என் மலர்
விளையாட்டு
- சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்குகிறது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லிங்டன்:
8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் சீனியர் வீரர்களான கேன் வில்லியம்சன், டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, லாக்கி பெர்குசன், டாம் லாதம், டேரில் மிட்செல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணி விவரம் வருமாறு:
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மன், டேவான் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, பென் சீயர்ஸ், நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா வெற்றி பெற்றார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான சபலென்கா, அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் பவுலா படோசா, சீனாவின் வாங் ஜின்யு உடன் மோதினார். இதில் படோசா 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் 23-ம் தேதி தொடங்குகிறது.
- இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
சண்டிகர்:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் 23-ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் யார் என்ற விவரத்தை அணி நிர்வாகம் இன்று அறிவித்தது.
இந்நிலையில், 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் ஷ்ரேயஸ் அய்யரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.
ஐ.பி.எல். வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட 2-வது வீரர் என்ற பெருமையை பெற்ற ஷ்ரேயாஸ் அய்யர், பஞ்சாப் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான், விதர்பா அணிகள் மோதின.
- இதில் விதர்பா அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
வதோதரா:
32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இன்றும் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணியும், மஹிபால் லாம்ரோர் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் குவித்தது. கார்த்திக் சர்மா அரை சதமடித்து 62 ரன்னும், ஷப்னம் கர்வால் அரை சதம் கடந்து 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
விதர்பா அணி சார்பில் யாஷ் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் துருவ் ஷோரே நிலைத்து நின்று ஆடி சதமடித்தார்.
கேப்டன் கருண் நாயர் அதிரடியாக ஆடி 122 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், விதர்பா அணி 43.3 ஓவரில் 292 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விதர்பா அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது துருவ் ஷோரேவுக்கு வழங்கப்பட்டது.
மற்றொரு அரையிறுதியில் குஜராத் அணியை வீழ்த்தி அரியானா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.
சிட்னி:
டென்னிஸ் உலகில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது.
அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல், செக் குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோதினார்.
இதில் தாமஸ் மச்சாக் 6-3, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த தொடருக்கான குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
பொதுவாக தொடர் தொடங்குவதற்கு 35 நாட்களுக்கு (அதாவது 5 வாரம்) முன் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்கள் பட்டியலை ஐசிசி-யிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி இருக்கும் வீரர்கள் பட்டியலை அளிக்க வேண்டும். பின்னர் தேவை என்றால் அதில் மாற்றம் செய்து கொள்ளலாம்.
ஆனால் இந்திய அணி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வீரர்களை பட்டியலை வெளியிட தயாராக இல்லை. இதனால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பிசிசிஐ ஐசிசி-யிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் இந்தியா அணி அறிவிப்பு தாமதமாகலாம் எனத் தெரிகிறது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை ஆப்கானிஸ்தான் அணி அறிவித்தது.
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, இக்ராம் அலிகில், குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், ஏ.எம்.கசன்பர், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி, பரித் மாலிக், நவீத் சத்ரான் ஆகிய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
தர்வீஷ் ரசூலி, நங்யால் கரோட்டி, பிலால் சமி ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எட்டு அணிகள் மோதுகின்றன.
- சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி துவங்குகிறது. இந்தத் தொடர் மார்ச் மாதம் 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி வருகிற 19 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தத் தொடருக்கான எட்டு அணிகளும் இரண்டாக பிரிக்கப்படுகின்றன. இதில் க்ரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.
- மிகவும் ஊக்கமளிக்கக்கூடிய கேப்டனாக தோனியை பார்க்கிறேன்.
- தோனி போல பதிலடி கொடுக்கக் கூடியவர்கள் சிலர் மட்டுமே இருக்கிறார்கள்.
இந்திய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழந்தவர் யுவராஜ் சிங். இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கும் யுவராஜ் சிங் முக்கிய பங்காற்றினார்.
யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தொடர்ந்து எம்.எஸ். டோனியை விமர்சித்து வருகிறார். தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தவர் என வெளிப்படையாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் திடீரென எம்.எஸ். டோனியை புகழ்ந்து யோக்ராஜ் சிங் பேசியுள்ளார்.
டோனி பற்றி பேசிய யோக்ராஜ் சிங், "மிகவும் ஊக்கமளிக்கக்கூடிய கேப்டனாக டோனியை பார்க்கிறேன். அவரிடம் பிடித்ததே, எப்படி பந்து வீசினால் விக்கெட் விழும் என்பதை அறிந்து பவுலரிடம் அப்படியே சொல்லி விக்கெட் எடுத்ததுதான்.
டோனி பயமற்றவராக இருக்கிறார். ஒருமுறை ஆஸ்திரேலியாவில் மிட்சேல் ஜான்சன் அவரை பணத்தால் அதற்கு அடுத்த பந்திலேயே டோனி சிக்சர் அடித்தார். டோனி போல பதிலடி கொடுக்கக் கூடியவர்கள் சிலர் மட்டுமே இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
- முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 370 ரன்களை குவித்தது.
- இந்திய அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து, இந்தியா மற்றும் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வன்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 370 ரன்களை குவித்தது.
இந்தியா சார்பில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 73 ரன்களையும், மற்றொரு துவக்க வீராங்கனையான பிரதிகா ராவல் 67 ரன்களை அடித்தார். அடுத்து களமிறங்கிய ஹல்ரீன் தியோல் 89 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 102 ரன்களை விளாசினார்.
இதையடுத்து 371 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய அயர்லாந்து மகளிர் அணிக்கு தொடக்க வீராங்கனையான கேபி லூயிஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் கேபி லீவிஸ் 12 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். அடுத்து வந்த கிறிஸ்டினியா நிதானமாக ஆடி 80 ரன்களை சேர்த்தார்.
மற்ற வீராங்கனைகள் நிதானமாக ஆடிய போதிலும், 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்களை மட்டுமே அடித்தது. இதன் மூலம் 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பறியுள்ளது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக கூல்டர் ரெய்லி 80 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- என் துப்பாக்கியை எடுத்து கொண்டு கபில்தேவ் வீட்டிற்கு சென்றேன்.
- இனிமேல் கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று முடிவு எடுத்தேன்.
இந்திய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழந்தவர் யுவராஜ் சிங். இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கும் யுவராஜ் சிங் முக்கிய பங்காற்றினார்.
யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் தான். அவர் ஒரு டெஸ்ட் போட்டி, 6 ஒரு நாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். சொல்லப்போனால் தந்தையின் வழியை பின்பற்றி தான் யுவராஜ் சிங் கிரிக்கெட்டிற்குள் நுழைந்தார்.
இந்நிலையில் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று தந்த கேப்டன் கபில்தேவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாக யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய யோக்ராஜ் சிங், "கபில்தேவ் இந்திய அணியின் கேப்டனாக இருந்த அதே சமயத்தில் நார்த் ஜோன், ஹரியானா அணியின் கேப்டனாகவும் அவர் இருந்தார். அப்போது எந்த காரணமும் சொல்லாமல் அணியில் இருந்து என்னை அவர் நீக்கினார்.
இது தொடர்பாக பல கபில்தேவிடம் பல கேள்விகளை கேட்க என் மனைவி விரும்பினார். அப்போது கபில்தேவுக்கு நான் பாடம் கற்பிப்பேன் என்று அவளிடம் கூறினேன். உடனே என் துப்பாக்கியை எடுத்து கொண்டு கபில்தேவ் வீட்டிற்கு சென்றேன். அப்போது கபில்தேவ் அவரது அம்மாவுடன் வெளியே வந்தார்.
அப்போது கபில்தேவை திட்டி தீர்த்தேன். உன்னால் ஒரு நண்பரை இழந்துவிட்டேன். இன்று நீங்கள் செய்ததற்கான பலனை ஒருநாள் நிச்சயம் அனுபவிப்பீர்கள் என்று கூறினேன்.
உன் தலையில் சுடுவதற்காக துப்பாக்கியை எடுத்து வந்தேன். ஆனால் உனக்கு பக்திமிக்க அம்மா இருக்கிறார். இதனால் உன்னை சுடவில்லை என்று கூறினேன்
அதன்பிறகு தான் இனிமேல் கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று முடிவு எடுத்தேன். என் மகன் யுவராஜ் சிங்கை கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று விரும்பினேன்.
2011ல் இந்திய அணி உலகக் கோப்பை வென்ற போது கபில்தேவுக்கு ஒரு நாளிதழ் செய்தியை அனுப்பினேன். அதில், உலகக்கோப்பை கிரிக்கெட்டில் உங்களை விட எனது மகன் சாதித்துவிட்டான் என்று கூறியிருந்தேன்" என்று தெரிவித்தார்.
- ஐ.பி.எல். தொடரில் பத்து அணிகள் விளையாடுகின்றன.
- 2025 ஐ.பி.எல். தொடர் அறிவிக்கப்பட்டது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி துவங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஐ.பி.எல். 2025 தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் 557 வீரர்கள் பங்கேற்றனர். இதில் மொத்ததம் 62 வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 182 வீரர்கள் ரூ. 639 கோடியே 15 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இந்த நிலையில், ஐ.பி.எல். 2025 தொடர் மார்ச் 23 ஆம் தேதி துவங்கும் என்று பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.
மும்பையில் இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் சுக்லா இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஐ.பி.எல். 2025 தொடரின் இறுதிப்போட்டி மே மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
- இளம் வயதில் உலக செஸ் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.
- குகேஷ்க்கு 2024 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த டி.குகேஷ் சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.
இதனையடுத்து குகேஷ்க்கு 2024 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், செஸ் ஜாம்பவான்களான விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ், பிரக்ஞானந்தா விதித் குஜராத்தி மற்றும் சாகர் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் ஜாலியாக அந்த வீடியோவில் நடனமாடுகின்றனர்.






