என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இளையோர் கிரிக்கெட்டில் அதிவேக சதத்தை பதிவு செய்தார் வைபவ் சூர்யவன்ஷி
    X

    இளையோர் கிரிக்கெட்டில் அதிவேக சதத்தை பதிவு செய்தார் வைபவ் சூர்யவன்ஷி

    • பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் 53 பந்தில் சதம் அடித்திருந்தார்.
    • சூர்யவன்ஷி 52 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 78 பந்தில் 13 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார்.

    52 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் 53 பந்தில் சதம் அடித்திருந்தார்.

    மேலும், 10 சிக்சர்கள் அடித்து அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 35 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்திருந்தார்.

    Next Story
    ×