என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முதல் இன்னிங்சில் இரட்டை சதம்: 2ஆவது இன்னிங்சில் சதம்- சுப்மன் கில் அபாரம்..!
    X

    முதல் இன்னிங்சில் இரட்டை சதம்: 2ஆவது இன்னிங்சில் சதம்- சுப்மன் கில் அபாரம்..!

    • 2ஆவது இன்னிங்சில் 57 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • 129 பந்தில் சதம் விளாசினார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் விளாசினார்.

    அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்கள் குவித்தது. 180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. கருண் நாயர் 2ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்ததும் சுப்மன் கில் களம் இறங்கினார்.

    இவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 57 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 129 பந்தில் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் சதம் விளாசினார். இதன்மூலம் முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், 2ஆவது இன்னிங்சில் சதமும் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

    Next Story
    ×