என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கனடா வீராங்கனை
    X

    ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கனடா வீராங்கனை

    • ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதன் அரையிறுதி சுற்றில் கனடா வீராங்கனை எம்போகா வெற்றி பெற்றார்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் கனடாவின் விக்டொரியா எம்போகா, சக நாட்டு வீராங்கனையான லெய்லா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.

    இதில் 2-6 என முதல் செட்டை இழந்த எம்போகா அடுத்த இரு செட்களில் அதிரடி காட்டி 6-3, 6-2 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கனடாவின் எம்போகா, ஸ்பெயினின் கிறிஸ்டினா புஸ்கா உடன் மோதுகிறார்.

    Next Story
    ×