என் மலர்
கிரிக்கெட் (Cricket)

எனக்கு பிடித்தமான பத்திரிகையாளரை எங்கே?- செய்தியாளரை ட்ரோல் செய்த சுப்மன் கில்
- இதற்கு முன்னதாக எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணி வெற்றி பெற்றதே கிடையாது.
- சுப்மன் கில் தலைமையில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுப்மன் கில் (269, 161) இரண்டு சதங்கள் அடிக்க முகமது சிராஜ் (7), ஆகாஷ் தீப் (10) அபாரமாக பந்து வீசினார்.
இந்திய டெஸ்ட் அணி இதற்கு முன்னதாக எட்ஜ்பாஸ்டனில் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிளில் வெற்றி பெற்றதே கிடையாது. இதுதான் முதல் வெற்றி.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பிரிட்டிஷ் செய்தியாளர் ஒருவர் சுப்மன் கில்லிடம் எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணி வெற்றி பெற்றதே இல்லையே? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய வெற்றிக்குப்பின் சுப்மன் கில் பத்திரியைாளர்களை சந்தித்தார். அப்போது, என்னுடைய பிடித்தமான பத்திரிகையாளரை பார்க்க முடியவில்லையே? அவர் எங்கே?. எனக் கூறியதுடன், பத்திரிகையாளர்கள் அமர்ந்து இருக்கும் இடத்தை சிறிது நேரம் உற்றுப்பார்த்தார்.
பின்னர் எட்ஜ்பாஸ்டன் வெற்றி குறித்து கூறுகையில் "இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவும், நான் உண்மையிலேயே வரலாறு மற்றும் புள்ளி விவரங்களை பார்ப்பதில்லை எனத் தெரிவித்திருந்தேன். கடந்த 56 வருடங்களில் நாங்கள் இங்கே மாறுபட்ட அணிகளுடன் 9 போட்டிகளில் விளையாடியுள்ளோம்.
இங்கிலாந்திற்கு தற்போது சிறந்த அணியாக வந்துள்ளோம் என நம்புகிறோம். இங்கிலாந்தில் மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தும் திறன் எங்களிடம் உள்ளது. தொடரையும் வெல்லக்கூடிய திறன் உள்ளது. சரியான முடிவை எடுத்து போராட முடியும் என்றால், இது எங்களுக்கு எப்போதும் ஞாபகத்தில் இருக்கக் கூடிய ஒரு போட்டியாக இருக்கும்" என்றார்.






