என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் ஆகாஷ் தீப் 10 விக்கெட் வீழ்த்தினார்.
    • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு வெற்றியை அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஆகாஷ் தீப்பின் பந்து வீச்சும் முக்கிய காரணமாகும். இன்-ஸ்விங் பந்தால் இங்கிலாந்து பேட்டர்களை திணறடித்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.

    வெற்றிபெற்ற சந்தோசத்தில் டி.வி.க்கு பேட்டியளிக்கும்போது, எனது சகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்த வெற்றியை அரப்பணிக்கிறேன் என எமோசனலாக பேசினார். இதனால் வெற்றியை கொண்டாட வேண்டிய ரசிகர்கள் இவரது பேச்சைச் கேட்டு மிகுந்த கவலை கொண்டனர்.

    இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆகாஷ் தீப்பின் சகோதரி ஜோதி கூறியதாவது:-

    எனது சகோதரன் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியது, இந்தியாவுக்காக பெருமை படக்கூடிய விசயம். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக, விமான நிலையத்தில் நாங்கள் அவனை சந்தித்தோம். அப்போது நான் அவனிடம், நான் முற்றிலும் நலமாக இருக்கிறோன். என்னைப் பற்றி கவலைப்படாதே. நாட்டிற்காக நன்றாக செயல்படு எனத் தெரிவித்தேன்.

    என்னுடைய புற்றுநோய் பாதிப்பு 3ஆவது நிலையில் (Third Stage) உள்ளது. 6 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் தெரிவித்துள்ளார். அதன்பின் என்ன நடக்கிறது என்பது பார்ப்போம்.

    ஆகாஷ் தீப் விக்கெட்டுகள் வீழ்த்தும்போதெல்லாம், எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவன் எப்போதெல்லாம் விக்கெட் வீழ்த்துவானோ, அப்போதெல்லாம் கைத்தட்டி, சத்தமாக மகிழ்ச்சியை கொண்டாடுவோம். எங்கள் வீட்டின் அருகில் உள்ளவர்கள் என்ன நடந்தது என்று கேட்பார்கள்.

    என்னைப் பற்றி ஆகாஷ் தீப் சொல்வார் என்று எனக்குத் தெரியாது. நாங்கள் இது தொடர்பாக வெளியே சொல்ல தயாராக இல்லாமல் இருந்திருக்கலாம். அவர் எமோசனலாகி, எனக்காக இந்த வெற்றியை அர்ப்பணித்தது, பெரிய விசயம். இது எங்களுடைய குடும்பம் மற்றும் என் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பது காட்டுகிறது.

    இவ்வாறு ஆகாஷ் தீப் சகோதரி ஜோதி தெரிவித்துள்ளார்.

    • இதற்கு முன்னதாக எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணி வெற்றி பெற்றதே கிடையாது.
    • சுப்மன் கில் தலைமையில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுப்மன் கில் (269, 161) இரண்டு சதங்கள் அடிக்க முகமது சிராஜ் (7), ஆகாஷ் தீப் (10) அபாரமாக பந்து வீசினார்.

    இந்திய டெஸ்ட் அணி இதற்கு முன்னதாக எட்ஜ்பாஸ்டனில் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிளில் வெற்றி பெற்றதே கிடையாது. இதுதான் முதல் வெற்றி.

    இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பிரிட்டிஷ் செய்தியாளர் ஒருவர் சுப்மன் கில்லிடம் எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணி வெற்றி பெற்றதே இல்லையே? என கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்த நிலையில் நேற்றைய வெற்றிக்குப்பின் சுப்மன் கில் பத்திரியைாளர்களை சந்தித்தார். அப்போது, என்னுடைய பிடித்தமான பத்திரிகையாளரை பார்க்க முடியவில்லையே? அவர் எங்கே?. எனக் கூறியதுடன், பத்திரிகையாளர்கள் அமர்ந்து இருக்கும் இடத்தை சிறிது நேரம் உற்றுப்பார்த்தார்.

    பின்னர் எட்ஜ்பாஸ்டன் வெற்றி குறித்து கூறுகையில் "இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவும், நான் உண்மையிலேயே வரலாறு மற்றும் புள்ளி விவரங்களை பார்ப்பதில்லை எனத் தெரிவித்திருந்தேன். கடந்த 56 வருடங்களில் நாங்கள் இங்கே மாறுபட்ட அணிகளுடன் 9 போட்டிகளில் விளையாடியுள்ளோம்.

    இங்கிலாந்திற்கு தற்போது சிறந்த அணியாக வந்துள்ளோம் என நம்புகிறோம். இங்கிலாந்தில் மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தும் திறன் எங்களிடம் உள்ளது. தொடரையும் வெல்லக்கூடிய திறன் உள்ளது. சரியான முடிவை எடுத்து போராட முடியும் என்றால், இது எங்களுக்கு எப்போதும் ஞாபகத்தில் இருக்கக் கூடிய ஒரு போட்டியாக இருக்கும்" என்றார்.

    • எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
    • ICC-யின் மூன்று முக்கிய கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தோனி அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் நிகழ்த்திய சாதனைகள் நாம் ஒருமுறை புரட்டி பார்க்கலாம்.

    தோனி தனது கிரிக்கெட் பயணத்தை பள்ளி அணிகளில் விளையாடுவதன் மூலம் தொடங்கினார். ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டிய அவர், பின்னர் கிரிக்கெட் பயிற்சியாளர் கேசவ் பானர்ஜியின் ஊக்குவிப்பால் கிரிக்கெட் விளையாட தொடங்கினார்.

    தொடர்ந்து விளையாடிய அவர் முதல் தர கிரிக்கெட்டில் 1999-2000ல் பீகார் அணிக்காக ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இந்திய அணியில் இடம் பெற்றார்.

    ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக 2004-ம் ஆண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக 2005ம் ஆண்டும், டி20யில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2006-ம் ஆண்டும் இந்திய அணியில் தோனி அறிமுகமானார்.

    அதனை தொடர்ந்து 2007ல் இந்திய T20 அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். 2008 முதல் 2014 வரை டெஸ்ட் அணியையும், 2007 முதல் 2016 வரை ஒருநாள் அணியையும் வழிநடத்தினார்.

    உலக கோப்பை வெற்றிகள்: தோனியின் தலைமையில் 2007 ஆம் ஆண்டு இந்தியா முதல் T20 உலகக் கோப்பையை வென்றது. அதன்பின் 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது.

    1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணிக்கு பிறகு அதுவும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது.

    2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பின்பு ICC-யின் மூன்று முக்கிய கோப்பைகளையும் (T20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராஃபி) வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.

    டெஸ்ட் முதலிடம்: 2009ல் இந்திய டெஸ்ட் அணியை ICC தரவரிசையில் முதலிடத்திற்கு அழைத்துச் சென்றார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): 2008 முதல் CSK அணியின் கேப்டனாக இருந்து, அணியை 5 முறை (2010, 2011, 2018, 2021, 2023) சாம்பியனாக்கினார். தோனியின் தலைமை மற்றும் ரசிகர் ஆதரவால் CSK உலகளவில் மிகவும் பிரபலமான IPL அணிகளில் ஒன்றாக உள்ளது.

    விருதுகள் மற்றும் கௌரவங்கள்: பத்ம ஸ்ரீ (2009), பத்ம பூஷண் (2018) , ராஜீவ் காந்தி கேல் ரத்னா (2007-08), ICC ஒருநாள் வீரர் விருது (2008, 2009) ஆகிய விருதுகளை தோனி வென்றுள்ளார்.

    திருமண வாழ்க்கை: தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.தோனி - சாக்சி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

    தனிப்பட்ட விருப்பங்கள்: கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக தோனிக்கு மோட்டார் பைக்குகள் மற்றும் கார்களின் மீது தீவிர ஆர்வம் உள்ளது. இதன் காரணமாக அவர் தனது வீட்டில் நிறைய கார் மற்றும் பைக்குகளை சேகரித்து வைத்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட்டில் தோனியின் தாக்கம்: தோனி இந்திய கிரிக்கெட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர். சிறிய நகரத்தில் பிறந்து, தனது திறமை மற்றும் உழைப்பால் உலகளவில் புகழ் பெற்றார். அவரது அமைதியான தலைமை, முடிவெடுக்கும் திறன் மற்றும் எளிமையான பண்பு இளைஞர்களுக்கு உத்வேகமாக உள்ளது.

    • எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி எம்.எஸ்.தோனி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • எதிரணியினர் கோலியை கண்டு பயந்ததை நான் என் கண்முன்னே பார்த்திருக்கிறேன்.
    • அவர் களத்திற்குள் வந்தாலே அவர்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாவார்கள்.

    இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கோலியும் ரோகித்தும் ஓய்வை அறிவித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.

    இந்நிலையில் விராட் கோலி குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை ஐசிசி-யின் முன்னாள் நடுவர் அனில் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எதிரணியினர் கோலியை கண்டு பயந்ததை நான் என் கண்முன்னே பார்த்திருக்கிறேன். அவர் களத்திற்குள் வந்தாலே அவர்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். அணியில் உள்ள பாதி பேரின் கவனம் அவர் மீதுதான் இருக்கும்.

    என அனில் சவுத்ரி கூறினார்.

    • நான் எப்போதும் பேட்ஸ்மேனாக விளையாடி முடிவுகளை எடுக்க விரும்புகிறேன்.
    • கேப்டனாக இருந்து கொண்டு பேட்ஸ்மேனாக சிந்தித்தால் ரிஸ்க் எடுக்க முடியாது.

    பர்மிங்காம்:

    இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது பர்மிங்காம் மைதானத்தில் இந்திய அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் இங்கு விளையாடிய 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும் ஒன்றில் டிராவும் கண்டிருந்தது.

    இந்நிலையில் எங்களுடைய பவுலிங் மற்றும் பீல்டிங் பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது என இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, முதல் போட்டிக்கு பின் நாங்கள் பேசிய விஷயங்களில் இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டோம். எங்களுடைய பவுலிங் மற்றும் பீல்டிங் பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது. இது போன்ற பிட்ச்சில் 400 - 500 ரன்கள் அடித்தால் எங்களால் வெற்றியின் அருகே இருக்க முடியும் என்பது தெரியும்.

    ஒவ்வொரு முறையும் நாங்கள் நிறைய கேட்ச்களை மிஸ் செய்ய மாட்டோம். ஆகாஷ் தீப் தம்முடைய இதயத்திலிருந்து பவுலிங் செய்தார். அவர் வீசிய லென்த், இடங்கள் பந்தை இருபுறமும் நகர்த்திய விதம் அற்புதமானது. இது போன்ற பிட்ச்சில் அதை செய்வது கடினமானது. எங்களுடைய பவுலர்கள் இங்கிலாந்தின் டாப் ஆர்டரை ஆட்டிப் பார்த்தது அற்புதமானது.

    நான் எப்போதும் பேட்ஸ்மேனாக விளையாடி முடிவுகளை எடுக்க விரும்புகிறேன்.கேப்டனாக இருந்து கொண்டு பேட்ஸ்மேனாக சிந்தித்தால் ரிஸ்க் எடுக்க முடியாது. அடுத்த போட்டியில் பும்ரா கண்டிப்பாக விளையாட வருவார். லார்ட்ஸ் போன்ற மைதானத்தில் உங்களுடைய நாட்டின் கேப்டனாக செயல்படுவதை விட வேறு கவுரவம் இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

    வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 286 ரன் குவித்தது.

    வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 253 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 244 ரன் எடுத்தது. 277 ரன் இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 143 ரன்னில் சுருண்டது.

    இதனால் ஆஸ்திரேலியா 133 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் தோற்று இருந்தது. இதனால் 3 போட்டி கொண்ட தொடரை இழந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

    • எம்.எஸ். தோனி இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
    • மகத்துவம் என்பது பிறப்பதில்லை, அது உருவாக்கப்படுகிறது

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

    இந்நிலையில், தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்தது தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதவில், "எம்.எஸ். தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் ஒவ்வொரு அசைவிலும் அழுத்தத்தை கவிதையாக மாற்றிய ஒரு அரிய OG

    மகத்துவம் என்பது பிறப்பதில்லை, அது உருவாக்கப்படுகிறது என்பதை நீங்கள் நிரூபித்தீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ரூப்லதேவ் உடன் மோதினார்.
    • உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோதினார்.

    ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ரூப்லதேவ் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-7 (5), 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    பெண்கள் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோதினார்.

    இப்போட்டியில் 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் வென்று சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.

    • இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    180 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 427 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

    முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் பெற்ற 'மிகப்பெரிய வெற்றி' என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

    • திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது.
    • அதிகபட்சமாக, துஷர் ரஹாஜே 77 ரன்களும், அமித் சாத்விக் 65 ரன்களும் எடுத்தனர்.

    9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடந்தது. இதில் திருப்பூர் தமிழன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின .

    டாஸ் வென்ற திண்டுக்கல் அணி, திருப்பூர் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்மூலம், திருப்பூர் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது. இதில், திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, துஷர் ரஹாஜே 77 ரன்களும், அமித் சாத்விக் 65 ரன்களும் எடுத்தனர்.

    புவனேஷ்வர் வெங்கடேஷ், வருண் சக்ரவர்த்தி, கணேஷன் பெரியசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும், கார்த்திக் சரண் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    திருப்பூர் அணி நிர்ணயித்த 221 என்கிற வெற்றி இலக்கை அடைந்து கோப்பையை வெல்லும் முனைப்பில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது.  

    களமிறங்கிய திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் (1), பாபா இந்திரஜித் (9), விமல் குமார் (10), மற்றும் தினேஷ் (3) ஆகிய முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். திருப்பூர் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், திண்டுக்கல் அணியின் மற்ற பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  

    இதன்விளைவாக 14.4 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 102 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 118 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல்லை வீழ்த்தி  திருப்பூர் அணி வெற்றிக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. 

    • இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.

    மதிய தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 100 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    பின் இறுதியில் ஒட்டுமொத்தமாக இந்தியா 607 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து இறுதி நாளான இன்று விளையாடிய இங்கிலாந்து அணி 68.1 ஓவருக்கு அனைத்து விக்கெட் இழப்பிற்கு வெறும் 271 ரன்களே எடுத்தது.

    இதன்மூலம், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

    முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×