என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில் - விராட் கோலி வாழ்த்து
- இப்போட்டியில் கில் முதல் இன்னிங்சில் 269 ரன்கள் குவித்த கில் 2 ஆவது இன்னிங்சில் 161 ரன்கள் குவித்தார்.
- ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கில் படைத்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
180 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை ஆடிய இந்தியா 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 269 ரன்கள் குவித்த கில் 2 ஆவது இன்னிங்சில் 161 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கில் படைத்தார்.
மேலும், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 2வது இடத்தை சுப்மன் கில் பிடித்தார். முதலிடத்தில் இங்கிலாந்தின் கிரஹாம் கூச் உள்ளார் (456 VS IND, 1990)
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 430 ரன்கள் குவித்த கேப்டன் கில்க்கு முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோலி தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "அருமை Star Boy. வரலாற்றை மாற்றும் ஒரு ஆட்டத்தின் தொடக்கம் மேலும் மேலும் வளரட்டும். எல்லா பாராட்டுகளுக்கும் நீ தகுதியானவன்" என்று தெரிவித்துள்ளார்.