என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சிட்னியில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், ரோகித் ஒரு பேட்டியை அளித்தார்.
    • ரோகித் சர்மாவை அவர்கள் வற்புறுத்தி தடுக்கவில்லை என்றால் அப்போதே அவர் ஓய்வை அறிவித்திருப்பார்

    இந்தியா ஆஸ்திரேலிய டெஸ்டின் ஐந்தாவது போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகியது அவரது ஓய்வுக்கான முன்னறிவிப்பு என பலர் கருதினர். முதல் மூன்று போட்டிகளில் ரோகித் பார்மில் இல்லாததும் கடைசி போட்டியில் இருந்து விலகியதும் பேசுபொருளானது.

    இருப்பினும் சிட்னியில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், ரோகித் ஒரு பேட்டியை அளித்தார். அதில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என்று தெளிவுபடுத்தினார்.

    இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, இந்திய அணி டிரஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது என்பது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட அறிக்கை கசிந்துள்ளது.

    அதில், ரோகித் சர்மா டெஸ்டுக்குப் பிறகு விலக முடிவு செய்தார் என்றும் ஆனால் அவருக்கு நெருக்கமான நலம் விரும்பிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

     

    ரோகித் சர்மாவை அவர்கள் வற்புறுத்தி தடுக்கவில்லை என்றால் அப்போதே அவர் ஓய்வை அறிவித்திருப்பார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் ரோகித் ஓய்வு அறிவுக்கும் முடிவில் இருந்து யு டர்ன் அடித்தது இந்திய அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு பிடிக்கவில்லை என்றும், ரோகித் ஓய்வு பெறுவதையே கம்பீர் விரும்பினார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இது குறித்து கிரிக்கெட் வட்டாரங்கள் தற்போது கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளன. 

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா பங்கேற்கிறார்.

    சிட்னி:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று முதல் தொடங்க உள்ளது.

    இதற்கிடையே, பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் உடன் மோதுகிறார்.

    இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் நாட்டின் அரினா சபலென்கா ஹாட்ரிக் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார். இவர் கடந்த 2024 மற்றும் 2023-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்று வாகை சூடியிருந்தார்.

    ஏற்கனவே, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் 1997, 1998 மற்றும் 1999-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் இன்று விளையாட உள்ளார்.

    சிட்னி:

    டென்னிஸ் உலகில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.

    அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்தியரான சுமித் நாகல், செக் குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோதுகிறார்.

    • முதலில் பேட் செய்த கர்நாடகா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது.
    • தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்தார்.

    வதோதரா:

    32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடக அணியும், குருணால் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணியும் மோதின. டாஸ் வென்ற பரோடா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்து 102 ரன்னில் அவுட்டானார். அனீஷ் அரை சதம் கடந்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பரோடா அணி சார்பில் ராஜ் லிம்பானி, அதித் ஷேத் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பரோடா அணி களமிறங்கியது. ஷாஷ்வத் ராவத் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அதித் ஷேத் அரை சதம் கடந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில் பரோடா அணி 49.5 ஓவரில் 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகம் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது.

    • ஜோகோவிச்சால் கடந்த ஆண்டு ஒரு கிராண்ட்சிலாம் கூட கைப்பற்ற முடியவில்லை.
    • 2023-ல் அவர் ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 3 பட்டங்களை வென்றார்.

    மெல்போர்ன்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஆண்டின் முதல் கிராண்ட்சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்னில் நாளை (12-ந் தேதி) தொடங்குகிறது. வருகிற 26-ந் தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

    24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று முதல் இடத்தில் இருக்கும் ஜோகோவிச்சால் (செர்பியா) கடந்த ஆண்டு ஒரு கிராண்ட்சிலாம் கூட கைப்பற்ற முடியவில்லை. அதே நேரத்தில் 2023-ல் அவர் ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 3 பட்டங்களை வென்றார்.

    ஆஸ்திரேலிய ஓபனை 10 தடவை கைப்பற்றிய சாதனையாளரான 37 வயதான ஜோகோவிச் தனது 25-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அவருக்கு முதல் நிலை வீரரான சின்னர் (இத்தாலி) , 3-ம் நிலையில் இருக்கும் கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஆகியோர் கடும் சவாலாக இருப்பார்கள். கடந்த ஆண்டு சின்னர் 2 கிராண்ட்சிலாமையும், (ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன் ) அல்காரஸ் 2 கிராண்ட்சிலாமையும் (பிரஞ்சு ஓபன், விம்பிள்டன்) கைப்பற்றினார்கள்.

    2-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), டெய்லர் பிளிட்ஸ் (அமெரிக்கா), டேனில் மெட்வதேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே) போன்ற முன்னணி வீரர்களும் பங்கேற்கிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த ஆண்டு முதல் வரிசையில் உள்ள ஷபலென்கா (பெலாரஸ்) 2 கிராண்ட்சிலாம் பட்டத்தையும் (ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன்) , 2-ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) பிரஞ்சு ஓபனையும், பார் பராகிரஜ்கோவா (செக் குடியரசு) விம்பிள்டனையும் கைப்பற்றினார்கள்.

    3-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப் (அமெரிக்கா), ஜேஸ்மின் பலோனி (இத்தாலி), ஜெங் (சீனா), ரைபகினா (கஜகஸ்தான்) ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

    • ஸ்டேடியம் புதுப்பிக்கும் பணிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அதிகாரிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
    • எங்கள் நாட்டு ஊடகங்கள் உண்மையை சரிபார்க்காமல் யூகத்தின் அடிப்படையில் இதுபோன்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.

    லாகூர்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

    பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி ஆட்டங்கள் நடைபெற லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி ஆகிய மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மைதானங்களில் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை கடந்த ஆகஸ்டு மாதம் பாகிஸ்தான் தொடங்கியது. புதுப்பிப்பு பணிகளை முடித்து பிப்ரவரி 12-ந்தேதிக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) ஒப்படைக்க வேண்டும்.

    ஆனால் லாகூர் மற்றும் கராச்சியில் இன்னும் பெரிய அளவில் கட்டுமான பணிகள் எஞ்சியுள்ளன. இதனால் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடிவடையாது என்றும் எனவே இந்த போட்டி பாகிஸ்தானில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முழுமையாக மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில் இதனை மறுத்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வேறு இடத்திற்கு மாற்றப்படாது என திட்டவட்டமாக கூறியுள்ளது.

    இது குறித்து விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், "எங்கள் நாட்டு ஊடகங்கள் உண்மையை சரிபார்க்காமல் யூகத்தின் அடிப்படையில் இதுபோன்ற செய்தியை வெளியிட்டு இருப்பதால் நாங்கள் இந்த விளக்கத்தை அளிக்க வேண்டியதாகிவிட்டது.

    இது மாதிரியான செய்திகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐ.சி.சி., அரசு, வணிக கூட்டாளிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் டிக்கெட் விற்பனை மற்றும் போட்டியை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை பாதிக்கும்.

    உள்ளூர் நிருபர் ஒருவர், அனுமதியின்றி, கராச்சி மைதானத்தின் கட்டுமானப் பணிகளைப் படம்பிடித்துள்ளார். ஸ்டேடியம் புதுப்பிக்கும் பணிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அதிகாரிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு விடும்.

    சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தும். போட்டி வேறு நாட்டுக்கு மாற்றப்படும் என்பது உள்ளிட்ட எந்தவொரு யூகத்தையும் நம்ப வேண்டியதில்லை.

    என்று தெரிவித்துள்ளது.

    • சாத்விக்- சிராக் செட்டி ஜோடி வொன் ஹோ கிம்- சியங் ஜெயி சியோ ஜோடியை எதிர் கொண்டது.
    • இந்திய ஜோடியை எளிதாக தென்கொரிய ஜோடி வீழ்த்தியது.

    மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி தென்கொரியாவின் வொன் ஹோ கிம்- சியங் ஜெயி சியோ ஜோடியை எதிர் கொண்டது.

    இதில் இந்திய ஜோடியை எளிதாக தென்கொரிய ஜோடி வீழ்த்தியது. அதன்படி 21-10, 21-15 என வெற்றி பெற்று தென்கொரிய ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    • முகமது சமி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
    • துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மீண்டும் முகமது சமி இடம் பிடித்துள்ளார். 

    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சாம்சன், அபிஷேக் சர்மா, திலக், நிதிஷ் ரெட்டி, முகமது சமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, ஜூரல், ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்.

    • சஜித் கான் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கஷிப் அலி பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன்மூலம் 18 ஆண்டுகளுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு முன் கடந்த 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியிம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஷான் மசூத் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர சுழறபந்துவீச்சாளர் சஜித் கான் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் தொடர்ச்சியாக விளையாடி வரும் நசீம் ஷா, அமர் ஜமால், முகமது அப்பாஸ், மிர் ஹம்ஸா ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கஷிப் அலி பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் டெஸ்ட் அணி: ஷான் மசூத் (கேப்டன்), சௌத் ஷகீல், அப்ரார் அகமது, பாபர் ஆசம், இமாம்-உல்-ஹக், கம்ரான் குலாம், காஷிப் அலி, குர்ரம் ஷஷாத், முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நோமன் அலி, ரோஹைல் நசீர், சஜித் கான் மற்றும் சல்மான் அலி ஆகா.

    வெஸ்ட் இண்டீஸ் அணி: கிரேக் பிராத்வைட் (கேப்டன்), ஜோசுவா டா சில்வா (துணை கேப்டன்), அலிக் அதானஸ், கேசி கார்டி, ஜஸ்டின் கிரீவ்ஸ், காவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அமீர் ஜங்கு, மைக்கேல் லூயிஸ், குடாகேஷ் மோட்டி, ஆண்டர்சன் பிலிப், கீமார் ரோச், கெவின் சின்க்ளேர், ஜெய்டன் சீல்ஸ், ஜோமெல் வாரிக்கன்

    • மகாராஷ்டிரா அணி பேட்டிங் செய்த போது கேப்டன் ருதுராஜ் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.
    • அர்ஷ்தீப் சிங் 3 சிக்சர் 3 பவுண்டரி விளாசி 49 ரன்னில் ருதுராஜ் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    விஜய் ஹசாரே தொடர் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் மகாராஷ்டிரா- பஞ்சாப் அணிகள் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குல்கர்னி 107 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 44.4 ஓவரில் 205 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் மகாராஷ்டிரா அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    முன்னதாக மகாராஷ்டிரா அணி பேட்டிங் செய்த போது கேப்டன் ருதுராஜ் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். இதனையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

    அப்போது பவுலராக இருந்து சிறப்பாக விளையாடிய அர்ஷ்தீப் சிங் 3 சிக்சர் 3 பவுண்டரி விளாசி 49 ரன்னில் ருதுராஜ் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உடனே ருதுராஜ் பந்தை ஆக்ரோஷமாக தரையில் அடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெலிக்ஸ் அகர் அலியாசிம்- செபாஸ்டியன் கோர்டா மோதினர்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுலா- மேடிசன் கீஸ் உடன் மோதினார்.

    அடிலெய்டு:

    அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெலிக்ஸ் அகர் அலியாசிம்- செபாஸ்டியன் கோர்டா மோதினர்.

    இதில் அலியாசிம் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டவரான மேடிசன் கீஸ் உடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. இறுதியில் 3-வது செட்டை கீஸ் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    கீஸ் இந்த ஆட்டத்தில் 6-3, 4-6 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • இந்தியா- இங்கிலாந்து தொடர் ஜனவரி 22-ந் தேதி தொடங்கி பிபரவரி 12-ந் தேதி வரை நடக்கிறது.

    இங்கிலாந்து அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் ஜனவரி 22-ந் தேதி தொடங்கி பிபரவரி 12-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.

    அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் காயம் காரணமாக விலகி உள்ளார். காயம் காரணமாக அவர் இந்த தொடரில் பங்கேற்பது சந்தேகம் என தெரிய வந்துள்ளது.

    ×