என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதல் செட்டை இழந்த யுகி பாம்ப்ரி ஜோடி, 2-வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.
    • தோல்வி கண்ட யுகின் பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி - அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, மார்செல் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) - ஹோராசியோ ஜெபலோஸ் (அர்ஜெண்டினா) ஜோடியை எதிர்கொண்டது.

    இந்த போட்டியின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த யுகி பாம்ப்ரி ஜோடி, ஆட்டத்தின் 2-வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட்டில் அனல் பறந்தது.

    இதில் அபாரமாக செயல்பட்ட மார்செல் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) - ஹோராசியோ ஜெபலோஸ் (அர்ஜெண்டினா) ஜோடி 7-6 (10-4) என்ற புள்ளிக்கணக்கில் யுகி பாம்ப்ரி ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. தோல்வி கண்ட யுகின் பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • முதல் செட்டை டிமிட்ரோ 6-3 என்ற கணக்கிலும் 2-வது செட்டை 7-5 என்ற கணக்கில் வென்றார்.
    • 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோவுக்கு காயம் ஏற்பட்டது.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்றில் பல்கேரியாவை சேர்ந்த 19-வது வரிசையில் உள்ள டிமிட்ரோவை எதிர் கொண்டார்.

    இதன் முதல் செட்டை சின்னர் 3-6 என்ற கணக்கில் இழந்தார். 2-வது செட்டையும் அவர் 5-7 என்ற கணக்கில் தோற்றார். 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோவுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவரால் தொடர்ந்து விளையாட முடியாது என அறிவித்தனர்.

    இதனையடுத்து அவர் இந்த போட்டியில் இருந்து விலகியதால் விலகியதால் சின்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காயத்தால் இந்த போட்டியில் தொடர முடியாத நிலையில் கண்கலங்கியபடி அவர் மைதானத்திற்கு வந்தார். அவரை சக வீரரான சின்னர் கட்டியணைத்தப்படி ஆறுதல் கூறினார்.

    தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத டிமிட்ரோ தெம்பி தெம்பி அழுதார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு எழுந்து நின்ற படி மரியாதை செலுத்தினர்.

    முதல் நிலை வீரரான சின்னரை எளிதாக வீழ்த்த வேண்டிய நிலையில் காயம் அவரது வெற்றியை பரித்தது காண்போரை கண்கலங்க செய்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தவறான திருமண வாக்குறுதிகள் மூலம் பாலியல் செயல்களில் ஈடுபடுதல் பிரிவில் எப்.ஐ. ஆர். பதிவாகியுள்ளது.
    • இந்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

    லக்னோ:

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள். ஆஸ்திரேலியா சென்ற இந்திய 'ஏ' அணியில் அவர் இடம் பெற்று இருந்தார்.

    இதற்கிடையே யாஷ் தயாள் மீது பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக புகார் அளித்து இருந்தார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த அந்தப் பெண் முதல்-மந்திரியின் ஆன்லைன் குறை தீர்க்கும் போர்டல் மூலம் புகார் அளித்துள்ளார்.

    அந்தப் பெண் தனது புகாரில் கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் வீரருடன் உறவில் இருந்தேன். திருமணம் செய்வதாக கூறி பலமுறை செக்ஸ் தொந்தரவு கொடுத்தார். உடல் ரீதியாக நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும் யாஷ் தயாள் அவரது குடும்பத்தினருக்கு தன்னை மருமகள் என்று அறிமுகப்படுத்தியதாகவும், இது அவரை முழுமையாக நம்ப வைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 24-ந்தேதி இந்த புகார் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பெண் புகாரின் அடிப்படையில் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முதல் கட்ட விசாரணைக்கு பிறகு இந்திய தண்டனை சட்டம் 69-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவாகி இருக்கிறது. ஏமாற்றுதல் அல்லது தவறான திருமண வாக்குறுதிகள் மூலம் பாலியல் செயல்களில் ஈடுபடுதல் பிரிவில் எப்.ஐ. ஆர். பதிவாகியுள்ளது.

    இந்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

    யாஷ் தயாள் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.

    • ஜோரூட்டை அவர் அவுட் செய்த பந்து தொடரின் சிறந்த பந்தாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.
    • ஜான்டி ரோட்சை போல முகமது சிராஜ் கேட்ச் பிடித்ததை ரசித்தேன்.

    மும்பை:

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றிக்கு கேப்டன் சுப்மன்கில்லின் அபாரமான பேட்டிங்கும் (430 ரன்), ஆகாஷ்தீப், முகமது சிராஜ் (17 விக்கெட்) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சும் காரணமாக இருந்தது.

    இந்த டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய (முதல் இன்னிங்சில் 4, 2-வது இன்னிங்சில் 6) ஆகாஷ் தீப்பை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

    அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன்கில் கில்லுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இந்திய அணியை அபாரமான வெற்றிக்கு அழைத்து சென்ற அவரை பாராட்டுகிறேன். 2-வது இன்னிங்சில் ரிஷப்பண்ட், கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

    இந்த டெஸ்டில் இந்திய அணி இங்கிலாந்தை முற்றிலுமாக வெளியேற்றிய அணுகுமுறை நன்றாக இருந்தது. பந்து வீச்சாளர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள். அவர்கள் பந்து வீசிய நேர்த்தியை சொல்ல தேவையில்லை. ஆகாஷ்தீப் ஒரு தனித்துவமான பந்து வீச்சாளர். ஜோரூட்டை அவர் அவுட் செய்த பந்து தொடரின் சிறந்த பந்தாக இருக்கும் என்பது எனது கருத்தாகும். ஜான்டி ரோட்சை போல முகமது சிராஜ் கேட்ச் பிடித்ததை ரசித்தேன்.

    இவ்வாறு டெண்டுல்கர் கூறி உள்ளார்.

    • மற்றொரு போட்டியில் மிரா ஆண்ட்ரீவா (ரஷியா), எம்மா நவரோவை (அமெரிக்கா) தோற்கடித்ததார்.
    • சம்சனோவாவும் (ரஷியா) கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கை சேர்ந்த கிளாரா டவ்செனை எளிதில் வென்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் 7-ம் நிலை வீராங்கனையான மிரா ஆண்ட்ரீவா (ரஷியா) 6-2,6-3 என்ற கணக்கில் 10-வது வரிசையில் உள்ள எம்மா நவரோவை (அமெரிக்கா) தோற்கடித்ததார். இதேபோல 19-வது வரிசையில் உள்ள சம்சனோவாவும் (ரஷியா) கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    • முதல் செட்டை 3-6 என்ற கணக்கிலும் 2-வது செட்டையும் 5-7 என்ற கணக்கிலும் தோற்றார்.
    • 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோ காயத்தால் வெளியேறினார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்றில் பல்கேரியாவை சேர்ந்த 19-வது வரிசையில் உள்ள டிமிட் ரோவை எதிர் கொண்டார்.

    இதன் முதல் செட்டை சின்னர் 3-6 என்ற கணக்கில் இழந்தார். 2-வது செட்டையும் அவர் 5-7 என்ற கணக்கில் தோற்றார். 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோ காயத்தால் வெளியேறினார். இதனால் சின்னர் தோல்வியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார். டிமிட்ரோவ் விலகியதால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    சின்னர் கால்இறுதியில் 10-ம் நிலை வீரரான ஷெல்டனை சந்திக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த அவர் 4-வது சுற்றில் 3-6, 6-1, 7-6 (7-1), 7-5 என்ற கணக்கில் லாரன்சோ சோன்கோவை (இத்தாலி) தோற்கடித்தார்.

    • இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • ஜோகோவிச் அபாரமாக விளைாயடி காலிறுதிக்கு முன்னேறினார்.

    இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆண்களுக்கு ஒற்றையர் பிரிவில் நம்பர் 6 வீரரான ஜோகோவிச், 11ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக்ஸ் டி மினார்-ஐ எதிர்கொண்டார்.

    முதல் செட்டை மினார் 6-1 என எளிதாக வென்றார். பின்னர் ஜோகோவிச் அபாரமாக விளைாயடினார். இதனால் அடுத்த 3 செட்களையும் 6-4 எனக் கைப்பற்றி 3-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ஜோகோவிச் - அலெக்ஸ் டி மினார் மோதிய போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் நேரில் கண்டுகளித்தனர்.

    விம்பிள்டனில் தனது போட்டியை கண்டுரசித்து, அதுகுறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருந்த விராட் கோலிக்கு, டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் நன்றி தெரிவித்துள்ளார்

    • 334 பந்துகளில் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முல்டர் டிக்ளேர் செய்தது பெரும் பேசுபொருளானது.
    • முல்டர் இன்னும் 34 ரன்கள் அடித்திருந்தால் லாராவின் 400 ரன்கள் சாதனையை முறியடித்திருக்கலாம்.

    தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே இடையிலான 2ஆவது டெஸ்ட் புலவாயோவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 626 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியிலேயே முச்சதம் விளாசி அசத்தினார் முல்டர். 334 பந்துகளில் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முல்டர் டிக்ளேர் செய்தது பெரும் பேசுபொருளானது.

    முல்டர் இன்னும் 34 ரன்கள் அடித்திருந்தால் லாராவின் 400 ரன்கள் என்ற வரலாற்று சாதனையை முறியடித்திருக்கலாம். அவர்தான் கேப்டன். இதனால் டிக்ளேர் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். 3 நாட்களுக்கு மேல் இருந்த போதிலும், அவர் டிக்ளேர் செய்தார்.

    2 ஆம் நாள் ஆட்ட முடிவிற்கு பிறகு பேசிய தென் ஆப்பிரிக்க கேப்டன், "பிரையன் லாரா ஒரு லெஜண்ட், அந்த அந்தஸ்துள்ள ஒருவர் அந்த சாதனையை தக்கவைத்துக்கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்

    எனக்கு மீண்டும் அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்தால், நான் இப்போது செய்ததை தான் அப்போதும் செய்வேன். நான் டிக்ளேர் செய்வது குறித்து பயிற்சியாளரிடமும் பேசினேன். சில சாதனைகள் லெஜண்டுகளுடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட லெஜண்டுகளில் ஒருவர் லாரா" என்று தெரிவித்தார்.

    லாரா 2004-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் அடித்தது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இருந்து வருகிறது.

    மேத்யூ ஹைடன் 2003-ல் 380 ரன்களும், லாரா 1994-ல் 375 ரன்களும், ஜெயவர்த்தனே 2006-ல் 374 ரன்களும், கேரி சோபர்ஸ் 1958-ல் ஆட்டமிழக்காமல் 365 ரன்களும் அடித்துள்ளனர்.

    • ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதமாக இருந்தது.
    • வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என எதற்கும் ஒத்துழைக்கவில்லை.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. என்ற போதிலும் இங்கிலாந்து ஆடுகளத்திற்குரிய ஸ்விங் மிகப்பெரிய அளவில் இல்லை. பேட்டிங்கிற்கு சொர்க்கமாக இருந்தது.

    பேஸ்பால் எனச் சொல்லிக் கொண்டு ஆடுகளத்தை பிளாட்டாக்குவதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ், ஆடுகளத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    இதுபோன்ற ஆடுகளத்தில் யார் பந்து வீச்சாளராக விரும்புவார்கள். இங்கிலாந்து கிரிக்கெட்டில் இது 3ஆவது மிகவும் மோசமான பிளாட் பிட்ச்.

    ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டியை இந்தியா- இங்கிலாந்து எட்ஜ்பாஸ்டன் போட்டியுடன் ஒப்பிடும்போது இரண்டு வேறுபட்ட விளையாட்டாக தெரிகிறது. இந்தியா- இங்கிலாந்து தொடர் நல்லத் தொடராக செல்லும் போன்று தெரிகிறது. தற்போது 1-1 என இருக்கிறது. அதிக அளவில் போட்டியை பார்க்கவில்லை. இருந்தபோதிலும் ஸ்கோர் பார்த்தேன்.

    இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    • முதல் செட்டை 1-6 என இழந்தார்.
    • அடுத்த 3 செட்களையும் 6-4 எனக் கைப்பற்றினார்.

    விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆண்களுக்கு ஒற்றையர் பிரிவில் நம்பர் 6 வீரரான ஜோகோவிச், 11ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக்ஸ் டி மினார்-ஐ எதிர்கொண்டார்.

    முதல் செட்டை மினார் 6-1 என எளிதாக வென்றார். பின்னர் ஜோகோவிச் அபாரமாக விளைாயடினார். இதனால் அடுத்த 3 செட்களையும் 6-4 எனக் கைப்பற்றி 3-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலியுதியில் சிலிச்சை கோபோல்லி 6-4, 6-4, 6(4)-7(7), 7(7)-6(3) என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சம்போனோவா, அனிசிமோவா, பென்சிக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    • 43 ஓவர்கள் மட்டுமே விளையாடிய ஜிம்பாப்வே 170 ரன்னில் சுருண்டது.
    • சீன் வில்லியம்ஸ் மட்டும் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே இடையிலான 2-ஆவது டெஸ்ட் நேற்று புலவாயோவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா கேப்டன் வியான் முல்டரின் முச்சதத்தால் (367 நாட்அவுட்) 5 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்கள் குவித்து, இன்றைய 2அவது நாள் 2ஆவது செசன்ஸ் போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே 170 ரன்னில் சுருண்டது. 456 ரன்கள் பின்தங்கியுள்ளதால் தென்ஆப்பிரிக்கா பாலோ-ஆன் கொடுத்துள்ளது. இதனால ஜிம்பாப்வே தொடர்ந்து 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய இருக்கிறது.

    சீன் வில்லியம்ஸ் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் அடித்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பிரேனெலன் சுப்ராயன் 4 விக்கெட்டும் முல்டர் மற்றும் கொடி யூசுப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 114 ஓவர்கள்தால் பேட்டிங் செய்திருந்தபோதிலும் டிக்ளேர் அறிவித்துள்ளார்.
    • இன்னும் 10 ஓவர்கள் விளையாடியிருந்தால் 400 ரன்களை கடந்திருக்கலாம்.

    தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே இடையிலான 2ஆவது டெஸ்ட் புலவாயோவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது, தொடக்க வீரர் ஜோர்சி 10 ரன்னிலும், செனோக்வான் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 24 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது. 3ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய வியான் முல்டர் அபாரனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    116 பந்தில் சதம் விளாசிய முல்டர், 167 பந்தில் 150 ரன்னைத் தொட்டார். 214 பந்தில் இரட்டை சதம் அடித்தார். இந்த போட்டியில்தான் கேப்டன் பதவியை முதன்முறையை ஏற்றுக்கொண்டார். கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியிலேயே இரட்டை சதம் விளாசி அசத்தினார்.

    அதோடு நிற்காமல் நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமல் 264 ரன்கள் விளாசினார். தென்ஆப்பிரிக்கா 88 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 465 ரன்கள் குவித்திருந்தது. பிரேவிஸ் 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. முல்டர் 287 பந்தில் முச்சதம் விளாசினார். கேப்டனாக முதல் போட்டியிலேயே முச்சதம் அடித்தவர் என்ற சிறப்பை பெற்றார். தொடர்ந்து 350 ரன்னையும் (324) கடந்தார். இதனால் லாராவின் 400 ரன் இன்ற இமாலய சாதனையை கடப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அவர் 367 ரன்கள் எடத்திருக்கும்போது, தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக முல்டர் அறிவித்தார். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இன்னும் 34 ரன்கள் அடித்திருந்தால் லாராவின் சாதனையை முறியடித்திருக்கலாம். அவர்தான் கேப்டன். இதனால் டிக்ளேர் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். 3 நாட்களுக்கு மேல் இருந்த போதிலும், அணியின் நலனுக்கான டிக்ளேர் செய்துள்ளார்.

    லாரா 2004-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் அடித்தது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்னாக இருந்து வருகிறது.

    மேத்யூ ஹைடன் 2003-ல் 380 ரன்களும், லாரா 1994-ல் 375 ரன்களும், ஜெயவர்த்தனே 2006-ல் 374 ரன்களும், கேரி சோபர்ஸ் 1958-ல் ஆட்டமிழக்காமல் 365 ரன்களும் அடித்துள்ளனர்.

    ×