என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன் - அதிவேக சதம் அடித்த பின்பு பேசிய வைபவ் சூர்யவன்ஷி
- வைபவ் சூர்யவன்ஷி 78 பந்தில் 13 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார்.
- 52 பந்தில் அதிவேக சதம் அடித்து சூர்யவன்ஷி அசத்தினார்.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 78 பந்தில் 13 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார். 52 பந்தில் சூர்யவன்ஷி சதம் விளாசினார்.
இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் 53 பந்தில் சதம் அடித்திருந்தார்.
மேலும், 10 சிக்சர்கள் அடித்து ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 35 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்திருந்தார்.
அதிவேக சதம் விளாசி 143 ரன்கள் குவித்த பின்பு பேசிய வைபவ் சூர்யவன்ஷி, "சுப்மன் கில் 100 மற்றும் 200 ரன்கள் எடுத்தபோது அவரிடமிருந்து எனக்கு நிறைய உத்வேகம் கிடைத்தது. அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன். 50 ஓவர்களும் களத்தில் நிலைத்து நின்று விளையாட முயல்வேன். எவ்வளவு அதிக ரன்கள் குவிக்கிறேனோ, அணிக்கு அவ்வளவு சாதகம் தான்" என்று தெரிவித்தார்.