என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ENG vs IND:  வெற்றியை நோக்கி இந்தியா.. தடுமாறும் இங்கிலாந்து -  4ம் நாள் ஆட்டம் எப்படி?
    X

    ENG vs IND: வெற்றியை நோக்கி இந்தியா.. தடுமாறும் இங்கிலாந்து - 4ம் நாள் ஆட்டம் எப்படி?

    • இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • 50 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகெளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற தொடங்கியது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.

    மதிய தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 100 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    பின் இறுதியில் ஒட்டுமொத்தமாக இந்தியா 607 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிராலி ரன் 0 ரங்களுடன் ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 25 ரன்னிலும், ஜோ ரூட் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 50 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகெளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற தொடங்கியது.

    இந்நிலையில் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.

    போப் 24 ரன்னிலும், புரூக் 15 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 536 ரன்கள் தேவைப்படும் நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 7 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. வெற்றி தோல்வியை நாளை நடக்க இருக்கும் 5-ம் நாள் ஆட்டம் முடிவு செய்யும்.

    Next Story
    ×