என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வெளிநாட்டில் நடந்த டெஸ்டில் இதுதான் மிகப்பெரிய வெற்றி... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாதனை
- இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
180 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 427 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் பெற்ற 'மிகப்பெரிய வெற்றி' என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.






