என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கருண் நாயர் ஏமாற்றம்: கே.எல். ராகுல் அரைசதம், பண்ட் அதிரடி: இந்தியா 177/3
- கருண் நாயர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- கே.எல். ராகுல் 55 ரன்கள் எடுத்து ஆவுட் ஆனார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. கருண் நாயர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி 78 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.
3ஆவது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இந்த ஜோடி 4ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டமிழக்காமல் விளையாடியது. இதனால் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 41 (35 பந்துகள்) ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
தற்போது வரை இந்தியா 357 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன. இதனால் 500 ரன்களுக்கு மேல் இங்கிலாந்துக்கு இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.