என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து டி20 தொடரில் 2 போட்டி முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இதனையடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை நடக்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

    நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷிவம் துபேக்கு வாய்ப்பு வழங்கப்படும். காயத்தால் விலகிய நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அவர் இடம் பெறலாம்.

    இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றங்கள் ஏதுமின்றி அதே அணியுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

    3-வது டி20 போட்டிக்கான இங்கிலாந்து ஆடும் லெவன்:-

    பில்சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி ப்ரூக், லிவிங்ஸ்டன், ஜேமி சுமித், ஒவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க்வுட், பிரைடன் கார்ஸ். 

    • விராட் கோலிக்கு கேப்டன் பதவியை வழங்க டெல்லி மாநில கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்து அவரிடம் கூறியது.
    • விராட் கோலி அந்த பதவி வேண்டாம் என்றும் சாதாரண ஒரு வீரராக விளையாட விருப்பப்படுகிறேன் என கூறியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கடந்த சில தொடர்களாகவே மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வருவதால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனம் எழுந்தது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரே மாதிரியாக தொடர்ச்சியாக ஆட்டம் இழந்தது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது.

    இதன் காரணமாக தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாட விராட் கோலி முடிவு செய்துள்ளார். மேலும் தனது பேட்டிங்கில் சிறிய சிறிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கருடன் இணைந்து அவர் பயிற்சி எடுத்து வருகிறார்.

    இந்நிலையில் மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து ரஞ்சி போட்டியில் விளையாட இருக்கும் முன்னாள் இந்திய கேப்டனான விராட் கோலியை வேறொருவரின் தலைமைக்கு கீழ் விளையாட வைக்காமல் அவருக்கு கேப்டன் பதவியை வழங்க டெல்லி மாநில கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்து அவரிடம் கூறியது.

    ஆனால் அதனை மறுத்த விராட் கோலி அந்த பதவி வேண்டாம் என்றும் சாதாரண ஒரு வீரராக விளையாட விருப்பப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது உள்ள சூழலில் டெல்லி அணியில் எந்தெந்த வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று தனக்கு தெரியாது என்றும் அதன் காரணமாக தானும் அணியில் ஒரு அங்கமாக இணைந்து சாதாரண வீரராக விளையாட விரும்புவதாகவும் விராட் கோலி கூறியுள்ளாராம்.

    • 2025-ம் ஆண்டுக்கான பிக்பாஷ் கோப்பையை ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி வென்றது.
    • இறுதி போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி வீரர் ஓவன் 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

    பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வார்னர் தலைமையிலான சிட்னி தண்டரும் நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியும் மோதின.

    இதில் டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் சங்கா 67 ரன்கள் குவித்தார். ஹோபார்ட் ஹரிகேன்ஸ் தரப்பில் கேப்டன் எல்லீஸ், ரிலே மெரிடித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய 23 வயதான இளம் வீரர் மிட்செல் ஓவன் அதிரடியாக விளையாடினார். இதனால் ஓவன் 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

    இதன்மூலம் பிக்பாஷ் தொடரில் அதிகவேக சதம் அடித்த கிரெய்க் சிம்மன்ஸ் (39) சாதனையை ஓவன்(39) சமன் செய்தார். 2014-ம் ஆண்டு நிகழ்த்தி இந்த சாதனையை ஓவன் 11 ஆண்டுகளுக்கு பிறகு சமன் செய்துள்ளார்.

    • முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.
    • இதனையடுத்து களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு வார்னர் தலைமையிலான சிட்னி தண்டரும் நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் தகுதி பெற்றது.

    இந்நிலையில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் சங்கா 67 ரன்கள் குவித்தார். ஹோபார்ட் ஹரிகேன்ஸ் தரப்பில் கேப்டன் எல்லீஸ், ரிலே மெரிடித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் ஓவன்- காலேப் ஜூவல் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய ஓவன் 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    • இவர் கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
    • ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் விருதை வென்ற 6-வது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த ஒருநாள், டெஸ்ட், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர் , வீரங்கனைகள் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    அந்த வகையில் 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு 3 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்தது. அதன்படி, இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக், ஜோரூட் ஆகியோர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    இறுதியில் இந்த விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா தட்டிச் சென்றார். இவர் கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இதன் மூலம் ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் விருதை வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ராவும் இணைந்துள்ளார். இதற்கு முன்பு ராகுல் டிராவிட் (2004), கவுதம் கம்பீர் (2009), சேவாக் (2010), அஸ்வின் (2016), விராட் கோலி (2018) ஆகியோர் இந்த விருதை வென்றுள்ளனர்.

    • ரஞ்சி டிராபியில் மும்பைக்காக களமிறங்கிய ரோகித், மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • சமீப காலங்களில் நீங்கள் நன்றாக விளையாடாததை பொருட்படுத்த வேண்டாம் எனறு சிறுவன் உருக்கமாக கூறியுள்ளார்.

    இந்திய அணியின் ஒருநாள் மட்டும் டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படுபவர் ரோகித் சர்மா. கடந்த ஆண்டுகளில் இறுதியில் இருந்து இவரது கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் மோசமாக அமைந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்தும் பார்ம் இல்லாத காரணத்தால் கடைசி டெஸ்ட்டில் தாமாகவே வெளியேறினார்.

    இதனால் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருடன் ரோகித் ஓய்வு அறிவித்து விடுவார் என தகவல்கள் வேகமாக பரவியது. இதனையடுத்து இந்த கருத்துக்கு ரோகித் சர்மா முற்றுப்புள்ளி வைத்தார். எனது ஓய்வு அறிவிப்பை நான் தான் முடிவு செய்வேன் என திட்டவட்டமாக கூறினார்.

    இந்திய அணியின் பேட்டிங் பெரிய அளவில் தாக்கத்தை வெளிப்படுத்தாத நிலையில் அனைத்து இந்திய வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவித்தது. இதனையடுத்து அனைத்து வீரர்களும் ரஞ்சி டிராபியில் விளையாடினர்.

    அந்த வகையில் மும்பை அணிக்காக களமிறங்கிய ரோகித் சர்மா, மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மீண்டும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. மேலும் அவர் ஓய்வு அறிவிக்க உள்ளார் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் சமீப காலங்களில் நீங்கள் நன்றாக விளையாடாததை பொருட்படுத்த வேண்டாம் என்றும் வெறுப்பவர்கள் வெறுக்கத்தான் செய்வார்கள் என்றும் 15-வது வயது சிறுவன் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சமீப காலங்களில் நீங்கள் நன்றாக விளையாடாததை பொருட்படுத்த வேண்டாம். வெறுப்பவர்கள் வெறுக்கத்தான் செய்வார்கள். ஆனால் உங்களின் தலைமை பண்பு சிறப்பாக உள்ளது. தயவுசெய்து ஓய்வு அறிவித்துவிடாதீர்கள். நான் கிரிகெட் பார்ப்பதற்கு காரணமே நீங்கள்தான். உங்கள் ERA-ல் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்.

    இவ்வாறு சிறுவன் கூறியுள்ளார்.

    • பிரித்வி சேகர் 6-3, 6-1 என்ற நேர் செட்கணக்கில் ஆலிவர் கிரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
    • தொடரில் 2வது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரித்வி சேகர்.

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீசும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினர்.

    இந்நிலையில், காது கேளாதோருக்கு நடத்தப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் பிரான்சின் ஆலிவர் கிரேவ் உடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரித்வி சேகர் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் பிரித்வி சேகர் 6-3, 6-1 என்ற நேர் செட்கணக்கில் ஆலிவர் கிரேவை வீழ்த்தி தொடர்ந்து 2வது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்றார்.

    காது கேளாதோருக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கடந்தாண்டும் பிரித்வி சேகர் தான் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஐசிசி விருதை வென்ற முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை ஓமர்சாய் படைத்துள்ளார்.
    • ஐபிஎல் ஏலத்தில் ஓமர்சாயை ரூ.2.4 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த ஆண்கள் ஒருநாள் வீரராக ஆப்கானிஸ்தான் அணியின் ஓமர்சாயை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது. இதன்மூலம் ஐசிசி விருதை வென்ற முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை ஓமர்சாய் படைத்துள்ளார்.

    அவர் கடந்த ஆண்டில் 14 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஒரு சதம் 3 அரைசதத்துடன் 417 ரன்கள் குவித்துள்ளார். பந்து வீச்சில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    ஐபிஎல் ஏலத்தில் ஓமர்சாயை ரூ.2.4 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த ஆண்டில் மந்தனா, 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் குவித்துள்ளார்.
    • மந்தனா 2018-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த ஆண்டுக்கான ஐசிசி விருதை வென்றுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த மகளிர் ஒருநாள் வீராங்கனையாக இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அவர் கடந்த ஆண்டில் இந்தியாவுக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும் மூன்று அரைசதங்களும் அடங்கும். மேலும் பந்து வீச்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

    மந்தனா 2018-ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது வென்றவர்கள்

    ஸ்டாஃபானி டெய்லர் (வெஸ்ட் இண்டீஸ்) - 2012

    சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) - 2013

    சாரா டெய்லர் (இங்கிலாந்து) - 2014

    மெக் லானிங் (ஆஸ்திரேலியா) - 2015

    சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) - 2016

    ஏமி சாட்டர்த்வைட் (நியூசிலாந்து) - 2017

    ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 2018

    எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா) - 2019

    லிசெல் லீ (தென்னாப்பிரிக்கா) - 2021

    நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் (இங்கிலாந்து) - 2022

    சாமரி அதபத்து (இலங்கை) - 2023

    ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 2024

    • முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
    • ஏபி டி வில்லியர்ஸ் 2021-ம் ஆண்டு ஓய்வை அறிவித்தார்.

    தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நிறைய தவறுகளை செய்துவிட்டார் என்று இந்திய அணி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி வந்த ஏபி டி வில்லியர்ஸ் தவறான அணிகளில் விளையாடி விட்டார். 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடரில் களமிறங்கிய ஏபி டி வில்லியர்ஸ் முதலில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணிக்காக விளையாடினார்.

    மூன்று சீசன்கள் டெல்லி அணியில் விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் 2011 ஐ.பி.எல். மெகா ஏலத்திற்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்தார். ஆர்.சி.பி. அணிக்காக 11 சீசன்களில் விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் 2021-ம் ஆண்டு ஓய்வை அறிவித்தார்.

    இந்த நிலையில், ஏபி டி வில்லியர்ஸ்-இன் மிஸ்டர் 360 நிலையை சூர்யகுமார் அடைந்துவிட்டாரா என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "அவர் போட்டியில் வெற்றி பெறும் தாக்கத்தை பொருத்து ஆம் என்று தான் கூறுவேன்."

    "ஏபி டி வில்லியர்ஸ் சிறப்பாக இருந்தார். இவரின் டெஸ்ட் கிரிக்கெட் சராசரி 50 ஆக இருந்தது. ஒரு நாள் போட்டிகளிலும் அவர் தலைசிறந்த வீரர். ஆனால் டி20 கிரிக்கெட்டை மட்டும் பார்த்தால், நான் அதிகம் பார்த்திருக்கிறேன்."

    "ஐ.பி.எல். தொடரில் ஏபி டி வில்லியர்ஸ் அவரின் உண்மையான திறமைக்கு ஏற்ப சரியாக பயன்படுத்தப்படவில்லை. இது கூறுவதற்கு மன்னிக்கவும், அவர் தவறான அணிகளில் விளையாடி விட்டார். அவர் வேறு அணியில் விளையாடி இருந்தால், ஏபி டி வில்லியர்ஸ்-இன் மற்றொரு முகத்தை பார்த்திருக்கலாம்," என்று தெரிவித்தார்.

    • பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் பொட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி.
    • முன்னதாக 1990ல் பைசாலாபாத்தில் நடந்த டெஸ்டில் பாகிஸ்தானை வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியிருந்தது.

    பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது.

    இப்போட்டியில் முதலில் பிட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 154 ரன்களுக்கு சுருண்டது.

    இதையடுத்து, 9 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதனை அடுத்து, 254 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் வெற்றியை பதிவு வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 1990ல் பைசாலாபாத்தில் நடந்த டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

    • போட்டியின் சூழ்நிலையை விளக்க விரும்புகிறேன்.
    • வணக்கம் கூற வேண்டும் என்று கூறினர்.

    நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் செஸ் தொடரின் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை வைஷாலியை எதிர்த்து உஸ்பெகிஸ்தானை சேர்ந்த நோடிர்பெக் விளையாடினார். இந்தப் போட்டி துவங்கும் முன் நோடிர்பெக் வைஷாலிக்கு கை குலுக்க மறுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இது குறித்து எக்ஸ் தளத்தில் பகிரப்படும் வீடியோவில் நோடிர்பெக்-க்கு எதிரான போட்டி துவங்கும் முன்பு வைஷாலி அவருக்கு கை குலுக்க முன்வந்தார். எனினும், நோடிர்பெக் வேண்டாம் என்று அப்படியே அமர்ந்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டதை அடுத்து நோடிர்பெக் நான் வைஷாலியை அவமதிக்கும் நோக்கில் அப்படி செய்யவில்லை என்று கூறினார். மேலும், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "அன்பான செஸ் நண்பர்களுக்கு, வைஷாலியுடனான போட்டியின் சூழ்நிலையை விளக்க விரும்புகிறேன். மகளிர் மற்றும் இந்திய செஸ் வீரர்கள் மீதான மரியாதையுடன், நான் மத ரீதியிலான காரணங்களுக்காக பெண்களை தொட மாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."



    "முன்னதாக 2023-ல் திவ்யாவுடனான போட்டியின் போதும், இது போன்ற சூழ்நிலைகளில் அவ்வாறு செய்வது தவறு என்று நான் நினைக்கிறேன். நான் என்ன செய்ய விரும்புகிறேனோ, அதைதான் செய்வேன். நான் மற்றவர்களிடம் எதிர் பாலினத்தவரிடம் கை குலுக்க வேண்டாம் என்றோ, பெண்களை ஹிஜாப் அல்லது புர்கா அணிய வேண்டும் என்றோ கூற மாட்டேன். என்ன செய்ய வேண்டுமென்றாலும் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம்."

    "இன்று பல்மகாவிடம் நான் அதை கூறினேன், அவர் அதை ஏற்றுக் கொண்டார். அரங்கிற்கு வந்ததும், நான் அப்படி செய்யக் கூடாது என்றும், குறைந்தபட்சம் வணக்கம் கூற வேண்டும் என்று கூறினர். திவ்யா மற்றும் வைஷாலியுடனான போட்டி துவங்கும் முன் என்னால் அவர்களிடம் இதை கூற முடியவில்லை. அது சங்கடமான சூழ்நிலையாக மாறிவிட்டது," என்று தெரிவித்துள்ளார். 

    ×