என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
    • இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

    9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

    இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணி, திருப்பூர் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    இதன்மூலம், திருப்பூர் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    • முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.
    • முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    180 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை ஆடிய இந்தியா 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் மழை வெளுத்து வாங்கி வருவதால், இந்தியா VS இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றதும் மீண்டும் போட்டி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • வைபவ் சூர்யவன்ஷி 78 பந்தில் 13 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார்.
    • 52 பந்தில் அதிவேக சதம் அடித்து சூர்யவன்ஷி அசத்தினார்.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 78 பந்தில் 13 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார். 52 பந்தில் சூர்யவன்ஷி சதம் விளாசினார்.

    இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் 53 பந்தில் சதம் அடித்திருந்தார்.

    மேலும், 10 சிக்சர்கள் அடித்து ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 35 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்திருந்தார்.

    அதிவேக சதம் விளாசி 143 ரன்கள் குவித்த பின்பு பேசிய வைபவ் சூர்யவன்ஷி, "சுப்மன் கில் 100 மற்றும் 200 ரன்கள் எடுத்தபோது அவரிடமிருந்து எனக்கு நிறைய உத்வேகம் கிடைத்தது. அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன். 50 ஓவர்களும் களத்தில் நிலைத்து நின்று விளையாட முயல்வேன். எவ்வளவு அதிக ரன்கள் குவிக்கிறேனோ, அணிக்கு அவ்வளவு சாதகம் தான்" என்று தெரிவித்தார்.

    • இப்போட்டியில் கில் முதல் இன்னிங்சில் 269 ரன்கள் குவித்த கில் 2 ஆவது இன்னிங்சில் 161 ரன்கள் குவித்தார்.
    • ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கில் படைத்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    180 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை ஆடிய இந்தியா 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 269 ரன்கள் குவித்த கில் 2 ஆவது இன்னிங்சில் 161 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கில் படைத்தார்.

    மேலும், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 2வது இடத்தை சுப்மன் கில் பிடித்தார். முதலிடத்தில் இங்கிலாந்தின் கிரஹாம் கூச் உள்ளார் (456 VS IND, 1990)

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 430 ரன்கள் குவித்த கேப்டன் கில்க்கு முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    கோலி தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "அருமை Star Boy. வரலாற்றை மாற்றும் ஒரு ஆட்டத்தின் தொடக்கம் மேலும் மேலும் வளரட்டும். எல்லா பாராட்டுகளுக்கும் நீ தகுதியானவன்" என்று தெரிவித்துள்ளார். 

    • சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி குரோஷியாவில் நடைபெற்றது.
    • முன்னாள் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (10 புள்ளி) 3-வது இடமும் பிடித்தனர்.

    இந்த ஆண்டுக்கான கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் நடைபெற்றது.

    9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் உலக சாம்பியன் குகேஷ் (இந்தியா), நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ரேபிட் பிரிவில் 9-வது மற்றும் கடைசி சுற்றில் சென்னையை சேர்ந்த 19 வயது குகேஷ், அமெரிக்காவின் வெஸ்லி சோவை சந்தித்தார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் குகேஷ் 36-வது காய் நகர்த்தலில் வெற்றி பெற்றார். 9-வது சுற்று முடிவில் குகேஷ் 14 புள்ளிகள் பெற்று (6 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி) சாம்பியன் பட்டம் வென்றார்.

    போலந்து வீரர் ஜான் கிர்சிஸ்டோப் டுடா (11 புள்ளி) 2-வது இடமும், முன்னாள் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (10 புள்ளி) 3-வது இடமும் பிடித்தனர்.

    இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பாபியனோ கருனாவுடன் (இருவரும் தலா 9 புள்ளி) இணைந்து 4-வது இடம் பெற்றார். இதைத்தொடர்ந்து பிளிட்ஸ் பிரிவு போட்டி நடக்கிறது.

    • இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது.
    • சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

    9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணி லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. அடுத்து முதலாவது தகுதி சுற்றில் 79 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

    திருப்பூர் அணியில் பேட்டிங்கில் துஷர் ரஹேஜா (411 ரன்), அமித் சாத்விக், பிரதோஷ் ரஞ்சன் பால், சசிதேவும், பந்து வீச்சில் இசக்கிமுத்து (12 விக்கெட்), டி.நடராஜன், சிலம்பரசனும் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் சாய் கிஷோர் (128 ரன், 12 விக்கெட்) ஆல்-ரவுண்டராக அசத்துகிறார்.

    ஆர்.அஸ்வின் தலைமையிலான நடப்பு சாம்பியன் திண்டுக்கல் அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 3 தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் 3-வது இடம் பெற்றது. இதைத்தொடர்ந்து வெளியேற்றுதல் சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியையும், 2-வது தகுதி சுற்றில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசையும் வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    திண்டுக்கல் அணியில் பேட்டிங்கில் ஷிவம் சிங் (327 ரன்), விமல் குமார், பாபா இந்திரஜித், ஹன்னி சைனியும், பந்து வீச்சில் ஜி.பெரியசாமி (11 விக்கெட்), வருண் சக்ரவர்த்தி (10 விக்கெட்), சசிதரணும், ஆல்-ரவுண்டராக கேப்டன் அஸ்வினும் (296 ரன், 13 விக்கெட்) வலுசேர்க்கின்றனர்.

    லீக் ஆட்டத்தில் திருப்பூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கலை தோற்கடித்து இருந்தது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள திண்டுக்கல் அணி தீவிரம் காட்டும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு அனுகூலமாக இருக்கும். இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

    ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5-ல் திண்டுக்கல்லும், ஒன்றில் (நடப்பு சீசனில்) திருப்பூரும் வெற்றி பெற்றுள்ளன.

    இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

    இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    திருப்பூர்: அமித் சாத்விக், துஷர் ரஹேஜா, சாய் கிஷோர் (கேப்டன்), முகமது அலி, சசிதேவ், பிரதோஷ் ரஞ்சன் பால், மோகன் பிரசாத், சிலம்பரசன், மதிவாணன், டி.நடராஜன், இசக்கிமுத்து, அனோவன்கர்.

    திண்டுக்கல்: ஆர்.அஸ்வின் (கேப்டன்), ஷிவம் சிங், பாபா இந்திரஜித், மான் பாப்னா, விமல் குமார், ஹன்னி சைனி, தினேஷ், கார்த்திக் சரண், புவனேஷ்வர், வருண் சக்ரவர்த்தி, சசிதரண், ஜி.பெரியசாமி.

    இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.
    • கென்யாவின் ஜூலியஸ் யெகோ 84.51 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

    இந்திய நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான நீரஜ் சோப்ரா பெங்களூருவில் தனது பெயரில் நடைபெற்ற முதல் 'நீரஜ் சோப்ரா கிளாசிக் 2025' போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் நீரஜ் போட்டியிடுவதைக் காண ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அவர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில், நீரஜ் ஒரு தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    சனிக்கிழமை நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், நீரஜ் தனது மூன்றாவது முயற்சியில் 86.18 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்.

    கென்யாவின் ஜூலியஸ் யெகோ 84.51 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இலங்கை தடகள வீரர் ருமேஷ் பதிரேஜ் 84.34 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

    மற்றொரு இந்திய தடகள வீரர் சச்சின் யாதவ் 82.23 மீட்டர் தூரம் எறிந்து நான்காவது இடத்தைப் பிடித்தார். நீரஜ் சோப்ரா இந்தப் போட்டியின் அமைப்பாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது

    • இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • 50 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகெளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற தொடங்கியது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.

    மதிய தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 100 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    பின் இறுதியில் ஒட்டுமொத்தமாக இந்தியா 607 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிராலி ரன் 0 ரங்களுடன் ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 25 ரன்னிலும், ஜோ ரூட் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 50 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகெளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற தொடங்கியது.

    இந்நிலையில் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.

    போப் 24 ரன்னிலும், புரூக் 15 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 536 ரன்கள் தேவைப்படும் நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 7 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. வெற்றி தோல்வியை நாளை நடக்க இருக்கும் 5-ம் நாள் ஆட்டம் முடிவு செய்யும்.

    • சுப்மன் கில் 161 ரன்கள் விளாசினார்.
    • கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா அரைசதம் அடித்தனர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. கருண் நாயர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி 78 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அருக்கு இணையாக சுப்மன் கில்லும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

    இந்த ஜோடி 4ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டமிழக்காமல் விளையாடியது. இதனால் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 41 (35 பந்துகள்) ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரிஷப் பண்ட் 48 பந்தில் அரைசதம் அடித்தார். சுப்மன் கில் 57 பந்தில் அரைசதம் அடித்தார். ரிஷப் பண்ட் 65 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜடேஜா களம் இறங்கினார்.

    அரைசதம் அடித்த கில் அதை சதமாக மாற்றினார். அவர் 129 பந்தில் சதம் அடித்தார். மதிய தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 100 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. சுப்மன் கில் மற்றும் ஜடேஜா வாணவேடிக்கை நிகழ்த்தினர். ஜடேஜா 94 பந்தில் அரைசதம் அடித்தார். சுப்மன் கில் 156 பந்தில் 150 ரன்னைத் தொட்டார். 27 பந்தில் 100-ல் இருந்து 150 ரன்னைத் தொட்டார். தொடர்ந்து விளையாடிய அவர் 162 பந்தில் 161 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 411 ரன்கள் குவித்திருந்தது.

    அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 7ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்தியா 427 ரன்கள் எடுத்திருக்கும்போது 2ஆவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜடேஜா 69 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    ஒட்டுமொத்தமாக இந்தியா 607 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

    • 2ஆவது இன்னிங்சில் 57 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • 129 பந்தில் சதம் விளாசினார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் விளாசினார்.

    அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்கள் குவித்தது. 180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. கருண் நாயர் 2ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்ததும் சுப்மன் கில் களம் இறங்கினார்.

    இவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 57 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 129 பந்தில் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் சதம் விளாசினார். இதன்மூலம் முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், 2ஆவது இன்னிங்சில் சதமும் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

    • பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் 53 பந்தில் சதம் அடித்திருந்தார்.
    • சூர்யவன்ஷி 52 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 78 பந்தில் 13 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார்.

    52 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் 53 பந்தில் சதம் அடித்திருந்தார்.

    மேலும், 10 சிக்சர்கள் அடித்து அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 35 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்திருந்தார்.

    • கருண் நாயர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • கே.எல். ராகுல் 55 ரன்கள் எடுத்து ஆவுட் ஆனார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. கருண் நாயர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி 78 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

    இந்த ஜோடி 4ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டமிழக்காமல் விளையாடியது. இதனால் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 41 (35 பந்துகள்) ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை இந்தியா 357 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன. இதனால் 500 ரன்களுக்கு மேல் இங்கிலாந்துக்கு இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

    ×