக தகவல்.
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். இதனால் ஒயிட்பால் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் பணியுடன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 1-3 எனத் தொடரை இழந்தது.
இந்த தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கிய கே.எல். ராகுல் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடித்து ரன்கள் சேர்த்தார்.
இந்தியா அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
டி20 போட்டிக்கான இந்திய அணியில் கே.எல். ராகுல் இல்லை எனக் கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கே.எல். ராகுலை தேர்வு செய்ய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஆனால் தனக்கு ஓய்வு வேண்டும் என அணி நிர்வாகத்திடம் கே.எல். ராகுல் வேண்டுகோள் வைத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கே.எல். ராகுலுக்கு அணி ஓய்வு அளிக்க முடிவு செய்திருந்தது.
இந்த நிலையில் அணி நிர்வாகம் தன்னுடைய முடிவை தற்போது மாற்றிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி விரைவில் நடைபெற உள்ளதால், அதற்கு முன்னோட்டமாக இங்கிலாந்து தொடர் இருக்கும் என்பதால் கட்டாயம் விளையாட வேண்டும் என அணி நிர்வாகம் கே.எல். ராகுலிடம் கறாராக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பிடிக்க கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
- தமீம் இக்பால் வங்கதேச அணியில் இருந்து ஓய்வு பெற்று டி20 லீக்கில் விளையாடி வருகிறார்.
- அலெக்ஸ் ஹேல்ஸ் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக தடைக்கு உள்ளானவர்.
வங்கதேசத்தில் வங்கதேசம் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டி ஒன்றில் ரங்க்பூர் ரைடர்ஸ்- பார்ச்சூன் பரிசால் அணிகள் மோதின.
இந்த போட்டியில் ரங்க்பூர் ரைடர்ன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற பின் வீரர்களை கைக்கொடுப்பார்கள். அப்போது தமீம் இக்பால் அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு கைக்கொடுக்கும்போது இன்னும் போதைப்பொருள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்டுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த ஹேல்ஸ் தமீம் இக்பாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்ற இருவரும் கைகலப்பில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது. இரண்டு அணி வீரர்களும் அவர்களை பிடித்து இழுத்துச் சென்றனர். இதனால் கைலகப்பு தவிர்க்கப்பட்டது.
வங்கதேச அணியில் இருந்து ஓய்வு பெற்ற தமீம் இக்பால் ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் பார்ச்சூன் பரிசால் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் தடை செய்யப்பட்டிருந்தார். இதை மனதில் வைத்துதான் தமீம் இக்பால் இவ்வாறு கேட்டுள்ளார்.
- ஐசிசி-யிடம் நாளைக்குள் பட்டியலை வழங்க வேண்டும்.
- ஐசிசியிடம் கால அவகாசம் கேட்டுள்ளது பிசிசிஐ.
பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. பொதுவாக தொடர் தொடங்குவதற்கு 35 நாட்களுக்கு (அதாவது 5 வாரம்) முன் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்கள் பட்டியலை ஐசிசி-யிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி நாளைக்குள் வீரர்கள் பட்டியலை அளிக்க வேண்டும். பின்னர் தேவை என்றால் அதில் மாற்றம் செய்து கொள்ளலாம்.
ஆனால் இந்திய அணி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வீரர்களை பட்டியலை வெளியிட தயாராக இல்லை. இதனால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பிசிசிஐ ஐசிசி-யிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் இந்தியா அணி அறிவிப்பு தாமதமாகலாம் எனத் தெரிகிறது.
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இந்தியா இங்கிலாந்து அணிக்கெதிராக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான அணியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இங்கிலாந்து அணியில் இடம் பெறும் பெரும்பாலான வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. இதனால் இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் யார் யாரை அணியில் சேர்ப்பது என கலந்து ஆலோசித்து இன்னும் நாளைக்குள் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் அணி அறிவிக்கப்படலாம்.
ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ஜடேஜா உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
- டி20 உலகக் கோப்பையை வென்றதும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
- இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா. முன்னணி ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்தது. இதில் இந்தியா 1-3 எனத் தொடரை இழந்தது. இதற்கு முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக இந்திய மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக தோற்றது.
இதனால் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா மீது விமர்சனம் எழுந்தது. இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா தொடரில் கடைசி கட்ட போட்டிகளில் விளையாடினார். பேட்டிங்கில் ஓரளவு விளையாடினார்.
இந்த சீசனில் இந்தியா ஏறக்குறைய முக்கியமான தொடர்களை முடித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒயிட்பால் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த பின்னர் சாம்பியன்ஸ் டிராபி மட்டும்தான் மீதமுள்ளது. இங்கிலாந்து தொடர் வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் 12-ந்தேதி வரை நடக்கிறது.
இதனால் அடுத்த டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பைக்கான அணியை எவ்வாறு தேர்வு செய்வது என்பதில் பிசிசிஐ கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
எதிர்காலத்தை கணக்கில் கொண்டு இந்திய ஒருநாள் போட்டிக்கான அணியில் ஜடேஜாவை வைக்க வேண்டுமா? என தேர்வுக்குழு தலைவர் அகர்கருடன் கவுதம் கம்பிர் பேசுவார் என செய்திகள் வெளியாகி வருகிறது.
இங்கிலாந்து தொடரில் இடம் பெற்றாலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெறுவாரா? என்பது தெரியவில்லை. அப்படி இடம் பெறவில்லை என்றால் அவருடைய ஒருநாள் கிரிக்கெட் முடிவுக்கு வருவதாக எடுத்துக் கொள்ளலாம்.
சாமபியன்ஸ் டிராபியில் இடம் பெற்றால் அதற்கு பின் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் ஓரங்கட்டப்படலாம் எனத் தெரிகிறது.
அல்லது சப்போர்ட்டிற்காக வைத்துக் கொண்டு இளம் வீரர்களை வளர்த்து அதன்பின் அணியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் தெரிகிறது. இதை அறிந்ததனால்தான் ஜடேஜா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் அணிந்திருந்து ஜெர்சி நம்பர் கொண்ட போட்டோவை பதிவு செய்துள்ளார்.

இதன்மூலம் இனிமேல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவேன். தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டு முடிவுக்கு வருகிறது என்பத சூசகமாக தெரிவிக்கிறார் என நம்பப்படுகிறது.
அவரது ரசிகர்கள் "அவர் ஓய்வு பெறுகிறாரா?" எனவும், "நீங்கள் இங்கிலாந்து தொடரில் தேவை" எனவும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். "இன்னும் 8 வருடங்கள் வருடங்கள் விளையாடுவேன் என்பதை கூறுகிறார்" என ஒரு ரசிகர் வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப்பின் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது.
ஜடேஜா 80 டெஸ்ட் போட்டிகளில் 323 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 24.14 ஆகும். 15 முறை 5 விகெ்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 3370 ரன்கள் அடித்துள்ளார். இதில் நான்கு சதம், 22 அரைசதம் அடங்கும்.
197 ஒருநாள் போட்டிகளில் 220 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 36.07 ஆகும். 13 அரைசதங்களுடன் 2756 ரன்கள் அடித்துள்ளார்.
- பாகிஸ்தானின் நதீம் 2024-ல் ஒலிம்பிக் போட்டிகளைத் தவிர ஒரே ஒரு நிகழ்வில் போட்டியிட்டதால் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
- 2024 தரவரிசையில் இரண்டு முறை உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸை விஞ்சி நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்தார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 2024-ம் ஆண்டில் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராக உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பத்திரிகையான டிராக் அண்ட் ஃபீல்ட் நியூஸ் தேர்வு செய்துள்ளது.
27 வயதான நீரஜ் சோப்ரா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்திற்காக பாகிஸ்தானின் அர்ஷத் நதீமிடம் தோற்கடிக்கப்பட்டார்.
கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட பத்திரிகை வெளியிட்ட 2024 தரவரிசையில் இரண்டு முறை உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸை விஞ்சி நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்தார். நதீம் 2024-ல் ஒலிம்பிக் போட்டிகளைத் தவிர ஒரே ஒரு நிகழ்வில் போட்டியிட்டதால் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
1948-ல் நிறுவப்பட்ட டிராக் அண்ட் ஃபீல்ட் நியூஸ், தன்னை விளையாட்டுத்துறையின் பைபிள் என்று கூறிக்கொள்ளும் இதழ், ஒவ்வொரு ஆண்டும் உலக மற்றும் அமெரிக்க தரவரிசைகளை வெளியிடுகிறது. இந்த இதழ் உலகளாவிய டிராக் அண்ட் ஃபீல்ட் வட்டாரங்களில் ஒரு அதிகாரமாக கருதப்படுகிறது.
நீரஜ் சோப்ரா 2023-ம் ஆண்டின் ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். அவர் 2024-ல் எந்த டயமண்ட் லீக் நிகழ்வையும் வெல்லவில்லை, தோஹா, லொசேன் மற்றும் பிரஸ்ஸல்ஸில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். கடந்த ஆண்டு ஃபின்லாந்தின் துர்குவில் நடந்த பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் அவர் பெற்ற ஒரே பெரிய வெற்றியாகும்.
- பிட்னஸ் சோதனையில் தமக்கு 2 புள்ளிகளை குறைத்துக் கொள்ளுமாறு யுவராஜ் கேட்டுக்கொண்டார்.
- யுவராஜ் இந்திய அணியில் முன்பு போல் நடத்தப்படவில்லை.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். தோனி தலைமையில் 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
அத்தொடரில் தமக்கு புற்றுநோய் இருந்ததையும் தாண்டி யுவராஜ் சிங் நாட்டுக்காக விளையாடியதை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் புற்றுநோயையும் வென்று மீண்டும் நாட்டுக்காக விளையாடினார். இருப்பினும் அவரால் முன்பு போல் அசத்த முடியவில்லை. அதன் காரணமாக அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர், 2019-ம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனிதான் யுவராஜ் சிங்கை கழற்றி விட்டு அவரின் கெரியரை முடித்ததாக சில முன்னாள் வீரர்களும் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கும் விமர்சித்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தான் யுவராஜ் சிங்கை கழற்றி விட்டதாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலியின் கேப்டன்ஷிப் ஸ்டைல் நீங்கள் அவருடைய தரத்துக்கு நிகராக இருக்க வேண்டும் என்பது போல் இருக்கும். பிட்னஸ், சாப்பாடு, கேட்பது, ஒப்புக் கொள்வது உட்பட அனைத்தும் அவரைப் போலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இங்கே இரண்டு வகையான கேப்டன்கள் உண்டு. ஆனால் தனிப்பட்ட நபர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது வித்தியாசமானது.
எடுத்துக்காட்டாக யுவியை எடுத்துக் கொள்ளுங்கள். புற்றுநோயை தோற்கடித்த அந்த மனிதர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் கம்பேக் முயற்சி செய்தார். அவர் மற்ற வீரர்களுடன் சேர்ந்து நமக்கு 2 உலகக்கோப்பைகளை வென்று கொடுத்தார். அந்த 2 வெற்றிகளில் அவருடைய பங்கு அளப்பரியது. அப்படிப்பட்ட ஒரு வீரருக்கு நீங்கள் கேப்டனாகும்போது அவருடைய நுரையீரல் திறன் குறைந்து விட்டது என்று அவரிடம் சொல்கிறீர்கள். உண்மையில் தடுமாறிய அவருக்கு நீங்கள்தான் ஆதரவாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் கேப்டனான நீங்கள் அதை செய்யாமல் உங்களுடைய அளவீடுகளை மட்டுமே பார்த்தீர்கள். உண்மையில் யுவராஜ் போன்ற சில வீரர்களுக்கு விதிமுறைகளில் இருந்து விலக்குகள் இருக்கும். அவர் அந்த வாய்ப்புக்கு தகுதியானவர். ஏனெனில் அவர் உலகக்கோப்பைகளை மட்டுமின்றி புற்றுநோயையும் வீழ்த்தியவர். அதனால் பிட்னஸ் சோதனையில் தமக்கு 2 புள்ளிகளை குறைத்துக் கொள்ளுமாறு யுவராஜ் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பிட்னஸ் சோதனையில் தேர்வாகி அணிக்குள் வந்த அவர் கொஞ்சம் சுமாராக செயல்பட்டார். அப்போதிலிருந்து யுவராஜ் இந்திய அணியில் முன்பு போல் நடத்தப்படவில்லை. அந்த சமயத்தில் கேப்டனாக இருந்த விராட் கோலி வலுவான ஆளுமை கொண்டவராக இருந்தார். எனவே அந்த சூழ்நிலை அவராலேயே ஏற்பட்டிருக்கும். விராட் தலைமையில் நான் விளையாடியதில்லை.
ஆனால் அவர் எப்போதும் தன்னுடைய வழியில் அனைவரும் உயர்தரமாக செயல்பட வேண்டும் என்று விரும்புவார். இருப்பினும் உங்கள் அனைத்து வீரர்களும் அப்படியே இருக்க மாட்டார்கள். எனவே அவர்களை தனிப்பட்ட முறையில் எப்படி நடத்துகிறீர்கள் என்பது முக்கியம். ஏனெனில் இவை அனைத்தும் வெற்றிகளை மட்டுமே பொறுத்தது கிடையாது.
என்று உத்தப்பா கூறினார்.
- முதல் கேம்-ஐ கடுமையாக போராடி 26-24 எனக் கைப்பற்றியது.
- 2-வது கேமில் முதல் பாதியில் 8-11 என பின்னதங்கிய நிலையில், பின்னர் தொடர்ச்சியாக புள்ளிகளை பெற்றது.
மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி மலோசியாவின் யெவ் சின் ஓங்- ஈ யி டெயோ-வை எதிர் கொண்டது.
இதில் முதல் கேமில் இரண்டு ஜோடிகளும் சிறப்பாக விளையாடியது. இறுதியில் இந்திய ஜோடி 26-24 என கடும் போராட்டத்திற்குப் பின் கைப்பற்றியது. 2-வது கேம்-ஐ 21-15 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறியது.
முதல் செட்டில் இந்திய ஜோடி 11-9 என முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் 18-16 என முன்னிலை கண்டிருந்தது. ஆனால் மலேசிய ஜோடி தொடர்ந்து மூன்று புள்ளிகள் பெற்று 19-19 என சமநிலைப் பெற்றது. அத்துடன் 20-19 என முன்னிலையும் பெற்றது.
அதன்பின் இந்திய ஜோடி வெற்றி பெறுவதற்கு முன்னதாக தொடர்ந்து நான்கு புள்ளிகளை பெற்று முதல் கேம்-ஐ கைப்பற்றியது.
2-வது கேமில் மலேசிய ஜோடி 11-8 என முன்னிலைப் பெற்றிருந்தது. அனத்பின் 17 புள்ளிகளில் இந்திய ஜோடி 13 புள்ளிகளை பெற்று 21-15 என கேமை கைப்பற்றி வெற்றி பெற்றது.
அரையிறுதியில் தென்கொரியாவின் வொன் ஹோ கிம்- சியங் ஜெயி சியோ ஜோடியை எதிர்கொள்கிறது.
- இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2-வது டி20 போட்டி வருகிற 25-ந் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.
- இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதலில் டி20 தொடரும் அதற்கடுத்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது.
அதன்படி முதல் டி20 போட்டி ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. 2-வது டி20 போட்டி சென்னையில் வருகிற 25-ந் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 25-ந் தேதி நடைபெறும் போட்டி நடைபெற உள்ள நிலையில் வருகிற 12-ந் தேதி டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
டி20 கிரிக்கெட் போட்டிக்கு ரூ.1500 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இந்திய தரப்பில் பிரதிகா ராவல், தேஜல் ஹசாப்னிஸ் அரை சதம் விளாசினர்.
- அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது.
அயர்லாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக கேபி லூயிஸ் 92, லியா பால் 59 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை விழ்த்தினார்.
இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா- பிரதிகா களமிறங்கினர். தொடக்க இருந்தே மந்தனா அதிரடியாக விளையாடினார். அவர் 29 பந்தில் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 20, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 என வெளியேறினர்.
இதனை தொடர்ந்து பிரதிகா மற்றும் தேஜல் ஹசாப்னிஸ் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர். பிரதிகா சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய அணி 34.3 ஓவரில் 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
- நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா மோதவுள்ளனர்.
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷியாவின் லியுட்மிலா சாம்சோனோவா உடன் மோதினார்.
இந்த போட்டியில் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் லியுட்மிலா சாம்சோனோவாவும், 2-வது செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் மேடிசன் கீஸும் கைப்பற்றினர். தொடர்ந்து நடைபெற்ற 3-வது செட்டில் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் மேடிசன் கீஸ் முன்னிலையில் இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக லியுட்மிலா சாம்சோனோவா காயம் அடைந்தார். இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் மேடிசன் கீஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா- கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவா ஆகியோர் மோதினர். இதில் 7-4, 6-3 என்ற செட் கணக்கில் பெகுலா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா மோதவுள்ளனர்.






