என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்- ஜோகோவிச் 25-வது கிராண்ட்சிலாமை வெல்வாரா?
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்- ஜோகோவிச் 25-வது கிராண்ட்சிலாமை வெல்வாரா?

    • ஜோகோவிச்சால் கடந்த ஆண்டு ஒரு கிராண்ட்சிலாம் கூட கைப்பற்ற முடியவில்லை.
    • 2023-ல் அவர் ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 3 பட்டங்களை வென்றார்.

    மெல்போர்ன்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஆண்டின் முதல் கிராண்ட்சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்னில் நாளை (12-ந் தேதி) தொடங்குகிறது. வருகிற 26-ந் தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

    24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று முதல் இடத்தில் இருக்கும் ஜோகோவிச்சால் (செர்பியா) கடந்த ஆண்டு ஒரு கிராண்ட்சிலாம் கூட கைப்பற்ற முடியவில்லை. அதே நேரத்தில் 2023-ல் அவர் ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 3 பட்டங்களை வென்றார்.

    ஆஸ்திரேலிய ஓபனை 10 தடவை கைப்பற்றிய சாதனையாளரான 37 வயதான ஜோகோவிச் தனது 25-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அவருக்கு முதல் நிலை வீரரான சின்னர் (இத்தாலி) , 3-ம் நிலையில் இருக்கும் கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஆகியோர் கடும் சவாலாக இருப்பார்கள். கடந்த ஆண்டு சின்னர் 2 கிராண்ட்சிலாமையும், (ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன் ) அல்காரஸ் 2 கிராண்ட்சிலாமையும் (பிரஞ்சு ஓபன், விம்பிள்டன்) கைப்பற்றினார்கள்.

    2-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), டெய்லர் பிளிட்ஸ் (அமெரிக்கா), டேனில் மெட்வதேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே) போன்ற முன்னணி வீரர்களும் பங்கேற்கிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த ஆண்டு முதல் வரிசையில் உள்ள ஷபலென்கா (பெலாரஸ்) 2 கிராண்ட்சிலாம் பட்டத்தையும் (ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன்) , 2-ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) பிரஞ்சு ஓபனையும், பார் பராகிரஜ்கோவா (செக் குடியரசு) விம்பிள்டனையும் கைப்பற்றினார்கள்.

    3-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப் (அமெரிக்கா), ஜேஸ்மின் பலோனி (இத்தாலி), ஜெங் (சீனா), ரைபகினா (கஜகஸ்தான்) ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

    Next Story
    ×