என் மலர்
நீங்கள் தேடியது "கௌதம் கம்பீர்"
- கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் பெயர்தான் பரிசீலனையில் முதலிடத்தில் இருக்கும் என நம்புகிறேன்.
- என்னுடைய தேர்வு பிரித்வி ஷாதான்.
கடந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2021 தொடரின்போது விராட் கோலி கேப்டனாக இருந்தார்.அந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி படுமோசமாக சொதப்பி அரையிறுதிக்கு கூட முன்னேறாமல், லீக் சுற்றுடன் நாடு திரும்பியது. இதனால், விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது. கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துவந்த நிலையில், அவரே கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இதனையெடுத்து மூன்று விதமான அணிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் கோலி விலகினார்.
இதனைத் தொடர்ந்து ரோகித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஐபிஎலில் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு கோப்பைகளை பெற்றுக்கொடுத்து அசத்தியதுபோல், இந்திய அணிக்கும் பல கோப்பைகளை பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ரோஹித் ஷர்மா கேப்டன் பதவியை ஏற்றப் பிறகு இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் பைனலுக்கு கூட முன்னேறவில்லை. அடுத்து டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் அரையிறுதியுடன் இந்திய அணி திரும்பியது. இந்த தொடர் தோல்விகள் காரணமாக ரோகித் மீதும் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், ஒருநாள் அணிக்கு மட்டும் ரோகித் ஷர்மாவை கேப்டனாக நியமித்துவிட்டு டெஸ்ட், டி20 அணிகளுக்கு புது கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டி20 அணிக்கு பிசிசிஐ யாரை கேப்டனாக நியமிக்கும் என்ற கேள்விக்கு தற்போது கௌதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் பெயர்தான் பரிசீலனையில் முதலிடத்தில் இருக்கும் என நம்புகிறேன். இருப்பினும், ஒருசில தொடர்களில், ஐபிஎலில் அவர் சிறப்பாக கேப்டன்சி செய்ததை வைத்து ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க கூடாது. ஐபிஎலில் கோப்பை வென்று கொடுத்தார் என்று கூறிதான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை கொடுத்தோம். இப்போது புது கேப்டனை தேடுகிறோம்.
என்னுடைய தேர்வு பிரித்வி ஷாதான். இவரைத்தான் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும். இவர் சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், விஜய் ஹசாரே தொடர், ரஞ்சிக் கோப்பை தொடர்களில் ஆக்ரோஷமாக கேப்டன்ஸி செய்ததை நான் பார்த்திருக்கிறேன். வெற்றிகரமான கேப்டனாகவும் இவர் இருக்கிறார். இவர் டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட பொருத்தமான வீரர்.
இவ்வாறு கம்பீர் கூறினார்.
2019-ம் ஆண்டில் பிரித்வி ஷா 6 மாதங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- சிட்னியில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், ரோகித் ஒரு பேட்டியை அளித்தார்.
- ரோகித் சர்மாவை அவர்கள் வற்புறுத்தி தடுக்கவில்லை என்றால் அப்போதே அவர் ஓய்வை அறிவித்திருப்பார்
இந்தியா ஆஸ்திரேலிய டெஸ்டின் ஐந்தாவது போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகியது அவரது ஓய்வுக்கான முன்னறிவிப்பு என பலர் கருதினர். முதல் மூன்று போட்டிகளில் ரோகித் பார்மில் இல்லாததும் கடைசி போட்டியில் இருந்து விலகியதும் பேசுபொருளானது.
இருப்பினும் சிட்னியில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், ரோகித் ஒரு பேட்டியை அளித்தார். அதில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என்று தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, இந்திய அணி டிரஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது என்பது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட அறிக்கை கசிந்துள்ளது.
அதில், ரோகித் சர்மா டெஸ்டுக்குப் பிறகு விலக முடிவு செய்தார் என்றும் ஆனால் அவருக்கு நெருக்கமான நலம் விரும்பிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

ரோகித் சர்மாவை அவர்கள் வற்புறுத்தி தடுக்கவில்லை என்றால் அப்போதே அவர் ஓய்வை அறிவித்திருப்பார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ரோகித் ஓய்வு அறிவுக்கும் முடிவில் இருந்து யு டர்ன் அடித்தது இந்திய அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு பிடிக்கவில்லை என்றும், ரோகித் ஓய்வு பெறுவதையே கம்பீர் விரும்பினார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இது குறித்து கிரிக்கெட் வட்டாரங்கள் தற்போது கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளன.






