என் மலர்
விளையாட்டு
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.
- டெல்லி டேர்டெவில்ஸ் அணி அவரை Trade செய்யலாம் எனத் தகவல்.
கேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிகெட் வீரரான சஞ்சு சாம்சன் நீண்ட காலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு அவருக்கும், தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேற இருப்பது ஏறக்குறைய உறுதியானது. ஆனால், எந்த அணிக்கு செல்வார் என்பதில் மர்மம் நீடித்து வந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை வாங்க விரும்புவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் டெல்லி அணி அவரை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரிஸ்டன ஸ்டப்ஸை ராஜஸ்தானுக்கு கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் உலா வருகின்றன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சனை கொடுத்துவிட்டு, ஸ்டப்சை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் Uncapped வீரர் ஒருவரையும் கேட்டுள்ளது. ஆனால், டெல்லி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
- இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் நாளை இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- இந்தியா முதன்முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. நாளை இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பொதுவாக இந்திய ஆண்கள் அணி விளையாடும்போது, ரசிகர்கள் அதிக அளவில் நேரில் வந்து பார்ப்பார்கள். பெண் ரசிகர்களும் அதிக அளவில் திரள்வார்கள். இதனால் வீரர்களிடம் டிக்கெட் வாங்கித் தருமாறு நெருங்கிய வட்டாரங்கள் வேண்டுகோள் விடுக்கும். ஆனால், பெண்கள் கிரிக்கெட்டிற்கு அவ்வாறு கூடுவது கிடையாது.
ஆனால், இந்த இறுதிப் போட்டியை பார்க்க ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்திய வீராங்கனைகளிடம் டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்யுமாறு பலர் அன்புத்தொல்லை கொடுப்பதாக ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி கிரிக்கெட்டில் மட்டுமல்ல, உலக கோப்பை இறுதி போட்டி டிக்கெட்டிற்கும்தான். இது சிறந்ததது. கிரிக்கெட் வளர்ச்சிக்கு சாதகமான அறிகுறி.
"தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறும்போது, நாம் அதிகமான மாற்றங்களை கிரிக்கெட்டில் பார்க்கலாம். கிரிக்கெட் இன்னும் அதிக வளர்ச்சியை பெறும். அது சர்வதேச அளவில் மட்டுமல்ல. உள்ளூர் அளவில் வளர்ச்சி பெறும். பெண்கள் கிரிக்கெட் இன்றும் அதிகமான சீரியஸ் தன்மை மற்றும் அதிக பார்வையாளர்களை பெறுவதை பார்க்க, நாங்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
- அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
புதுடெல்லி:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த 30-ம் தேதி நடைபெற்ற 2-வது அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நாளை நவி மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை தொடரின் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இரு அணிகளும் முதல் முறையாக உலகக் கோப்பை வெல்லும் முயற்சியில் இருப்பதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
- ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென், அயர்லாந்து வீரர் நகாட் நுகெயன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய நுகெயன் 21-17, 14-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு போட்டியில் பின்லாந்து வீரர் காலே கோலிஜோனன் 19-21, 21-12, 22-20 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டியைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
- இதன் அரையிறுதி சுற்றில் கனடா வீராங்கனை எம்போகா வெற்றி பெற்றார்.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் கனடாவின் விக்டொரியா எம்போகா, சக நாட்டு வீராங்கனையான லெய்லா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.
இதில் 2-6 என முதல் செட்டை இழந்த எம்போகா அடுத்த இரு செட்களில் அதிரடி காட்டி 6-3, 6-2 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கனடாவின் எம்போகா, ஸ்பெயினின் கிறிஸ்டினா புஸ்கா உடன் மோதுகிறார்.
- புனேரி பல்தான் அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
- ப்ரோ கபடி லீக்கில் பெங்களூரு அணிக்காக 64 Tackle புள்ளிகளை தமிழக வீரர் தீபக் சங்கர் எடுத்தார்.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடைபெற்றது. லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்த நிலையில் தபாங் டெல்லி, புனேரி பல்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி அணியும், புனேரி பல்தான் அணியும் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தன. முதல் பாதி முடிவில் டெல்லி அணி 20-14 என முன்னிலை பெற்றது.
இறுதியில், தபாங் டெல்லி அணி 31-28 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
இந்நிலையில் புரோ கபடி லீக்கில் பெங்களூரு அணிக்காக 64 Tackle புள்ளிகள் எடுத்து பலரையும் கவர்ந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் தீபக் சங்கர், இந்த சீசனின் புதிய இளம் வீரருக்கான விருதை வென்று அசத்தியுள்ளார்.
- அபிஷேக் சர்மா மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
- மற்ற பேட்ஸ்மேன்கள் அபாரமாக ஆடினால் மட்டுமே ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும்.
ஹோபர்ட்:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.
5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் (கான்பெரா) மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹோபர்ட்டில் நாளை (2-ந் தேதி) நடைபெறுகிறது. நேற்றைய போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி பதிலடி கொடுத்து சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
அபிஷேக் சர்மா மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற பேட்ஸ்மேன்கள் அபாரமாக ஆடினால் மட்டுமே ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும். அதே நேரத்தில் பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது. நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்த ஆட்டத்திலும் வென்று 2-0 என்ற முன்னிலையை பெறும் வேட்கையில் உள்ளது.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் 6-7 (5-7), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டி மினாரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- தோனி ஓய்வு குறித்து கடந்த 6 -7 ஆண்டுகளாக நிறைய வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது.
- போன சீசனில் அதிகமாக களத்தில் இருந்து அவரால் விளையாட முடியாது என பயிற்சியாளர் பிளெமிங் கூறியிருந்தார்.
ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக பட்சமாக மும்பை, சென்னை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை பேசப்பட்டு வரும் பெயராக எம்எஸ் தோனி இருக்கிறது. இந்திய அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அவர் சிஎஸ்கே மூலமும் பல ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் அவரது ஓய்வு குறித்து கடந்த 6 -7 ஆண்டுகளாக நிறைய வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த வதந்தியால் அவரது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது தான் மிச்சம். இருந்தாலும் அவரது பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கம் இல்லாததால் பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக போன ஆண்டு அதிக என்றே சொல்லலாம்.
போன சீசனில் அதிகமாக களத்தில் இருந்து அவரால் விளையாட முடியாது என பயிற்சியாளர் பிளெமிங் கூறியிருந்ததால் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் இடையே எழுந்து வருகிறது. ஏனென்றால் தற்போது அவருக்கு 44 வயதாகிறது.
இந்நிலையில் அவர் அடுத்த ஆண்டு விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு புகைப்படத்தை பதிவிட்டு சூசகமாக தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
2020-ம் ஆண்டு IPL-ன் கடைசி லீக் போட்டியின்போது "இதுதான் நீங்க மஞ்சள் ஜெர்சியில் விளையாடும் கடைசி போட்டியா?" என்ற கேள்விக்கு 'கண்டிப்பாக இல்லை' என பதிலளித்திருந்தார் சிஎஸ்கே கேப்டன் தோனி. அந்த புகைப்படத்தை வெளியிட்ட சிஎஸ்கே marks 5 years of #DefinitelyNot என பதிவிட்டிருந்தது.
இந்த பதிவை வைத்து அடுத்த ஆண்டும் தோனி விளையாடுவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
- கடந்த 20 ஆண்டுக்கு மேலாக டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருபவர்.
- இரட்டையர் பிரிவில் இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
புதுடெல்லி:
டென்னிஸ் உலகின் இரட்டையர் பிரிவில் தலைசிறந்து விளங்கி வருபவர் ரோகன் போபண்ணா. இரட்டையர் பிரிவில் இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
கடந்த 20 ஆண்டுக்கு மேலாக டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருபவர்.
43வது வயதில் ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் பட்டம் பெற்று சாதனை புரிந்தவர். 2017ம் ஆண்டில் பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையரில் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியவர்.
இந்நிலையில், ரோகன் போபண்ணா தனது ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போபண்ணா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், குட்பை, ஆனால் இது முடிவல்ல என பதிவிட்டுள்ளார்.
தற்போது நடந்து வரும் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் தொடரின் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் வெளியேறினார்.
- 2 நாள் ஓய்வுக்குப் பிறகு இறுதிப்போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஓய். படேல் ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது.
- இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் முதல் முறையாக கோப்பையை வெல்ல உள்ளனர்.
நவிமும்பை:
13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தொடங்கியது.
இந்தியா, இலங்கையில் நடைபெற்ற இந்த போட்டியில் 8 நாடுகள் பங்கேற்றன. கடந்த 26-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகியவை முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின. இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.
29-ந்தேதி கவுகாத்தியில் நடந்த முதல் அரை இறுதியில் தென்ஆப்பிரிக்கா 125 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடைபெற்ற 2-வது அரை இறுதியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும் தோற்கடித்தன.
2 நாள் ஓய்வுக்குப் பிறகு இறுதிப்போட்டி நவிமும் பையில் உள்ள டி.ஓய். படேல் ஸ்டேடியத்தில் நாளை (2-ந்தேதி) மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்க அணிகள் சாம்பியன் பட்டத்துக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.
இறுதிப்போட்டிக்கு முன் இரு அணி கேப்டன்களும் போட்டோஷூட் நடத்துவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் நாளை நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் அணி கேப்டனும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி கேப்டனும் கோப்பையுடன் போட்டோஷூட் எடுத்துக் கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்களை ஐசிசி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று நாடே ஆவலுடன் எதிா்பார்க்கிறது.
3-வது தடவையாக இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.இதற்கு முன்பு 2005-ல் ஆஸ்திரேலியாவிடமும் (98 ரன்), 2017-ல் இங்கிலாந்திடமும் (9 ரன்) தோற்று கோப்பையை இழந்தது.
இந்திய அணி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு பதிலடி கொடுத்து சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 339 ரன் இலக்கை எடுத்து சாதனை படைத்ததால் இறுதிப் போட்டியில் இந்தியா நம்பிக்கையுடன் விளையாடும்.
பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா (1 சதம், 2 அரை சதத்துடன் 389 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (1 சதம், 1 அரை சதத்துடன் 268 ரன்), கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர் (2 அரை சதத்துடன் 240 ரன்), ரிச்சா கோஷ் (1 அரை சதத்துடன் 201 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் தீப்தி சர்மா (17 விக்கெட்), ஸ்ரீசரணி (13 விக்கெட்) , கிராந்தி கவூட் (9 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
லாரா வால்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் முதல் தடவையாக உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. அந்த அணி முதல் முறையாக இறுதி ஆட்டத்தில் ஆடுகிறது.
இந்தியாவை ஏற்கனவே வீழ்த்தி இருப்பதால் நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா சமபலத்துடன் திகழ்கிறது.
இரு அணிகளும் 34 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 20-ல், தென் ஆப்பிரிக்கா 13-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.
- பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
பாரிஸ்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் அடுத்த இரு செட்களை 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த தோல்வியின் மூலம் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.






