என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலகக் கோப்பை வென்றால்... இந்திய அணிக்கு காத்திருக்கும் மெகா பம்பர் பரிசு?
- அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
புதுடெல்லி:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த 30-ம் தேதி நடைபெற்ற 2-வது அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நாளை நவி மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை தொடரின் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இரு அணிகளும் முதல் முறையாக உலகக் கோப்பை வெல்லும் முயற்சியில் இருப்பதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.






